காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவில்: அற்புதங்களும் ஆன்மீக ரகசியங்களும்!

நோய்கள் தீர்த்து வளம் பெருக்கும் காரைக்குடி கொப்புடை நாயகியின் சக்திவாய்ந்த புராண வரலாறு மற்றும் வழிபாட்டு சிறப்புகள்!
கொப்புடை நாயகி - Koppudai Nayaki Amman
கொப்புடை நாயகி - Koppudai Nayaki Amman
Updated on

காரைக்குடியில் பெண் தெய்வமான இவள் கோவிலில் லட்சுமி சரஸ்வதியையும் காணலாம். இக்கோவிலில் இவள் உக்ரத்தைத் தணிக்க சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கொப்பு என்பது காது மடலில் அணியும் அணிகலன். நாயக்கர் காலத்தில் பெண் தெய்வங்கள் மற்றும் உயர் குல அரசிகளை நாயகி என குறிப்பிடுவர்.‌ இந்த பெண் தெய்வச் சிலைபஞ்சலோக த்தால் ஆனது‌. எனவே இச்சிலைக்குச் செய்யப்படும் அபிஷேகம் பால் மருத்துவ குணம் கொண்டது இந்த நாயகியை அக்கினிமகுடத்துடனும் நான்கு கரங்களுடன் தரிசிக்கலாம்.

இங்கு மூலவரும் உத்சவரும் ஒன்றேயாகும். இங்கே கருப்பண்ணசாமி குதிரையின் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். பொதுவாக உக்கிர காளி துர்கை போன்ற தெய்வங்கள் வடக்கு நோக்கி இருப்பர். ஆனால் இங்கு அம்மன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். மேல் இருக்கைகளில் பாசமும்,கபாலமும் வலது கரம் அபயஹஸ்தமாகவும், இடது கரத்தில் திரிசூலமும் ஏந்தியுள்ளாள்.

இந்த நாயகி பற்றிய புராணக்கதை சொல்லப்படுகிறது.‌ காடம்மன், தொப்புளை நாயகி என்ற பெயரில் அக்கா தங்கை இருந்தனர். அவர்களில் அக்காவுக்கு ஏழுபிள்ளைகள் பிறந்தன. தங்கைக்குப் பிள்ளை பிறக்கவில்லை‌.

இந்நிலையில் தங்கை தொப்புளை நாயகி தன் அக்காவைப் பார்க்க வரும்போதெல்லாம் அவள் பிள்ளைகளுக்கு பலவித பலகாரம் செய்துகொண்டு வருவாள். தங்கையின் அன்பைக்கண்டு அவள் குழந்தையில்லாததால் கண் திருஷ்டிபட்டு தன் குழந்தைகளுக்கு தீங்கு நேரும் என காடம்மா எண்ணினாள்.

கொப்புடை நாயகி - Koppudai Nayaki Amman
கொப்புடை நாயகி - Koppudai Nayaki AmmanAi Image

தங்கையால் பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்தாள்‌. ஒருமுறை கொப்புடை நாயகி வந்தபோது அவர்களை ஒளித்து வைத்துவிட்டுப் பிள்ளைகள் காணவில்லை என்று பொய் கூறிவிட்டாள். தங்கை அழுதுகொண்டே போய்விட்டாள். அதன்பிறகு காடம்மா தன் பிள்ளைகளைத் தேடினாள்.‌

அவள் பிள்ளைகள் கல்லாக மாறியிருந்ததைக் கண்டு திடுக்கிட்டாள். தங்கை கொப்புடை நாயகியிடம் சென்று மன்னிப்பு கேட்டு பிள்ளைகளை உயிர்ப்பிக்கும்படி கேட்டாள். தங்கை அந்த சிலைகள் மீது தண்ணீர் தெளிக்க ஏழு பேரும் உயிர்பெற்றார்கள்.

பல கோவில்களில் இந்தக்கதை சொல்லப்படுகிறது கொப்புடை நாயகி கோவிலில் சித்திரை செவ்வாய்க் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகிறது.‌ நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்பத்தினர் எந்த மூலையில் இருந்தாலும் சித்திரை கடைசி செவ்வாய் திருவிழாவிற்கு வந்து விடுவார்கள்.‌

அம்மனுக்குப் பொங்கல் வைத்து வணங்கிச் செல்வார்கள். ‌சித்திரைப் பெருவிளழா சித்திரை கடைசி வெள்ளி முதல் வைகாசி முதல் வாரம் முடிய பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதம்: வழிபாடு முதல் கூழ் செய்வது வரை... தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்!
கொப்புடை நாயகி - Koppudai Nayaki Amman

பூச்சொரிதல்

சித்திரையில் நான்கு செவ்வாய் கிழமைகள் வந்தால் இரண்டாம் செவ்வாயன்று பூச்சொரிதல் நடைபெறும். 5 செவ்வாய் கிழமைகள் வந்தால் மூன்றாம் செவ்வாயன்று பூச்சொரிதல் நடைபெறும். மக்கள் பெரிய தாம்பாளங்களில் அம்மனை மூடும் அளவிற்கு பூக்களை காணிக்கையாக செலுத்துவார்கள்.

அன்று முழுவதும் மலர்க்குவியலிலேயே அம்மன் இருப்பாள். ஆடி மாதங்களில் சிறப்பான வழிபாடுகள் நவராத்திரி பங்குனி தாராபிஷேகம் போன்ற வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

ஆதிசங்கரர் சக்கரத்தை இங்கு பிரதிஷ்டை செய்ததால் இக்கோவில் செல்லும்போது ஆகர்ஷண சக்தியை நன்கு நாம் உணரமுடியும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வழிபட்டு நலனைப் பெறுகின்றனர். சரும வியாதிகளையும் இந்த அம்மன் குணப்படுத்துகிறார்.

விவசாயம் தொழில் அபிவிருத்திக்கும் இங்கு வழிபடுகின்றனர்‌. துர்க்கையின் அம்சமாக இவள் விளங்குவதால் கல்வி, வீரம் செல்வம் போன்றவற்றைத் தரக்கூடியதாக இந்த அம்மன் திகழ்கிறாள். காரைக்குடியில் காவல் தெய்வமாகவும் போற்றப் படுகிறாள்.

இதையும் படியுங்கள்:
புட்லூர் அம்மன் கோவில்: குழந்தை வரம் அருளும் நிறைமாத கர்ப்பிணி அம்மனின் அதிசயம்!
கொப்புடை நாயகி - Koppudai Nayaki Amman

இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மனின் அருள் நிறைந்த திருவரலாறு, உக்கிரத்தைத் தணித்த சக்கரத்தின் ரகசியம் மற்றும் சித்திரைத் திருவிழாவின் முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்து, குழந்தைப்பேறு, நோய் நிவாரணம் மற்றும் தொழில் விருத்திக்கான சரியான வழிபாட்டு முறைகளை உணர்ந்து பலன் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com