

நாளை (நவம்பர் 21-ம்தேதி)மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். இந்த நாளை மறந்தும் தவறவிட்டு விடாதீர்கள். இந்த நாள் சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்தில் வரும் மூன்றாம் பிறை சந்திர தரிசன நாளாகும். அதாவது அமாவாசை முடிந்து மூன்றாம் நாளில் வரும். சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சேர்வது தான் அமாவாசை திதி.ஒவ்வொரு அமாவாசை பின்வரும் மூன்றாம் நாள் தான் சந்திர தரிசனம். நாளை இந்த சந்திர தரிசன நாள் அன்று நீங்கள் சந்திரனை பார்ப்பது மிக மிக ஆபூர்வம்.
அதையும் தாண்டி நீங்கள் சந்திரனை பார்த்தால் உங்களுக்கு சிவனின் அருள் மட்டுமில்லை, முருகனின் அருளும் இருக்கிறது என்றே அர்த்தம். கார்த்திகை மாதத்தில் வரும் மூன்றாம் பிறை என்பது முருகப்பெருமானின் கார்த்திகை நட்சத்திரத்துடன் தொடர்புடையது என்பதால் மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த நாளில் சந்திரதரிசனம் செய்வது சகல பாவங்களையும் போக்கி, வாழ்வில் அமைதியையும் செல்வத்தையும் பெருக்கும் என்பது நம்பிக்கை.
பொதுவாகவே மூன்றாம் பிறை அன்று, சந்திர தரிசனம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும். குழப்பமான நிலையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு கூட, சுலபமாக தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம்.
இந்த கார்த்திகை மாதம் வரும் பிறையானது நாளை மாலை 5.25 மணி முதல் 6.39 மணி வரை மட்டுமே தென்படும். நீங்கள் அன்றைய நாளில் (நவம்பர் 21-ம்தேதி) மாலை பொழுதில் சிவன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் அல்லது அன்று மாலை ஆறு மணிக்கு வரும் மூன்றாம் பிறையை தரிசிக்க வேண்டும். அதாவது கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமையான நாளைய தினம் மாலை சந்திர பகவானை தரிசனம் செய்தால் நம் மனதில் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் சகல பாவங்களும் தீரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மாலை ஆறு மணிக்கு சந்திர பகவானை தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
அதேபோல் எப்போதும் வெறும் கையோடு சந்திர பகவானை (மூன்றாம் பிறை) தரிசனம் செய்யக்கூடாது. கையில் 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயம் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு தாம்பாளத் தட்டில் சிறிதளவு பச்சரிசியை பரப்பி, அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்து, உங்களது இரண்டு கைகளையும் ஏந்தி சந்திர பகவானிடம் வேண்டுதல் வைக்க வேண்டும்.
நல்ல மனதோடு, நீங்கள் வைக்கும் எந்த ஒரு நல்ல வேண்டுதலாக இருந்தாலும், அதனை சந்திர பகவான் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.
பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவே சந்திர தரிசனம் என்று குறிப்பிட்டுள்ளதை பார்த்திருப்பீர்கள். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.
ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் மூன்றாம் பிறையில் விரதம் இருந்து தரிசனம் செய்தால் தோஷங்கள் விலகும், முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.
மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.
நாளைய தினம் சந்திர பகவானை நீங்கள் தரிசனம் செய்தால் ஆயிரம் முறை தரிசனம் செய்த பலனை பெற்றுவிடலாம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நாளை மறந்தும் செய்யக்கூடாதவை
* இந்த நேரத்தில் அதாவது மாலை 6 மணிக்கு மேல் யாரும் கடன் வாங்கக்கூடாது.
* அதேபோல் வீட்டின் முன் மற்றும் பின் வாசலை திறந்து வைக்க வேண்டும்.
* வீட்டின் கதவுகளை மூடி வைக்கக்கூடாது.
* அரிசி, உப்பு, புளி, எண்ணெய், மஞ்சள் ஆகிய பொருட்களை கீழே சிந்தி விடாமல் இருக்க வேண்டும்.