கோவில் தரிசனத்தின் மகத்துவம் தெரிந்துகொள்ளுங்கள்!

temple-worship
temple-worship
Updated on

ம்மில் பலர், நம் வீட்டில் எல்லா தெய்வங்களும் வைத்து, தீபம் ஏற்றி, பூஜை செய்து, மனதார வேண்டிக் கொள்கிறோம். அதன் பறகு எதற்கு கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கவேண்டும் என்று யதார்த்தமாக நினைப்பதும் உண்டு. அப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால் கோவில் தரிசனம் ஏன் மகத்துவம் பெறுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நம்முடைய முன்னோர்கள் ஒன்றும் அறியாமலா கோவில் வழிபாட்டு முறையை ஏற்படுத்தி இருப்பார்கள்.

நீங்கள் தானாக உங்கள் உள்ளங்கையை சூரிய ஒளி படும்படி வைத்திருங்கள். உங்கள் உள்ளங்கை சூடு ஏறுவதற்கு அதிக நேரம் பிடிக்கும். அதே சூரிய ஒளியில், ஒரு லென்ஸை காட்டி, அதன் கீழே உங்கள் உள்ளங்கையை காட்டினால், லென்ஸில் குவியும் ஒளி, அதன் அபரிமிதமான ஆற்றலால், உங்கள் உள்ளங்கையில் உடனே சூடு வந்துவிடுகிறது. அதேபோல் பசுவின் உடல் முழுவதும் ரத்தம் ஓடுகிறது. ஆனால் தன் கன்றுக்கு பால் கொடுக்க மடியில் மட்டுமே பால் சுரக்கிறது. இறைநிலை எங்கும் வியாபித்திருக்கின்றன.

ஆனால் கோயில்களில்தான் அபரிமிதமான ஆற்றல் குவிந்து இருக்கும்படி, சிலைகளை பிரதிஷ்டை செய்யும்போது, செப்புத்தகடுகளை வைத்தும் பல சடங்கு முறைகளையும் செய்து இருக்கிறார்கள்.

மேலும் சம்பர்தாயம் என்ற பெயரில் அறிவியல் பூர்வமான சில சடங்குகள் செய்து, மனித உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் மனம் ஒருநிலை அடையவும் பல சடங்கு முறைகளை செய்து இருக்கிறார்கள்.

கோவிலுக்குள் செல்லும்போது எப்போதும் தங்கள் செருப்புகளை வெளியே விட்டு வந்து விடுகிறோம். நம் உடலில் உள்ள நோய்களை போக்குவதற்கு பல சம்பர்தாய முறைகள் இருக்கின்றது. அதன் முதல் நிலைதான் வெறுங்கால்களோடு கோவிலுக்கு செல்வது. நம்முடைய கால் பாதங்களில் நோயை குணப்படுத்தும் பல வர்ம புள்ளிகள் உள்ளன. உடலின் மற்ற பாகங்களில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் எல்லா புள்ளிகளும் அங்கே உள்ளன. நாம் பிரகாரத்தை சுற்றி வருவதற்கு கருங்கற்களை பதித்து வைத்து இருப்பார்கள். நாம் வெறும் காலுடன் சுற்றி வரும்போது, கால் பாதங்களில் உள்ள வர்மபுள்ளிகளை அழுத்தும்போது, நம் உடலில் உள்ள பல நோய்கள் குணமாகும் சாத்தியம் உண்டு.

இதையும் படியுங்கள்:
சிவனும் சக்தியும் ஒன்றே! அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டிய ரிஷிவந்தியம் திருத்தலம்!
temple-worship

மேலும் கோவிலில் காதுகளை இழுத்து, தோப்புக்கரணம் போடும் போது, நம் மூளை பகுதி சுறுசுறுப்பு அடையும். உடலில் உள்ள எல்லா நரம்புகளையும் இழுத்து, அன்று முழுவதும் சோம்பேறித்தனம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

மேலும் கோயிலில் உள்ள அரசமரத்தை திருமணம் ஆன பெண்கள், தங்களுக்கு பிள்ளை வரம் வேண்டி சுற்றி வரும்போது, அரசமரத்தின் விதையை மிதித்தும். அந்த மரத்தின் சுற்றி இருக்கும் காற்றை சுவாசிக்கும் போதும் கற்பப்பை வலுப்பெற்று, குழந்தை பாக்கியம் கிடைக்க வழிவகை செய்கிறது.

கோவிலில் கொடுக்கும் துளசி தீர்த்தம், நம்முடைய வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிபடுத்தும் ஆற்றல் உள்ளது.

வஜ்ஜராசனம் என்னும் முட்டி போட்டு கும்பிடுவதால் வயிற்று கழிவுகளை சீராக வெளியேற்றுகிறது.

கோவிலில் நாம் இறை வழிபாடு செய்யும்போது, நம்முடைய உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் எனும் கண், காது, மூக்கு, வாய் மற்றும் தோல் இவைகள் அனைத்தையும் மனதை ஒருநிலைப்படுத்தி செய்யவேண்டும். நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்த கோவிலில் ஒரு சடங்கு செய்வார்கள். அதாவது நம் பார்வை சிதறாமல் இருக்க, திரை விலகியதும், தீபாராதணை காட்டுவார்கள். நம் காதுகள் சிதறாமல் இருக்க கோவிலில் மணி அடிப்பார்கள். அதேபோல் மூக்கின் கவனம் சிதறாமல் இருக்க ஊதுபத்தி போன்ற வாசனை திரவியங்களும், வாய்க்கு பிரசாதமும், தோலுக்கு எல்லா உடலிலும் படும்படி தீர்த்தத்தை நம்மீது தெளிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
யோகம் தரும் ஏலக்காய் மற்றும் கிராம்பு மாலை!
temple-worship

இப்படி நம்முடைய ஐம்புலன்களையும் அடக்கி, மனதை ஒருநிலை படுத்த மந்திரங்கள் சொல்லி சடங்கு செய்வார்கள். அதேசமயம் நம்முடைய வீட்டில், நம்முடைய ஐம்புலன்களை அடக்கி, இறை வழிபாடு செய்வது கடினம். இதில் எதாவது ஒன்று ஒரு நொடியில் சிதறிவிட வாய்ப்பு அதிகம் உண்டு.

எனவே வீட்டில் அன்றாடம் உங்கள் முறைப்படி இறை வழிபாடு செய்யுங்கள். மனம் ஒருநிலை படவும், நோய்களிலிருந்து விடுபடவும், நம்முடைய ஐம்புலன்களை அடக்கி இறை வழிபாடு செய்வதற்கு, நம் முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த கோவில் வழிபாட்டு முறையை இயன்றவரை செய்து, நிறைய பலன்களை பெற்று, நிறைந்த வாழ்வை அடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com