

இந்தியாவின் தென்கோடியில் முக்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் (Kanyakumari Bhagavathi Amman Temple) உலகப் புகழ்பெற்ற சக்தி பீடமாகும். இந்த கோவில் கன்னி வடிவில் அருளும் பகவதி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இங்குள்ள அம்மனின் மூக்குத்தி மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் இது 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பரசுராமரால் நிறுவப்பட்டு பின்னர் பாண்டிய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது. இது மனிதர்களின் வினைப்பயனை நீக்கும் தலமாக கருதப்படுகிறது.
இது, இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா சங்கமிக்கும் இடமாகும். பாணாசூரனை வதம் செய்த கன்னிப் பெண்ணாக தவம் இருந்த அம்மனை போற்றும் இடம். பரசுராமன் பிரதிஷ்டை செய்த 108 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.
அம்மனின் ஒளி தரும் மூக்குத்தி மனிதனின் வினைப்பயனை நீக்கும் சக்தியாகும். உற்சவ மூர்த்திகளின் பெயர் தியாக சௌந்தரி பால சௌந்தரி. புனித தீர்த்தம் பாபநாச தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
கிழக்கே வங்காள விரிகுடா மேற்கு அரபிக்கடல் தெற்கில் இந்திய பெருங்கடல் சூழ அமைந்துள்ளது. இந்தக் கோவில் வழிபாடுகள் சங்கராச்சாரியார் சங்கர மடம் மூலமாக நடக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் 51 சக்தி பீடங்களில் தேவியின் முதுகுப்பகுதி விழுந்த இடம் ஆகும். அம்மன் அணிந்திருக்கும் மூக்குத்தி யோக சக்தியின் வெளிப்பாடாகும். குமரி அம்மனாக இருப்பதால் இந்த ஊருக்கு கன்னியாகுமரி என பெயர் ஏற்பட்டது.
பாணாசூரன் என்ற அரக்கனை விஜயதசமி அன்று தேவி வதம் செய்தார். அம்மன் தெற்கு கடற்கரையை பாதுகாக்கும் அரணாக செயல்பட்டு வருகிறாள். மூக்குத்தி ஒளியானது கலங்கரை விளக்கத்தின் ஒளிக்கு சமமானது. இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் கப்பலில் வந்த மாலுமிகள் அம்மனின் மூக்குத்தியின் வெளிச்சத்தை கலங்கரை விளக்கம் என கருதி கப்பலை பாறையில் மோதி விட்டார்கள். அன்றிலிருந்து அம்மனின் இந்த வாசல் அடைக்கப்பட்டுள்ளது.
கடற்கரையை ஒட்டி இந்த கோவில் இருந்தாலும் இந்த கோவில் கிணற்றில் இருக்கும் நீர் மிகவும் சுவையாக இருக்கும். மே ஜூன் மாதங்களில் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். செப்டம்பர், அக்டோபர் மாதம் நவராத்திரி ஒன்பது நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த இடத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். காலை நாலு மணி முதல் 12 மணி வரை மதியம் 4 மணி முதல் 8:30 மணி வரை நடை திறந்து இருக்கும். முன்னால் இந்த பகுதியில் தானிய காடாக இருந்தது. அக்காலத்தில் இந்த பகுதியும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. மன்னராட்சி நடைபெற்றது.
பானாசூரன் என்ற அரக்கன் தனக்கு நிகர் யாருமில்லை என அகம்பாவத்தில் இருந்தான். அவன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து நிறைய வரங்களை பெற்றவன். மனிதர்கள் தேவர்கள் விலங்குகள் மூலம் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என வரம் வாங்கி இருந்தான். இந்த அரக்கன் உமாதேவியை கூட மதிப்பது இல்லை. இந்த அரக்கன் மனிதர்கள் தேவர்கள் ரிஷிகள் முனிவர்கள் நவகிரகங்கள் என அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அனைவரும் ஒன்று சேர்ந்து அன்னையிடம் முறையிட்டார்கள்.
அன்னை ஏழு கன்னியர்களை உருவாக்கி அவர்களிடம் ஆயுதங்களை கொடுத்து அனுப்பினாள். அந்த ஏழு கன்னியர்களும் (கன்னி - பெண்) அந்த அசுரனை எதிர்த்து போரிட்டார்கள். அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த ஏழு கன்னிகளும் தேவலோகம் சென்றால் தங்களுக்கு அவமானம் என கருதி ஏழு கன்னியர்களும் சோட்டானிக்கரை, கொடுங்கலூர், செங்கனூர், மண்டைக்காடு போன்ற பகுதிகளில் கோவில் கொண்டனர். அதன் பின்னர் அன்னை தேவி பாணாசூரனை விஜயதசமி அன்று வதம் செய்தாள். அவனை வதம் செய்வதற்காக குமரியில் தவம் மேற்கொண்டார். அன்று முதல் இன்று வரை குமரியாகவே காட்சி அளிக்கிறார். நாகர்கோவிலில் இருந்து 20 கிலோமீட்டர் நெல்லையிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் கன்னியாகுமரி உள்ளது.
கருவறை கிழக்கு நோக்கி இருந்தாலும் வடக்கு வாசல் தான் பொதுமக்கள் பார்வைக்காக பயன்பாட்டில் உள்ளது. கோவில் செவ்வக வடிவில் அமைய பெற்றுள்ளது. கோவிலில் முன் மண்டபத்தில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மேற்கே கொலு மண்டபம் உள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் டூரிஸ்ட்கள் அதிகமாக இங்கு வருகை தருகிறார்கள். இங்குள்ள கடலில் புனித நீராடி அம்மனை வழிபடுகிறார்கள். இந்த அம்மனை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். அம்மனின் ஒளி மிகுந்த மூக்குத்தியை தரிசிப்பது மக்களுக்கு நன்மை தரும். பார்வதி தேவியின் அம்சமாக குமரி அம்மன் செயல்பட்டு வருகிறார்.
இந்த இடத்தில் கன்னியாக தவம் இருந்த தேவியை சிவன் மணக்க எண்ணினார். அப்படி சிவன் தேவியை மணந்தால் அசுரனை தேவி அழிக்க முடியாது என கருதிய தேவர்கள் நாரதரிடம் முறையிட்டார்கள். நாரதர் சேவல் வடிவத்தில் வந்து அதிகாலை கூவியதால் சிவனின் வருகை தடைப்பட்டது. அதனால் சிவன் அருகில் உள்ள சுசீந்திரம் கோவிலில் தாணுமாலயனாக வீற்றிருக்கிறார்.
சிவன் சூரிய உதயத்திற்கு முன்பாக வந்து தேவியை மணப்பதாக இருந்தது . இதை அறிந்த நாரதர் சேவல் உருவம் எடுத்து அதிகாலை முன்பாக கூவி விட்டார். இதன் மூலம் திருமணம் தடைபட்டது. இதனால் கோபமடைந்த தேவி தான் சமைத்து வைத்திருந்த அனைத்து உணவுகளையும் கடற்கரை பக்கம் வீசிவிட்டார்கள். எனவே இந்த கடற்கரை பகுதி மணல் முழுவதும் வண்ணம் வண்ணமாக காட்சியளிக்கும். இன்றும் கடற்கரை மணல் பல வண்ணங்களில் காணப்படுகிறது. அன்றிலிருந்து இன்று வரை தேவி குமரி ஆகவே இந்த இடத்தில் தங்கி விட்டாள்.