

நாம் காணும் கனவுகள் நல்லதாக இருந்தால் சரி. கெட்தாக இருந்தால் என்ன செய்வது? அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை எப்படி குறைப்பது?
கெட்ட கனவுகளும் நல்ல பலன்களும்:
நமக்கு நெருக்கமானவர் அல்லது நண்பர் இறந்து போவதாக கனவு கண்டால் அவரது ஆயுள் நீடிக்கும் என்று அர்த்தம்.
உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்தார் கனவு கண்டால் உங்களுக்குப் செல்வம் , செல்வாக்கு அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.
பாம்பு கடித்து ரத்தம் கொட்டுவது போல் கனவு கண்டால் உங்களின் திறமைகள் வெளிப்பட்டு உங்கள் வாழ்க்கை நிலை உயரப் போகிறது என்று அர்த்தம்.
கனவில் நெருப்பை கண்டால் உங்களுக்குப் பெருஞ் செல்வம் சேரப்போகிறது என்று அர்த்தம்.
தெய்வங்களை திருமண கோலத்தில் கண்டால் புதையல் கிடைக்கும்.
ஆமை மீன் தவளை போன்ற நீர் வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும்.
கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும்.
இறந்தவருடன் பேசுவது போல் கனவு கண்டால் பதவி, லாபம் கூடி வரும்.
கெட்ட கனவுகளைத் தடுக்க என்ன செய்யலாம்?
பாம்புகள் மற்றும் விஷஜந்துக்கள் நம் கனவில் தொடர்ந்து பயமுறுத்தினால் கருடன் மீது இருக்கும் விஷ்ணுவின் படத்தை பூஜை செய்து வழிபட்டால் விஷ ஜந்துக்கள் கனவுகள் வராது.
நோய் வியாதி சம்பந்தமான கனவுகள் வந்தால் தன்வந்திரி மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபட வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடும் நல்லது.
பேய் பிசாசு மற்றும் நம் காரியங்கள் தடை படுவது போல் கனவு கண்டால் பிள்ளையாரை வழி பட வேண்டும். பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து அவரை வழிபட்டால் இது போன்ற கெட்ட கனவுகள் நம்மை அண்டாது.
பணக்கஷ்டம், பண இழப்பு, பண நஷ்டம் போன்ற கனவுகளைத் கண்டால் மகாலக்ஷ்மியை வழிபட வேண்டும்.
படிப்பு தடைபடும் படியான கனவு வந்தால் சரஸ்வதி தேவி மற்றும் ஹயக்ரீவர் மந்திரங்களை கூறி வழி படலாம்.
காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவதன் மூலம், கெட்ட கனவுகளைத் தடுக்கலாம்.
கனவுகள் வராமலிருக்க இப்படிச் செய்யலாம்:
நீங்கள் தூங்கும் இடத்தில் தலைக்குமேல் அரிசி போடக்கூடிய படியில் நிறைய உப்பு எடுத்துக் கொண்டு அதன் மீது ஒரு பச்சைக் கற்பூரத்தை வைக்கவும்.
அருகே ஒரு எலுமிச்சை பழத்தை வைத்துக் கொள்ளவும். இதை நாம் தூங்கும் போது தலை மாட்டுக்கு சற்று மேலே கை இடிக்காமல் வைத்துக் கொள்ளவும்.
மறுநாள் காலையில் அதை செடியில் போட்டு விடலாம். உப்பும் எலுமிச்சையும் எதிர்மறை சக்திகளை நீக்கும். பச்சை கற்பூரம் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். வாரம் ஒரு முறை இப்படிச் செய்யவும்.