
சனி மூலை:
வாஸ்து சாஸ்திரத்தில் சனி மூலை என்பது மிகவும் முக்கியமானது. சனி மூலை என்பது வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் அதாவது வட கிழக்கு மூலையை குறிக்கும் இது ஈசான மூலை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு வீட்டு மனையின் சனி மூலை என்பது மனையினுடைய வடகிழக்கு மூலையாகும். இது நீர் நிலைகளுக்கு ஏற்ற மூலை என்பதால் இங்கு நீர் சேகரிப்பிற்கு ஒதுக்கப்பட்ட மூலையாகும். எனவே வீட்டுமனையில் இந்த மூலை தான் தாழ்ந்து இருக்கும்.
அஷ்டதிக் பாலகர்களில் ஈசானன் என்பவரே இந்த வடகிழக்கு மூலையின் காவலர் என்பதால் அவரது பெயரிலேயே ஈசான மூலை என்று அழைக்கப்படுகிறது.
திசைகளும் மூலைகளும்:
வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும். இதனை ஈசான மூலை என்போம்.
அது போல் தெற்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் தென்கிழக்கு மூலையாகும். இது அக்னி மூலை எனப்படும்.
தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்கு மூலை. இது கன்னி மூலை அல்லது நிருதி மூலை எனப்படும்.
வடக்கும் மேற்கும் சந்திக்கும் இடம் வடமேற்கு மூலையாகும். இது வாயு மூலை என அழைக்கப்படும்.
நம்முடைய வீடுகளில் திசைகளும், மூலைகளும் முக்கியம். ஈசான மூலையை சுத்தமாக வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். எப்பொழுதுமே ஈசான மூலை காற்றோட்டமான வசதியுடன் அடைப்பு எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஈசான மூலையில் வைக்க கூடாத பொருட்கள்:
பழைய பொருட்கள், பீரோ, ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்ற கனமான பொருட்களை வைக்கக்கூடாது. ஈசானிய மூலையில் தரையின் மட்டம் மற்ற தரை இடங்களை விட உயரமாக இருக்கக் கூடாது. அந்தப் பகுதியில் கிணறு அமைக்கலாமே தவிர பாத்ரூம், செப்டிக் டேங்க் போன்றவைகளை வைக்கக்கூடாது என்பார்கள்.
வடகிழக்கு என்பது நீர் நிலைகளுக்கு ஏற்ற மூலை என்பதால் இங்கு நீர் சேகரிப்பிற்கு ஒதுக்கப்பட்ட மூலையாகும். வீட்டு மனையில் இந்த மூலை தாழ்ந்திருக்கும். மழைநீர் முழுவதும் இங்கு ஓடி வந்து விடும். இங்கு மரம் நட்டால் நீர்நிலை அமைப்பது கடினமாகும். எனவே சனி மூலையில் மரம் வைக்கக்கூடாது.
ஈசான மூலையில் என்ன வைக்கலாம்?
ஈசான மூலையில் ஒரு குடத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கலாம்.
ஈசான மூலை நீண்டிருப்பது மிகவும் நல்லது. ஈசான மூலை என்கிற வடகிழக்கு மூலையில் வரவேற்பறை, உணவருந்தும் அறை, குழந்தைகளுடைய படிப்பறை ஆகியவற்றை அமைக்கலாம். ஈசான மூலையில் கடவுள் படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைக்கலாம்.