

போராட்டங்களும் தோல்விகளும்தான் வெற்றிக்கு முதல் படி. தோல்விகளைக் கடந்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்பவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். ஆகவே, உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது கஷ்டம் வந்துவிட்டால் அந்த கஷ்டத்தையே நினைத்து துவண்டு போகாதீர்கள். கஷ்டத்தை மிதித்து பின்னுக்குத் தள்ளும்போதுதான், கஷ்டத்திற்கு பின்னால் இருக்கும் சந்தோஷத்தை நம்மால் அனுபவிக்க முடியும்.
முன்னேற்றம் தரும் தாயத்து: வெள்ளை விஷ்ணு கிராந்தி என்ற ஒரு மூலிகை செடி உள்ளது. இந்த செடியின் வேரை சாப நிவர்த்தி செய்து எடுத்து வந்து மஞ்சள் தண்ணீரில் கழுவி நிழலிலேயே காய வைத்து, ஒரு வெள்ளி தாயத்தில் போட்டு கழுத்திலோ, கையிலோ கட்டிக் கொண்டால் வாழ்க்கையில் எந்த விஷயத்திற்கும் நீங்கள் சோர்ந்து போக மாட்டீர்கள். குலதெய்வத்தை நினைத்து இந்த தாயத்தை தயார் செய்யவும்.
எதுவாக இருந்தாலும் அதில் போராடி வெற்றி காண வேண்டும் என்ற மன உறுதியோடு வாழ தொடங்கி விடுவீர்கள். எதிரிகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். உங்களை முன்னேற விடாமல் தடுப்பவர்களை கண்டு அஞ்ச மாட்டீர்கள். முன்னேற்றத்திற்குத் தடையாக எந்த ஒரு விஷயம் வந்தாலும் அதை தூக்கி எறியும் அளவிற்கு மன தைரியம் கொண்டவர்களாக மாறுவீர்கள்.
ஆனால், சாப நிவர்த்தி செய்து இந்த வேரை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டால், அது 48 நாட்களுக்குத்தான் வேலை செய்யும். மீண்டும் பழைய வேரை நீங்கள் தூக்கிப் போட்டுவிட்டு புதியதாக ஒரு வேரை தாயத்தில் போட்டு கட்ட வேண்டும். இது கொஞ்சம் சிரமமான விஷயமாக இருந்தாலும் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு இந்த வேர் உறுதுணையாக நிற்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எளிமையான இந்த தாந்த்ரீக பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இதனைப் பின்பற்றி பலன் பெறலாம்.