

பெண்கள் தனது கணவன் எப்போதும் தன்னைவிட்டு பிாியக்கூடாது, தாலி பாக்கியம் நிலைக்கவேண்டும் என்பதற்காக காமாட்சி அம்மன், பாா்வதி, மகாலெட்சுமி போன்ற சக்திவாய்ந்த அம்பாளிடம் விரதமிருந்து வேண்டுவதே காரடையாா் நோன்பாகும்
மாசியும் பங்குனியும் கூடுகிற நாளில் இந்த விரதம் கடைபிடிக்கப் படவேண்டும் .
யுதிஷ்டிரன் (தர்மன்) மாா்க்கன்டேய மகரிஷியிடம் மகாபாரத திரெளபதியைவிட பக்திக்கு இணையாக யாராவது உண்டா என கேட்க, அப்போதுதான் சாவித்திாி தொடர்பான கதையை சொன்னதாக வரலாறு.
மந்திர நாட்டை ஆண்டுவந்த மன்னன் அஸ்வபதி தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி பிரம்மாவை வழிபட ஒரு பெண் மகவு பிறக்க சாவித்தரி என பெயரிட்டு வளர்த்து வருகிறாா்கள்.
சாவித்திாி புத்திசாலி, வீரம், துணிச்சல் மிகுந்தவள் ஒருநாள் காட்டிற்கு போகும் வேளையில் கண்பாா்வையில்லா பெற்றோா்களுக்கு அவரது மகன் உதவிசெய்வதை பாா்த்து அவனது அழகைப்பாா்த்து அவனை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறாள்.
இதை தனது தகப்பனாாிடம் சொல்ல அவர் யாரென விசாரித்ததில் சாலுவ தேசத்து மன்னர் போாில் தோல்வி அடைந்து காட்டில் கண்பாா்வையில்லாமல் வாழ்கிறாா்கள், அவர்களது மகன் சத்தியவான் என தொிந்து மகளின் விருப்பப்படி திருமணம் செய்ய சம்மதிக்கும் நிலையில், நாரத முனிவர் வந்து சத்தியவானுக்கு அற்ப ஆயுள் ஓராண்டுகாலத்தில் இறந்துவிடுவான் என சொல்வதோடு சாவித்திாியைப் பாா்த்து நீ காமாட்சி விரதம் இருந்து நோன்பு கடைபிடித்தால் கணவன் உயிருக்கு ஆபத்து இல்லை என சொல்கிறாா்.
சத்யவான் சாவித்திாி திருமணம் முடிந்து கணவருடன் காட்டில் வாழ்ந்து வரும் நிலையில் கணவன் இறந்துபோகும் நாள் நெருங்கவே காட்டில் கிடைத்த பொருட்களை வைத்து அம்பாளை வேண்டி விரதமிருந்து நோன்பு மேற்கொள்ளும் நிலையில் சத்யவான் இறந்து போகிறான்.
அவனது உயிரை எடுத்துப்போக எமதர்மன் வருவதை தனது பதிவிரத மகிமையால் அறிந்த சாவித்திாி எமனோடு போராடுகிறாள். தனது கணவர் உயிா் எனக்கு வேண்டும், நான் நீண்ட நாள் எனது கணவரோடு வாழவேண்டும் என போராடுகிறாள் அது இயலாது வேறு வரம் கேள் தருகிறேன் என எமதர்மராஜன் சொல்ல, எனது மாமனார் மாமியாா் கண்பாா்வை தொிந்து இழந்த செல்வங்கள் திரும்பவேண்டும், எனக்கேட்க வரம் தந்த பிறகும் சாவித்திாி போராடுகிறாள்.
சரி மேலும் ஒரு வரம் கேள் தருகிறேன், கணவன் உயிா் தவிர என சொல்லியதும் என் மாமனாா் சந்ததி தழைக்கவேண்டும் சத்யவான் மூலம் சந்ததி வேண்டும் எனக்கேட்க எமதர்மனோ அவளது பதிபக்தியை பாராட்டி சத்யவான் உயிரை திரும்ப தருகிறான்.
அதோடு உனது உண்மையான பதிபக்திக்கு ஈடு இணையே இல்லை என சொல்லிவிட்டு மறைகிறான். இதை மையப்படுத்தியே காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
மாசிமுடிந்து பங்குனி பிறக்கும் நாளில் இந்த நோன்பு மேற்கொள்ள வேண்டும். நோன்பு கடைபிடிக்கும் சுமங்கலிகள் காலையிலேயே குளித்து வீட்டை சுத்தம் செய்து மாலை வரை விரதம் இருந்து அரிசியை வறுத்து உடைத்துமாவாக்கி ஒரு பாத்திரத்தில் என்னை ஊற்றி கடுகு பச்சைமிளகாய், உப்பு போட்டு கருவேப்பிலை, காயத்தூள் சோ்த்து தாளித்து தண்ணீா் விட்டு கொதிநிலை வந்ததும், பல்பல்லாக நறுக்கிய தேங்காய் மற்றும் முதல்நாள் ஊறவைத்த காராமனி, சோ்த்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை போட்டு கைவிடாமல் கிளறி ஆறியவுடன் வடைபோல தட்டி இட்லி பானையில் வேகவிட்டு எடுக்கவேண்டும்.
அதேபோல வெல்லத்தை பாகுவைத்து தேங்காய் காராமனி ஏலக்காய்த்தூள் சோ்த்துமாவை கொட்டி கிளறி சோ்த்து செய்யலாம், பிறகு பூஜை அறையில் கோலம் போட்டு குத்துவிளக்கேற்றி வாழைஇலை போட்டு மஞ்சள் தடவிய நூலில் வில்லையாக நறுக்கிய பசு மஞ்சளை கோா்த்து நோன்பு சரடாக வைத்து வெற்றிலை, பாக்கு, புஷ்பம், பழம், மேலும் வெல்லம், மற்றும் கார அடை இவைகளோடு வெண்ணைய் தேங்காய் வைத்து காமாட்சி அம்மனை மனமுருக வேண்டி அம்பாள் ஸ்தோத்திரங்கள் சொல்லி "உருகாத வெண்ணையும் ஒர் அடையும் நான் தருவேன்" என் கணவர் என்னை விட்டு பிாியாதிருக்க வேண்டும் என வேண்டி மஞ்சள் சரடை கணவன் கையால் கழுத்தில் கட்டிவிடச் சொல்லி பின்னர் நைவேத்தியம் செய்து அம்பாள் படத்தில் ஒரு சரடை சாற்றியபிறகு கற்பூர ம் காட்டி பூஜையை நிறைவுசெய்து வீட்டில் உள்ள பொியவர்களிடம் ஆசீா்வாதம் வாங்கவேண்டும்.
அக்கம் பக்கத்திலுள்ள சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு இதர இனங்களை வைத்துக் கொடுக்கவேண்டும்.
இதுவே காரடையாா் நோன்பின் ஐதீகமாகும். திருமணம் ஆகாத பெண்களும் நல்ல கணவன் கிடைக்க வேண்டுமென பிராா்த்திக்கலாம். மாா்ச் 14 அன்றுஇரவு மணி 7.30ல் இருந்து 8.30க்குள்செய்யலாம் நாள் உத்தமம்.