கும்பகோணம் வளையப்பேட்டை ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில்: வியாசராஜர் அனுமன் அற்புதங்கள்!

எதிரிகள் பயம் நீக்கும் வளையப்பேட்டை ராஜகோபால சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீ வியாசராஜர் அனுமனின் சிறப்புகள்!
ராஜகோபால சுவாமி - Vyasarajar Hanuman
ராஜகோபால சுவாமி - Vyasarajar HanumanImage credit - Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

கும்பகோணம் வளையப்பேட்டை (Valayapettai) அக்ரஹாரத்தில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.

மூலவர் சீதை ராமர் ஒரே கல்லில் அமைந்துள்ளது மற்றும் லக்ஷ்மணன், திருச்சுற்றில் நாகம், தும்பிக்கை ஆழ்வார், ராமானுஜர், ஆண்டாள், கருடன் ஆகியோர் காணப்படுகின்றனர். இங்கு ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

கும்பகோணம் வளையபேட்டை அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவிலில் மூலவர் ராமர் மற்றும் சீதாப்பிராட்டிக்கு காவலாக வியாசராஜர் அனுமன் அருபாளிக்கிறார். இங்குள்ள அனுமன் 'வியாசராஜர் அனுமன்' என்ற திருநாமத்துடன் எம்பெருமான் ராமருக்குக் காவலாய், பக்தர்களுக்கு அருளுவதாக ஐதீகம்.

மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர்.

சிறப்பம்சங்கள்:

வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்கள் பெரும்பாலும் ஆற்றோரமாகத்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இந்த கோவிலின் அருகிலும் காவேரி நதியின் கிளை நதியான "ஹரிசொல்லாறு" ஓடுகிறது. அதுதான் இன்று மருவி "அரசலாறு" என்று அழைக்கப்படுகிறது. நதிக்கரை ஓரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி

மத்வ மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த நான்கு அனுமன்கள் பக்தர்களுக்காக கும்பகோணத்தில் அருள் பாலிக்கிறார்கள். ஒன்று தோப்புத்தெருவில் இருக்கும் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோவில் உள்ளே, மற்றொன்று ஸ்ரீ சக்கரபாணி சுவாமி கோவில் உள்ளே கொடிமரத்திற்கு அருகிலும், மேலும் இரண்டு அனுமன்கள் பட்டீஸ்வரம் ஸ்ரீ கோபிநாதப் பெருமாள் கோவிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ராஜகோபால சுவாமி - Vyasarajar Hanuman
ராஜகோபால சுவாமி - Vyasarajar Hanuman

தோப்புத்தெரு வளையப்பேட்டை அக்ரஹாரம் கும்பகோணத்தில் உள்ள மற்றொரு அழகான அமைதியான அக்ரஹாரம் ஆகும். இங்கு மூலவராக ராமர், சீதை, லட்சுமணருடன் உற்சவர் ருக்மிணி சத்யபாமா சமேத ராஜகோபாலரும் அருள்புரிகின்றனர். மேலும் மகான் ஸ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேய சுவாமியும் சேவை சாதிக்கிறார்.

வியாசராஜர் பாரதம் முழுவதும் 732 அனுமன் சிலைகளை நிறுவிய பெருமைக்குரியவர். இங்கிருக்கும் அனுமன் சிலை விஜயநகரப் பேரரசின் ராஜகுருவும், மாத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த மகா ஞானியுமான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். வியாசராஜர் நிறுவிய அனுமன் சிலைகளுக்கே உரிய தனித்துவமான முக அமைப்பு, கையில் சௌகந்திகா மலர் அல்லது தண்டு மற்றும் வால் தலைக்கு மேலே உயர்ந்து அதன் நுனியில் சிறிய மணி கட்டப்பட்ட அமைப்போடு இந்த அனுமன் காட்சி தருகிறார்.

பொதுவாக கோவில்களில் அனுமன் ராமரின் பாதத்திற்கு அருகில் அல்லது கைகூப்பிய நிலையில் ராமருக்கு எதிரே காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் மூலவர் ராமபிரான், சீதாப்பிராட்டி, லட்சுமணன் ஆகியோருக்கு காவல் காக்கும் வீரன்போல கையில் தண்டுடன் வாசலில் நின்று அனுமன் அருள் புரிகிறார்.

எதிரிகள் பயம் நீங்கவும், வீடுகளுக்கு திருஷ்டி மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்புப் பெறவும் இத்தலத்து அனுமனை வழிபடுகின்றனர்.

இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று அடுக்கு ராஜகோபுரத்தைக் கொண்டுள்ள இக்கோவிலின் முக மண்டபத்தின் மேல் சக்கரம், பாமா ருக்மணியுடன் கூடிய ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கருடன் மற்றும் கிருஷ்ணரின் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்: 35 அடி பிரம்மாண்ட விஸ்வரூப தரிசனம்!
ராஜகோபால சுவாமி - Vyasarajar Hanuman

நாரதர் மற்றும் தும்புருவின் கதைச் சிற்பங்களும் உள்ளன. தனிக்கோவில் நாச்சியார் வடக்கு நோக்கி தனி சன்னதியில் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயாராக காட்சி தருகிறாள். கோவில் விமானம் செங்கற்களால் ஏக தால வேசர பாணியில் உள்ளது.

இக்கோவில் 16 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான விஜயநகர நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற மகாமகம் தீர்த்தவாரி திருவிழாவில் பங்கேற்கும் 5 விஷ்ணு கோவில்களுடன், கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோயில்களும் மகாமகத் திருவிழாவில் கலந்துகொள்கின்றன.

திருவிழாக்கள்:

சனிக்கிழமைகள், மூல நட்சத்திர நாட்கள் மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகிய தினங்களில் இந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், வடைமாலை மற்றும் வெண்ணெய் காப்பு அலங்காரங்களும் செய்யப் படுகின்றன. மார்கழி, வைகுண்ட ஏகாதசி, கருட சேவை, அக்ஷய திருதியை, கிருஷ்ண ஜெயந்தி, மகாமகம் விழா நாட்கள் போன்ற நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

கோவிலில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
ராஜகோபால சுவாமி - Vyasarajar Hanuman

எங்குள்ளது?

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவிலும் வளையப்பேட்டை அக்ரஹாரம் அமைந்துள்ளது.

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் கும்பகோணம் வளையப்பேட்டை ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோவிலின் வரலாற்று மகிமை, இங்குள்ள வியாசராஜர் அனுமனின் தனித்துவமான காவல் திருக்கோலம் மற்றும் தீய சக்திகள், திருஷ்டி பயம் நீங்கப் பெறக்கூடிய ஆன்மீக வழிபாட்டு முறைகளைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com