
ஆண்டின் ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் 1-ம் தேதி முதல் 30-ம்தேதி வரை வரும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள், விரதங்கள், நட்சத்திரம் மற்றும் வழிபாட்டு தினங்களை அறிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் 1-ம்தேதி : வளர்பிறை நவமி, கேட்டை நட்சத்திரம்
செப்டம்பர் 2-ம்தேதி : வளர்பிறை தசமி, கெஜலட்சுமி விரதம், நிமிஷாம்பிகையை வழிபட உகந்த நாள்
செப்டம்பர் 3-ம்தேதி : வளர்பிறை சர்வ ஏகாதசி, பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நாள், பரிவர்த்தன ஏகாதசி
செப்டம்பர் 4-ம்தேதி :வளர்பிறை துவாதசி, சுபமுகூர்த்த நாள், வாமன ஜெயந்தி
செப்டம்பர் 5-ம்தேதி :வளர்பிறை திரயோதசி, ஓணம் பண்டிகை, மீலாடி நபி, பிரதோஷம், திருவோண விரதம்.
செப்டம்பர் 6-ம்தேதி : வளர்பிறை சதுர்த்தசி, அவிட்டம் நட்சத்திரம், கதளீ கௌரி விரதம், அனந்த சதுர்த்தசி விரதம், திருநள்ளார் சனிபகவானுக்கு ஆராதனை செய்ய உகந்த நாள்.
செப்டம்பர் 7-ம்தேதி : பௌர்ணமி, சதயம் நட்சத்திரம், உமா மகேஸ்வர விரதம்.
செப்டம்பர் 8-ம்தேதி : தேய்பிறை பிரதமை, பூரட்டாதி நட்சத்திரம், மஹாளய பக்ஷாரம்பம், தேவ மாதா பிறந்த நாள்
செப்டம்பர் 9-ம்தேதி : தேய்பிறை துவிதியை, உத்திரட்டாதி நட்சத்திரம்
செப்டம்பர் 10-ம்தேதி : தேய்பிறை திரிதி, ரேவதி நட்சத்திரம், சங்கடஹர சதுர்த்தி, பிரகதி கௌரீ விரதம்
செப்டம்பர் 11-ம்தேதி :தேய்பிறை சதுர்த்தி, அசுபதி நட்சத்திரம், திருப்பதி பெருமாளுக்கு புஷ்பாங்கி சேவை
செப்டம்பர் 12-ம்தேதி : தேய்பிறை பஞ்சமி. பரணி நட்சத்திரம், கார்த்திகை விரதம், மஹாபரணி.
செப்டம்பர் 13-ம்தேதி :தேய்பிறை சஷ்டி, கார்த்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு விரதம் இருக்க உகந்த நாள், கரிநாள்
செப்டம்பர் 14-ம்தேதி :தேய்பிறை ஸப்தமி, ரோகிணி நட்சத்திரம், சுபமுகூர்த்த நாள், மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை, கண்ணூறு கழித்தல் நன்று
செப்டம்பர் 15-ம்தேதி :தேய்பிறை அஷ்டமி, மிருகசீருஷம் நட்சத்திரம்
செப்டம்பர் 16-ம்தேதி : தேய்பிறை தசமி, திருவாதிரை நட்சத்திரம், நிமிஷாம்பாளை வழிபட உகந்த நாள்
செப்டம்பர் 17-ம்தேதி :தேய்பிறை சர்வ ஏகாதசி, விஸ்வகர்மா பூஜை, புனர்பூசம் நட்சத்திரம், பெருமாளுக்கு விரதம் இருக்க உகந்த நாள்
செப்டம்பர் 18-ம்தேதி : தேய்பிறை துவாதசி, பூசம் நட்சத்திரம்
செப்டம்பர் 19-ம்தேதி : தேய்பிறை திரியோதசி, ஆயில்யம் நட்சத்திரம், கஜகௌரி விரதம், பிரதோஷம், சிவபெருமானை வழிபட உகந்த நாள்
செப்டம்பர் 20-ம்தேதி :தேய்பிறை சதுர்த்தசி, மகம் நட்சத்திரம், மாத சிவராத்திரி, சிவபெருமானை வழிபட உகந்த நாள்
செப்டம்பர் 21-ம்தேதி : மஹாளய அமாவாசை, பூசம் நட்சத்திரம், மாஸா கௌரி விரதம், இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம், சூரிய வழிபாடு நன்று
செப்டம்பர் 22-ம்தேதி :வளர்பிறை பிரதமை, உத்திரம் நட்சத்திரம், நவராத்தி பூஜை ஆரம்பம்,
செப்டம்பர் 23-ம்தேதி :வளர்பிறை, ஹஸ்தம் நட்சத்திரம், சந்திர தரிசனம், நவராத்திரி ஆரம்பம், வீட்டில் கொலு வைத்து இன்று முதல் 9 நாட்கள் துர்க்கை அம்மனை வழிபட உகந்தது, தனவிருத்தி கௌரி விரதம், மதுரை மீனாட்சி கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
செப்டம்பர் 24-ம்தேதி : வளர்பிறை திரிதியை, சித்திரை நட்சத்திரம், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்
செப்டம்பர் 25-ம்தேதி :வளர்பிறை திரிதியை, சுவாதி நட்சத்திரம், சதுர்த்தி விரதம், மதுரை மீனாட்சி கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக அலங்காரம்
செப்டம்பர் 26-ம்தேதி :வளர்பிறை சதுர்த்தி, விசாகம் நட்சத்திரம், துர்க்கா ஸ்நானம், திருப்பதி ஏழுமலையப்பன் காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் பவனி.
செப்டம்பர் 27-ம்தேதி : வளர்பிறை பஞ்சமி, அனுஷம் நட்சத்திரம், உபாங்க லலிதா கௌரி விரதம்
செப்டம்பர் 28-ம்தேதி : வளர்பிறை சஷ்டி விரதம், துர்கா பூஜை, கேட்டை நட்சத்திரம், திருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்கார வாகன வீதி உலா.
செப்டம்பர் 29-ம்தேதி :வளர்பிறை ஸப்தமி, மூலம் நட்சத்திரம், சரஸ்வதி ஆவாஹணம், திருப்பதி ஏழுமலையப்பன் ஹனுமார் வாகனத்தில் வசந்த உற்சவம்
செப்டம்பர் 30-ம்தேதி : வளர்பிறை அஷ்டமி, பூராடம் நட்சத்திரம், துர்க்காஷ்டமி.