
இந்துக்கள் ஆண்டு முழுவதும் ஏராளமான ஆன்மிக நிகழ்வுகள், பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களைக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு பண்டிகளையும் ஒவ்வொரு சிறப்பை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் வரும் மகாவீர் ஜெயந்தி சிக்கியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்த விழாக்கள் சூரிய நாட்காட்டியில் ஒரு நிலையான வருடாந்திர தேதியிலோ அல்லது சந்திர நாட்காட்டியின் ஒரு குறிப்பிட்ட நாளிலோ நடைபெறுகின்றன. இந்த விழாக்களின் அனுசரிப்பு பெரும்பாலும் பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் வரும் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஏப்ரல் மாதத்தில் வரும் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள் :
ஏப்ரல் 1 : சதுர்த்தி விரதம், கார்த்திகை விரதம்,
ஏப்ரல் 2 : கரிநாள், பஞ்சமி திதி
ஏப்ரல் 3 : சஷ்டி விரதம்
ஏப்ரல் 4 : சுபமுகூர்த்த நாள், சப்தமி திதி
ஏப்ரல் 5 : வளர்பிறை அஷ்டமி, அசோகாஷ்டமி
ஏப்ரல் 6 : ஸ்ரீராம நவமி, நவமி
ஏப்ரல் 7 : சுபமுகூர்த்த நாள்
ஏப்ரல் 8 : சர்வ ஏகாதசி,திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்ட காட்சி, காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ரதோற்சவம்
ஏப்ரல் 9 : சுபமுகூர்த்த நாள், வாமன துதசி,
ஏப்ரல் 10 : பிரதோஷம், மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 11 : பங்குனி உத்திரம், சுபமுகூர்த்த நாள்
ஏப்ரல் 12 : பவுர்ணமி
ஏப்ரல் 14 : தமிழ் புத்தாண்டு, சித்திரை வருடப்புறப்பு, சித்திரை மாத தொடக்கம், விஷூ புண்ணியகாலம்
ஏப்ரல் 15 - திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில்களில் கருட வாகன சேவை
ஏப்ரல் 16 : சங்கடஹரசதுர்த்தி, சுபமுகூர்த்த நாள்,
ஏப்ரல் 17 : பஞ்சமி திதி, பெரிய வியாழன், சமயபுரம் மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு
ஏப்ரல் 18 : புனித வெள்ளி, சுபமுகூர்த்தநாள், தேய்பிறை பஞ்சமி திதி, சமயபுரம் மாரியம்மன் தெப்போற்சவம்
ஏப்ரல் 19 : கரிநாள், தேய்பிறை சஷ்டி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ரதோற்சவம், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு, ஹோலி ஸாட்டர்டே
ஏப்ரல் 20 : தேய்பிறை சப்தமி, ஈஸ்டர்
ஏப்ரல் 21 : திருவோண விரதம், தேய்பிறை அஷ்டமி
ஏப்ரல் 22 : தேய்பிறை நவமி, சென்னை சென்னகேசவ பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி
ஏப்ரல் 23 : தேய்பிறை தசமி, சுபமுகூர்த்த நாள், வாஸ்து நாள்(காலை 8.51 மணி முதல் காலை 9.30 மணி வரை வாஸ்து செய்ய நன்று)
ஏப்ரல் 24 : சர்வ ஏகாதசி. ஸ்ரீவில்லிபுத்தூ ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்
ஏப்ரல் 25 : பிரதோஷம், சுபமுகூர்த்த நாள்
ஏப்ரல் 26 : மாத சிவராத்திரி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரதோற்சவம்
ஏப்ரல் 27 : சர்வ அமாவாசை
ஏப்ரல் 28 : கரிநாள்
ஏப்ரல் 29 : கார்த்திகை விரதம், சந்திர தரிசனம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சித்திரை பெருவிழா தொடக்கம்
ஏப்ரல் 30 : அட்சய திருதியை, சுபமுகூர்த்தநாள், பலராம ஜெயந்தி