

மனிதன் பிறக்கும்போது ஆசைகளுடன்தான் பிறக்கிறான். நம்பிக்கை நிலைகொண்டு இருக்கும் போதுதான் ஆசைகள் நிறைவேறும்.
ஆக ஆசைகள், நம்பிக்கைகள் மனிதனின் இரண்டு கண்கள்.
நான்தான் கடவுளா?
என்ன பைத்தியக்காரத்தனம்?
அது எப்படி நான் கடவுளாக முடியும்? இப்படியாக நாம் நம்மை நம்பாததால் நம்மிடையே பல நம்பிக்கைகளை வெளியில் இருந்து விதைக்கத் தொடங்கினார்கள்.
இப்படி உருவானதுதான் மதங்கள்.
மதம் சார்ந்த நம்பிக்கைகள்.
நம்மை நம்புவது என்பது எப்படி சாத்தியம்? அது முடியாதது?
இப்படியாகத்தானே 99.99% நம்பினார்கள். அவர்கள்தான் ஆளப்படுகிறார்கள். மீதமுள்ள 0.01% தன்னை நம்புபவர்கள்!
ஆகவே ஆள்கிறார்கள்!
ஆசைகள் இல்லாமல் நாம் வாழ்வது இயற்கைக்கு மாறானது. எளிதாக புரிந்தும் கொள்ளும்படி சொல்கிறேன்.
அதாவது நாம் கடவுள் நம்பிக்கைக்கு முரணாக செயல்படுகிறோம். காரணம் ஆசைகள்தான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
அந்த ஆசைகளுக்கு அடிமையாகாமல் அவைகளை பிரித்து மேய்வதில்தான் நம்முடைய "அறிவு" முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
அவர்களே இன்று அறிஞர்களாக, தத்துவஞானிகளாக, விஞ்ஞானிகளாக வளம் வருகின்றனர்.
ஆசையை துறந்து வாழ்வது வாழ்க்கை இல்லை. மாறாக ஆசைகளை வழிநடத்தி அதன் மூலம் உயர்வு காண்பதுதான் இயற்கை விதி.
கற்காலம் முதல் கொண்டு மனிதன் தன் உறைவிடத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது.
அந்த பயத்திற்கு காரணம் பிற உயிர்களில் இருந்து வந்த அச்சுறுத்தல். அப்படியாக வந்தது "வழிபாடு". இவ்வாறு பிறந்ததே "மதம்" எனும் மார்க்கம்.
மனதின் பரிமாண வளர்ச்சி மனிதனை பல மடங்கு வளர்ச்சி அடைய செய்து இருக்கிறது .ஆனால் அடங்க மறுக்கிறது. மனிதன் அவைகளை கொல்லத் துடிக்கிறான்.
மனிதன் அதனால் மனதிற்கு அடிமை ஆகிறான். அதிலிருந்து மீள அதிகாரத்தை பற்றிக்கொள்ள பாடுபடுகிறான்.
அடிமைத்தனத்தை ஆதரிக்கிறான். இதன் விளைவுதான் அறிவினுடைய அழிவு.
'AI' வந்துவிட்டது. ஆற்றல் குறைந்துவிட்டது. உழைப்பின் உடைய கோட்பாடுகள் மாறிவிட்டன.
மனிதர்களுடைய மனங்கள் சுற்றித் திரியும் zombie என்கிற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
நம்முடைய ஈடுபடுதல் (engagement) குறைய தொடங்கும் போது அங்கே சிக்கல் (entanglement) வந்துவிடும்!
அதுவே நம்மை மனதை சரியாக வேலை வாங்காமல் இருந்தால் அது நமக்கு குந்தகத்தை விளைவிக்கும்.
ஒரு ஒழுங்கு கட்டுப்பாடு (Arrangement) இல்லாமல் மனம்போன போக்கில் வாழ்வது நம்மை முதல் குற்றவாளி (arraignment) ஆக்க வழிவகுக்கும். அதன் விளைவே 'போதை கலாச்சாரம்', 'மது அடிமைகள்'.
பலதரப்பட்ட லகிர வஸ்துக்கள்" வந்து விட்டன. அதுவே 'உணவு' என்று மாறும்போது நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்கிற சிந்தனையே இல்லாமல் போய்விடும்.
"ஆடை இல்லாத மேனி
அவன் பெயர் அந்நாளில் ஞானி
இன்றோ அது ஒரு ஹாபி
எல்லோரும் இனிமேல் பேபி".
என்று பாட வேண்டியதுதான்.
இதுவே ஹாபி என்று ஆகிவிட்ட பிறகு என்னத்தைச் சொல்ல? என்னத்தைச் செய்ய?
பரப்பிரம்மா! இவ்வுலகம் உன் கையில்,உன் திருவிளையாடலில்...
உன்னுடைய பல விளையாட்டுகளில் நாங்கள் குழம்பி போய் இருக்கிறோம். ஆனால் இப்போது இருப்பது மயக்கம். இந்த மயக்கம் தெளிய நல்ல உண்மையான, நேர்மையான தைரியமுள்ள, மனங்களை மானுடம் எப்போது பெறும்?
அப்போதுதான் துன்பங்கள் குறைந்து இன்பங்கள் சூழ்ந்து, போர் மேகங்கள் கலைந்து, அமைதியான வெண் மேகங்கள் சூழ்ந்து ஒரு ஆழ்ந்து பரந்துபட்ட செழுமையான மன வெளி பிறக்கும்.
அதை நோக்கிய பயணத்தில்தான் இன்று ஆன்மீகவாதிகள், தத்துவ வாதிகள் மனிதர்களை அரசியல் படுத்தியும் வந்து கொண்டிருக்கிறார்கள்.
"சகிப்புத்தன்மை" என்பது நம்மை நாமே ஆட்கொள்வது. "பொறுமை" என்பது பிறறின் தவற்றை மன்னித்து வாழும் ஒரு தவ நிலை. இவை இரண்டும் இருந்தால் கிடைப்பதோ "பெருமை" என்னும் பெரும் கீதம்.
அந்த கீதத்தை எல்லோரும் இசைக்க, கேட்டு பரவசப்பட காத்திருக்கிறோம்.