வைகாசி விசாகம் முதல் ஜூன் மாதத்தில் வரும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்...
ஜூன் மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் இறைவனை வழிபட உகந்த நாட்களே. மாதந்தோறும் வரும் அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி உள்ளிட்ட பண்டிகைகளுடன் வைகாசி விசாகம் போன்ற சிறப்பு வாய்ந்த நாட்களும் ஜூன் மாதத்தில் வருகின்றன. அந்த வகையில் ஜூன் 1-ம்தேதியில் இருந்து ஜூன் 30-ம்தேதி வரை பண்டிகைகள் மற்றும் விரதங்கள் உள்ளிட்ட நடைபெறவுள்ள முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் பார்க்கலாம்.
ஜூன் 1-ம்தேதி : வளர்பிறை சஷ்டி, முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நாள், ஆரண்ய கௌரீ விரதம்,
ஜூன் 2-ம்தேதி : வளர்பிறை சப்தமி, மதுரை கூடலழகர் உற்சவாரம்பம், சோமவார விரதம்.
ஜூன் 3-ம்தேதி : வளர்பிறை அஷ்டமி, ரிஷப விரதம், அமிர்த நாள், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தங்கப்புலி வாகன பவனி, பழனி ஆண்டவர் விழா தொடக்கம்
ஜூன் 4-ம்தேதி : வளர்பிறை நவமி, வாஸ்து நாள்(காலை 9.58 மணி முதல் - 10.34 மணி வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று)
ஜூன் 5-ம்தேதி : வளர்பிறை தசமி, சுபமுகூர்த்த நாள், பழனி ஆண்டவர் காமதேனு வாகன பவனி, மதுரை கூடலழகர் கருட வாகன பவனி
ஜூன் 6-ம்தேதி : வளர்பிளை ஏகாதசி, ஸ்மார்த்த ஏகாதசி, அமிர்த்த யோகம், சுபமுகூர்த்த நாள், அபரா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்த நாள், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகப்பெருமான் ரதம்.
ஜூன் 7-ம்தேதி : அமிர்த்த யோகம், வைஷ்ணவ ஏகாதசி, பக்ரீத் பண்டிகை, காட்டுபருவூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கருட வாகன வீதி உலா.
ஜூன் 8-ம்தேதி : வளர்பிறை துவாதசி, சுபமுகூர்த்த நாள், பிரதோஷம், பழனி ஆண்டவர் திருக்கல்யாணம், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி வெள்ளி ரதத்தில் பவனி,
ஜூன் 9-ம்தேதி : வளர்பிறை திரயோதசி, வைகாசி விசாகம், முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு, முருப்பெருமானை விரதம் இருந்த வழிபட உகந்த நாள், திருப்பரங்குன்றம் ஆண்டவர் பால் அபிஷேகம், மதுரை கூடலழகர் பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி, ஆழ்வார் திருநகரி ஸ்ரீரம்மாழ்வார் புறப்பாடு.
ஜூன் 10-ம்தேதி : வளர்பிறை சதுர்த்தசி, சாவித்ரி விரதம், பவுர்ணமி, காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகப்பெருமான் திருக்கல்யாணம், குரங்கனி முததுமாலையம்மன் பவனி, சோழவந்தான் ஜனகமாரியம்மன் பால்குட காட்சி.
ஜூன் 11-ம்தேதி : சோழவந்தான் ஜனகமாரியம்மன் பூக்குழி விழா இரவு புஷ்ப சப்பரத்தில் புறப்பாடு, பழனி ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா.
ஜூன் 12-ம்தேதி : தேய்பிறை பிரதமை, திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் ஸ்ப்தாவர்ணம், பழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் புறப்பாடு, காட்டுபருவூர் ஆதிகேசவப்பெருமாள் தெப்போற்சவம்.
ஜூன் 13-ம்தேதி : தேய்பிறை துவிதியை, சித்த அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி, மதுரை கூடலழகர் கருட வாகனப் புறப்பாடு,
ஜூன் 14-ம்தேதி : தேய்பிறை திரிதியை, சங்கடஹர சதுர்த்தி, விநாயகரை விரதம் இருந்து வழிபட உகந்த நாள், அரியக்குடி சீனிவாசப்பெருமாள் தெப்போற்சவம், இன்று கருட தரிசனம் நன்று, மதுரை கூடலழகர் பெருமாள் விடாயாற்று
ஜூன் 15ம்தேதி : தேய்பிறை சதுர்த்தி, அமிர்த்த யோகம், திருவோண விரதம், மிதுன சங்கராந்தி, சபரிமலையில் நடை திறப்பு, கரிநாள், ஷடசீதி புண்ணியகாலம், கண்ணூறு கழித்தல் நன்று, திருத்துவ ஞாயிறு, தமிழ் மாதம் வைகாசி பிறப்பு.
