
மே மாதத்தில் தான் வரலாற்று சிறப்புமிக்க மதுரை சித்திரை திருவிழா, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் மற்றும் சித்ரா பவுர்ணமி போன்ற சிறப்பு வாய்ந்த ஆன்மிக முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மே மாதத்தில் எந்த நாளில் எந்த ஆன்மிக முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மே 1 : வளர்பிறை சதுர்த்தி விரதம், வார்தா கௌரீ விரதம்.
மே 2 : வளர்பிறை பஞ்சமி, ஸ்ரீமத்சங்கர ஜெயந்தி, லாவண்ய கௌரி விரதம், திருவள்ளூர் வீரராகவர் விழா தொடக்கம்.
மே 3 : சஷ்டி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் வேடர் பறி லீலை.
மே 4 : அக்னி நட்சத்திரம் ஆரம்பம், சுபமுகூர்த்தம், வளர்பிறை சப்தமி.
மே 5 : வளர்பிறை அஷ்டமி, மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் நந்தீசுவரயாளி வாகனத்தில் புறப்பாடு.
மே 6 : வளர்பிறை நவமி, வாஸவி ஜெயந்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் பட்டாபிஷேகம்.
மே 7 : வளர்பிறை தசமி, மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் திக்விஜயம் செய்தருளல்.
மே 8 : வளர்பிறை ஏகாதசி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் ரதோற்சவம்.
மே 9 : சுபமுகூர்த்த நாள், பரசுராம துவாதசி, மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் ரதோற்சவம்.
மே 10 : சனிப்பிரதோஷம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி விருஷப சேவை, திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பாடு.
மே 11 : கள்ளழகர் எதிர்சேவை, சுபமுகூர்த்தநாள், நரசிம்ம ஜெயந்தி, திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கள்ளர் திருக்கோலமாய் தல்லாக்குளத்தில் எதிர் சேவை
மே 12 : சித்ரா பவுர்ணமி, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், புத்த பூர்ணிமா, அர்த்தநாரீஸ்வரர் விரதம், ஸம்பத் கௌரி விரதம்.
மே 13 : திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் தேனூர் மண்டபர் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சமருளுதல்.
மே 14 : சுபமுகூர்த்த நாள், திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் காலை மோகனாவதாரம்.
மே 15 : விஷ்ணுபதி புண்ணிய காலம், திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் மலைக்கு புறப்பாடு.
மே 16 : தேய்பிறை சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி.
மே 17 : தேய்பிறை பஞ்சமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் இத்தலங்களில் அலங்காரத் திருமஞ்சன சேவை, இன்று கருட தரிசனம் நன்று.
மே 18 : தேய்பிறை சஷ்டி விரதம், சுபமுகூர்த்த நாள், திருவோணம் விரதம், இன்று முருகப்பெருமானை வழிபட நன்று.
மே 19 : தேய்பிறை சப்தமி, சுபமுகூர்த்த நாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம்.
மே 20 : தேய்பிறை அஷ்டமி, வாடிபட்டி குலசேகரன்கோட்டை ஸ்ரீமீனாட்சி கோவிலில் காலபைரவருக்கு அபிஷேக ஆராதனை செய்ய நன்று.
மே 21 : தேய்பிறை நவமி, கரிநாள்.
மே 22 : தேய்பிறை தசமி, சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
மே 23 : தேய்பிறை சர்வ ஏகாதசி விரதம், சுபமுகூர்த்த நாள், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
மே 24 : தேய்பிறை துவாதசி, சனிப்பிரதோஷம், திருப்பதி ஏழுமலையப்பன் கந்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
மே 25 : மாத சிவராத்திரி, சூரிய வழிபாடு நன்று, கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமாருக்கு திருமஞ்சன சேவை.
மே 26 : தேய்பிறை சதுர்த்தசி, சர்வ அமாவாசை, கார்த்திகை விரதம், வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரத காட்சி, திருச்செந்தூர், பழனி, விராலிமலை இத்தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு.
மே 27 : புண்ணாக கௌரி விரதம், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
மே 28 : வளர்பிறை பிரதமை திதி, அக்னி நட்சத்திரம் நிறைவு, சுபமுகூர்த்த நாள், சந்திர தரிசனம் நன்று.
மே 29 : ரம்பாத் திரிதியை, மாதவி விரதம், சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகன பவனி, திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
மே 30 : வளர்பிறை சதுர்த்தி விரதம், கரிநாள், திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்.
மே 31 : வளர்பிறை பஞ்சமி திதி, கரிநாள், மதுரை கூடலழகர், காஞ்சி வரதராஜப்பெருமாள் இத்தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை, கருட தரிசனம் நன்று.