கனவுகள் என்பது நம் மனதில் இருக்கும் பயம் மற்றும் பிரச்னைகளின் வெளிப்பாடே என்று கூறப்படுகிறது. நம் வாழ்வில் இதுவரை நாம் கையாண்ட பிரச்னைகளோ அல்லது எதிர்காலத்தில் நமக்கு வரவிருக்கும் பிரச்னைகளின் பிரதிபலிப்பாகவோ கனவுகள் இருக்கலாம். கீழே கூறப்பட்ட 7 கனவுகள் கண்டிப்பாக நமது வாழ்வில் ஒருமுறையாவது வந்திருக்கும். அந்தக் கனவுகள் என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. நம்மை யாரோ துரத்துவதுப்போல கனவு வரும். அது மிருகமாகவோ, மனிதனாகவோ, இல்லை யாரென்று தெரியாத ஒன்றாக இருக்கலாம். இதற்குக் காரணம் நீங்கள் இருக்கும் ரிலேஷன்ஷிப் உங்களுக்குப் பிடிக்கவில்லை. அதிலிருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்று தெரியவில்லை என்று பொருள். நீங்கள் இருக்கும் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளிவர வேண்டும் என்று துடிக்கும்போது இதுபோன்ற கனவுகள் வரும்.
2. ஒரு கட்டடத்தின் மேலே இருந்து விழுவது போலவோ அல்லது தண்ணீரில் மூழ்குவதுப் போலவோ கனவு வந்தால், உங்களுடைய வாழ்க்கையிலே நீங்கள் ஏதோ ஒரு விஷயத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உதவிக்கு யாரும் இல்லை. அதனால் உங்கள் மனம் தவிக்கிறது என்று பொருள். உங்களுக்கு வாழ்க்கையில் உதவிகள் கிடைத்துவிட்டால், இதுபோன்ற கனவுகள் வராது.
3. பரீட்சையில் பெயில் ஆவது போன்ற கனவு வருவதற்கான காரணம், பள்ளி வாழ்க்கையோ அல்லது கல்லூரி வாழ்க்கையோ படித்து முடித்த பிறகும் பரீட்சையில் பெயில் ஆவது போன்ற கனவு வரும். இதற்கான அர்த்தம் உங்களுக்கு எதிர்க்கால வாழ்க்கையை குறித்து கவலை இருப்பதாகப் பொருள். இதற்குத் தீர்வு நீங்கள் எதிர்காலத்தை குறித்து சரியான திட்டம் வகுக்க வேண்டும்.
4. நீங்கள் எதையோ தவற விடுவது போல கனவு வருவது. பஸ் ஸ்டான்டிற்கு போகும்போது கடைசி நிமிடத்தில் பஸ்ஸை தவற விடுவது அல்லது நண்பன் தூக்கிப்போடும் பந்தை பிடிக்க முடியாமல் மிஸ் செய்வது போன்ற கனவுகள் வந்தால், நடந்து முடிந்த முக்கியமான ஏதோ ஒரு மீட்டிங் அல்லது வேலைக்கான இன்டர்வியூ போன்றவற்றை தவறவிட்டதே காரணமாகும்.
5. உங்களுடைய பல் கீழே விழுவது போல கனவு கண்டால் அல்லது வாயில் ஏதோ ஒரு பல் இல்லாத மாதிரி கனவு வந்தால், உங்கள் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதாகப் பொருள். நீங்கள் பயத்திலும், கவலையிலும் பாதுகாப்பின்மையாகவும் இருப்பதாக அர்த்தம்.
6. நீங்கள் ஏதோ ஒரு இடத்தில் தொலைந்துபோனது போல கனவு கண்டால், அந்த இடத்தை விட்டு வெளியே வர முடியாதபடி கனவு இருந்தால், உங்கள் வாழ்க்கையில் தீர்க்க முடியாத கஷ்டம் இருப்பதாகப் பொருள். பணப்பிரச்னை, கடன் பிரச்னை, கடனை எப்படித் திருப்பித் தருவது போன்ற பிரச்னைகள் இருப்பதாக அர்த்தம். அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறீர்கள் என்று பொருள்.
7. நீங்கள் வண்டியில் போய்க்கொண்டிருக்கும்போது திடீரென்று அது பழுதடைந்து விட்டதுபோல கனவு கண்டால், உங்களால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்று பொருள். இந்த 7 கனவுகளில் உங்களுக்கு எந்தக் கனவு வந்திருக்கிறது என்று சொல்லுங்கள்.