ஜூன் 16-ம்தேதி : தேய்பிறை பஞ்சமி, சுபமுகூர்த்த நாள், கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை, தென்னை, மா, புளி மரங்கள் வைக்க நன்று, சோழவந்தான் ஜனகமாரியம்மன் சிம்ம வாகன பவனி.
ஜூன் 17-ம்தேதி : தேய்பிறை சஷ்டி, முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நாள், சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல், சோழவந்தான் ஜனகமாரியம்மன் ரதோற்சவம்.
ஜூன் 18-ம்தேதி : தேய்பிறை சப்தமி, அமிர்தயோகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை, சோழவந்தான் ஜனகமாரியம்மன் மஞ்சள் நீராட்டுவிழா ஊஞ்சலில் விருஷப சேவை.
ஜூன் 19-ம்தேதி : தேய்பிறை அஷ்டமி, திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், ஆராதனை செய்ய நன்று.
ஜூன் 20-ம்தேதி : தேய்பிறை நவமி, கரிநாள், திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு, திருத்தணி முருகன் கிளி வாகன சேவை, தேவக்கோட்டை ரங்கநாதர் புறப்பாடு.
ஜூன் 21-ம்தேதி : தேய்பிறை சர்வ ஏகாதசி, யோகினி ஏகாதசி விரதம், பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த நாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பவனி, திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் மாதூர் பூதேஸ்வரர் பூஜை, திருத்தணிகை சுப்பிரமணியர் திருக்குளம் வலம் வரும் காட்சி.
ஜூன் 22-ம்தேதி : தேய்பிறை துவாதசி, கூர்ம ஜெயந்தி, கார்த்திகை விரதம், முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நாள், திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், சூரிய வழிபாடு நன்று.
ஜூன் 23-ம்தேதி : தேய்பிறை திரயோதசி, மாத சிவராத்திரி, சோம பிரதோஷம், பிரதோஷம், சிவபெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாள், சிதம்பரம் சிவபெருமான் விழா தொடக்கம், திருத்தணிகை சுப்பிரமணியர் தெப்பம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகன புறப்பாடு.
ஜூன் 24-ம்தேதி : தேய்பிறை சதுர்த்தசி, சிதம்பரம் மற்றும் ஆவுடையார்கோவில்களில் சிவபெருமான் பவனி, சுவாமிமலை முருகப்பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
ஜூன் 25-ம்தேதி : சர்வ அமாவாசை, திருவள்ளூர் வீரராகவர் தெப்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மமூலவருக்கு திருமஞ்சனம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
ஜூன் 26-ம்தேதி : வளர்பிறை பிரதமை, சந்திர தரிசனம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் விழா தொடக்கம், திருவள்ளூர் வீரராகப்பெருமாள் தெப்பம்.
ஜூன் 27-ம்தேதி : வளர்பிறை துவிதியை, சுபமுகூர்த்த நாள், திருவள்ளூர் வீரராகவர் தெப்பம், இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமசுவாமி விழா தொடக்கம், ஹிஜிரி வருடப் பிறப்பு , பூரி ரத யாத்திரை.
ஜூன் 28-ம்தேதி : வளர்பிறை திரிதியை, சிதம்பரம் மற்றும் ஆவுடையார்கோவிலில் சிவபெருமான் பவனி, ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகனத்தில் வீதியுலா, திருநள்ளார் சனிபகவானுக்கு அபிஷேகம் செய்ய நன்று
ஜூன் 29-ம்தேதி : வளர்பிறை சதுர்த்தி விரதம், மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு, ராமநாதபுரம் கோதண்டராமர் ஹனுமார் வாகன உலா, தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.
ஜூன் 30-ம்தேதி : வளர்பிறை பஞ்சமி, ஸ்கந்த பஞ்சமி, சமீ கௌரி விரதம், கண்டனுர் மீனாட்சியம்மன் வீதியுலா, ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர் ஹம்ஸ வானத்திலும் சுவாமி பெரிய பெருமாள் கருட வாகனத்திலும் புறப்பாடு.