
ஜூலை மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் இறைவனை வழிபட உகந்த நாட்களே. மாதந்தோறும் வரும் அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி உள்ளிட்ட பண்டிகைகளுடன் ஆடிமாதமும் பிறக்க உள்ளதால் அம்மனுக்கு உகந்த சிறப்பு வாய்ந்த நாட்களும் ஜூலை மாதத்தில் வருகிறது. அந்த வகையில் ஜூலை 1-ம்தேதியில் இருந்து ஜூலை 31-ம்தேதி வரை பண்டிகைகள் மற்றும் விரதங்கள் உள்ளிட்ட முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் பார்க்கலாம்.
ஜூலை 1-ம்தேதி : வளர்பிறை சஷ்டி, சிதம்பரம் சிவபெருமான் ரதோற்சவம், ஆனி உத்திர அபிஷேகம், திருப்பதி அப்பலாயகுண்டா கோவிலில் அஷ்டதள பாத பத்மாராதனை சேவை
ஜூலை 2-ம்தேதி : வளர்பிளை சப்தமி, சுபமுகூர்த்தம், ஆனி உத்திர தரிசனம், தேவமாதா காட்சியருளிய நாள், நடராஜர் அபிஷேகம், ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி திருக்கல்யாண வைபவம். திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் புஷ்ப யாகம்.
ஜூலை 3-ம்தேதி : வளர்பிறை அஷ்டமி, மதுரை ஸ்ரீமீனாட்சி ஊஞ்சலில் காட்சியருளல், தாக்ஷியா தினம்,
ஜூலை -4ம்தேதி : வளர்பிறை நவமி, உபேந்திர நவமி, திருவள்ளூர் வீரராகவர் ஜேஷ்டாபிஷேகம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபட்டர்பிரான் ரதோற்சவம், திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் விழா தொடக்கம், திருப்பதி அப்பலாயகுண்டா கோவிலில் வஸ்திர அலங்காரச் சேவை மற்றும் அபிஷேகம் நடக்கிறது.
ஜூலை 5-ம்தேதி : வளர்பிறை தசமி, ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமசுவாமி ரதம், திருப்பதி கோவிலில் பெரியாழ்வார் சாற்றுமுறை
ஜூலை 6-ம்தேதி :வளர்பிறை சர்வ ஏகாதசி, மொஹரம் பண்டிகை, கோவர்த்தன விரதம், திருப்பதி கோவிலில் சயன ஏகாதசி மற்றும் சதுர்மாச விரதம் ஆரம்பம்.
ஜூலை 7-ம்தேதி : வளர்பிறை துவாதசி, சுபமுகூர்த்தம், வாஸூதேவி துவாதசி, திருப்பதி கோவிலில் நாதமுனிலா ஆண்டு திரு நட்சத்திரம்.
ஜூலை 8-ம்தேதி :வளர்பிறை திரயோதசி, பிரதோஷம், சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.
ஜூலை 9-ம்தேதி :வளர்பிறை சதுர்த்தசி, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, பவித்தர சதுர்த்தசி, திருப்பதி அப்பலாயகுண்டா கோவிலில் அஷ்டோத்ர சத கலசாபிஷேகம்
ஜூலை 10-ம்தேதி :பௌர்ணமி, வியாஸ பூஜை, திருப்பதி கோவிலில் குரு பவுர்ணமி, மற்றும் கருட சேவை.
ஜூலை 11-ம்தேதி :தேய்பிறை பிரதமை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு, திருப்பதி அப்பலாயகுண்டா கோவிலில் வஸ்திர அலங்காரச் சேவை மற்றும் அபிஷேகம் நடக்கிறது.
ஜூலை 12-ம்தேதி :தேய்பிறை துவதியை, திருவோண விரதம், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஜேஷ்டாபிஷேகம், இன்று கருட தரிசனம் நன்று, தெலுங்கு உத்தரசட நட்சத்திரத்தையொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் கோவிலின் நான்கு மாட வீதி உலா
ஜூலை 13-ம்தேதி :தேய்பிறை திரிதியை, சுபமுகூர்த்தம், இன்று கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு செய்ய நன்று.
ஜூலை 14-ம்தேதி : தேய்பிறை சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி, திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
ஜூலை 15-ம்தேதி : தேய்பிறை பஞ்சமி, குரங்கனி முத்துமாலையம்மன் பவனி, சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
ஜூலை 16-ம்தேதி : தேய்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், தேய்பிறை சஷ்டி விரதம், தக்ஷிணாயன புண்ணிய காலம், திருப்பதி கோவிலில் ஆணிவார ஆஸ்தானம்.
ஜூலை 17-ம்தேதி : தேய்பிறை சப்தமி, சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
ஜூலை 18-ம்தேதி : தேய்பிறை அஷ்டமி, கரிநாள், திருப்பதி அப்பலாயகுண்டா கோவிலில் வஸ்திர அலங்காரச் சேவை மற்றும் அபிஷேகம் நடக்கிறது.
ஜூலை 19-ம்தேதி : தேய்பிறை நவமி, திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம், திருநள்ளார் சனிபகவானுக்கு ஆராதனை செய்ய நன்று, கருட தரிசனம் நன்று.
ஜூலை 20-ம்தேதி :தேய்பிறை தசமி, கார்த்திகை விரதம், இன்று கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு நன்று.
ஜூலை 21-ம்தேதி : தேய்பிறை ஏகாதசி, திருத்தணி முருகப்பெருமான் தெப்பம்.
ஜூலை 22-ம்தேதி : தேய்பிறை துவாதசி, பிரதோஷம், சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
ஜூலை 23-ம்தேதி : தேய்பிறை சதுர்த்தசி, மாத சிவராத்திரி,
ஜூலை 24-ம்தேதி : ஆடி அமாவாசை, சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா, பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு பூக்களால் அலங்கார காட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் கருட சேவை.
ஜூலை 25-ம்தேதி : வளர்பிறை பிரதமை, ஆடிவெள்ளி அம்மனை வழிபட உகந்தநாள், திருப்பதி அப்பலாயகுண்டா கோவிலில் வஸ்திர அலங்காரச் சேவை மற்றும் அபிஷேகம் நடக்கிறது, திருப்பதி கோவிலில் சக்கரத்தாழ்வார், ஆண்டு திருநட்சத்திரம்.
ஜூலை 26-ம்தேதி : வளர்பிறை துவிதியை, சந்திர தரிசனம், கரிநாள், ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்க பல்லக்கில் திருவீதியுலா.
ஜூலை 27-ம்தேதி : வளர்பிறை திரிதியை, வாஸ்து செய்ய உகந்த நாள்(காலை 7.44 முதல் 8.20 மணி வரை), சுவர்ண கௌரி விரதம்.
ஜூலை 28-ம்தேதி : வளர்பிறை சதுர்த்தி, திருவாடிப்பூரம், சதுர்த்தி விரதம், விநாயகரை வழிபட உகந்த நாள், நாக சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், ஆண்டாள் நட்சத்திரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி, திருப்பதி கோவிலில் மைலயப்ப சுவாமியின் புரசைவாரி தோட்டம்.
ஜூலை 29-ம்தேதி : வளர்பிறை பஞ்சமி, கருட பஞ்சமி, வாராகி அம்மனை வழிபட உகந்த நாள், திருப்பதி கோவிலில் கருட பஞ்சமி மற்றும் கருட சேவை உற்சவம்.
ஜூலை 30-ம்தேதி : வளர்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், இன்று முருகப்பெருமானை வழிபட உகந்த நாள், திருப்பதி கல்கி ஜெயந்தி மற்றும் கஸ்யப மகரிஷி ஜெயந்தி.
ஜூலை 31-ம்தேதி : வளர்பிறை சப்தமி.