மார்கழி மாதம் தவறாமல் விளக்கேற்றுங்கள்: சகல சௌபாக்கியங்களும் உங்களைத் தேடி வரும்!

Markazhi Deepa Vazhipadu Palangal
Markazhi Deepa Vazhipadu
Published on

மது கலாசாரத்தில் 'விளக்கு' என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாயிலில் அதிகாலை விளக்கேற்றி வழிபடுவது அனைத்து சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும். தேவர்களின் அதிகாலை பொழுதாக விளங்கும் இம்மாதத்தில் வீட்டில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது வீட்டில் சுபீட்சத்தைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூட ஆன்மிக விதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

விளக்கை ஏற்றும்போது, அதற்கு விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இப்பொருட்களை உபயோகிக்கும்போது மட்டும்தான், விளக்கின் தீபத்தில் ஓரு ஒளி வட்டம் வெளிப்படுகிறது. இந்த ஒளி வட்டத்தினால் நாம் வசிக்கும் இடம் சுத்தமாகும், நமக்கு நன்மை தரும் வாய்ப்புகளும் அதிகரிக்கிறது என்கிறார்கள். அன்றாடம் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மகிமையை தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள்:
செல்வச் செழிப்பிற்கு வழிகாட்டும் குறிச்சி அஷ்ட தச புஜ மகாலட்சுமி கோயில்!
Markazhi Deepa Vazhipadu Palangal

விளக்குகளில் காமாட்சி விளக்கு, பாவை விளக்கு, அன்னபட்சி விளக்கு, அகல், செம்பு, வெள்ளி விளக்கு, நில விளக்கு என பல வகை உண்டு. தினமும் காலை, மாலை விளக்கேற்றுவது நம் பண்பாடு. சிலர் ஒற்றைத் திரி, இரட்டைத் திரி, நான்கு திரி, ஐந்து திரி எனப் போட்டு ஏற்றுவர். பஞ்சுத்திரி, வாழைத் தண்டு திரி, நூல் திரி இப்படி பல திரிகளிலும் விளக்கு ஏற்றுபவர்கள் உண்டு.

தாமரை நூல் திரியில் விளக்கு ஏற்றினால் செல்வம் நிலைக்கும். முன்வினை பாவம் நீங்கும் என்பதும், பஞ்சுத் திரியில் விளக்கு ஏற்றினால் மங்கலம் நிலைத்து நிற்கும், வாழைத் தண்டு திரியில் விளக்கு ஏற்றினால் மனசாந்தி உண்டாகும், வெள்ளை எருக்கம்பட்டை திரியில் விளக்கு ஏற்றினால் செல்வம் உண்டாகும், துன்பம் நீங்கும், புது மஞ்சள் துணியில் திரி செய்து விளக்கு ஏற்றினால் தீய சக்திகள் நம்மை விட்டு நீங்கி, தெய்வ அருள் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

விளக்குகளை நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவது உத்தமம். கேரள பகுதிகளில் மாலை 6.30 மணிக்கு முற்றத்தை பெருக்கி சுத்தம் செய்து, நில விளக்கை இருபுறமும் திரி போட்டு ஏற்றுவர். வாசல் முற்றத்தில் வைக்கும்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் ராம நாமம், சிவ நாமம் சொல்வர். சூரியன் மறையும்போது விஷ சக்திகள், விஷ ஜந்துக்கள் வீட்டிலே நுழையும்.  அதனைத் தவிர்க்கவும், விளக்கேற்றி நாமம் சொல்லும்போது. அந்த இடத்தில் தெய்வீக சக்தி நிறையும் என்பதாலும் இப்படிச் செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
டிசம்பர் 15 ரமா ஏகாதசி - பாவங்கள் நீங்கி, நற்பலன்களை தரும் புனித நாள்...
Markazhi Deepa Vazhipadu Palangal

காலை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் 4 மணிக்கு, பல வீடுகளில் விளக்கேற்றுவர். செம்பு, அகல், வெள்ளி விளக்கேற்றும்போது, நம் உடலில் எந்த குறைபாடு உள்ளதோ, அதற்கேற்றபடி ஏற்றினால் குறை நீங்கும். மனம் சஞ்சலப்படும்போது, பெரிய நில விளக்கில் நெய்யும் நல்லெண்ணெயும் ஊற்றி விளக்கேற்றி, அசையாமல் சுடர் விடும்போது, கண் திறந்து அமர்ந்து சுடரை நோக்கும்போது சஞ்சலம் நீங்கி, மனம் தெளிவு பெறும். பசு நெய்யில் தீபம் ஏற்றினால் செல்வ வளம் கொழிக்கும், இலுப்பெண்ணெய் விளக்கேற்றினால் நல்லது. முக்கூட்டு விளக்கேற்றினால் க்ஷேமம் உண்டாகும் என்பதும் ஐதீகம்.

பொதுவாக, அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்ற உகந்த நேரம் ஆகும். மாலையில் 5.30 மணியில் இருந்து 6 மணிக்குள் தீபம் ஏற்றி விளக்கு பூஜை செய்தால் மிகுந்த பலன் தரும். விளக்குகளை கிழக்கு திசையில் ஏற்றி வழிபட கிரக தோஷமும், துன்பங்களும் நீங்கும். கடன் தொல்லையிலிருந்து விடுதலை பெற மேற்கு நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும். இதனால் உறவுகளின் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும். வடக்கு திசையை நோக்கி ஏற்றினால் செல்வம், ஞானம், அறிவு மற்றும் மகிழ்ச்சி பெருகும். தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றக் கூடாது. ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதுபோல, கோயில்களில் தீப தானம் செய்வதால் உயர்ந்த பதவிகளும், பொறுப்புகளும் வந்து சேரும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
குலதெய்வம் கோயிலில் இனிப்புப் பொங்கல் படைப்பதன் ரகசியம் தெரியுமா?
Markazhi Deepa Vazhipadu Palangal

மகாலட்சுமி வாசம் செய்யும் மங்கலகரமான இலை வெற்றிலை. இந்த இலையில் முறைப்படி தீபத்தை ஏற்றி வழிபட்டால் தீராத பணக்கஷ்டம் விரைவில் தீர வழி பிறக்கும். இந்த வழிபாட்டை மேற்கொள்ள ஒரு வெற்றிலையும், சின்ன மண் அகல் விளக்கும் தேவை. மண் அகலில் பசு நெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். திரி மஞ்சள் நிறத்தில் இருக்க கொஞ்சமாக மஞ்சள் தூளில் தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி இந்த திரியை போட்டு பிசைந்த நிலையில் காய வைத்தால் மஞ்சள் திரி தயார். மஞ்சள் செல்வம் தரும் குரு பகவானுக்கு உகந்தது.

பொதுவாக, பெண்களில் சிலர் வீடுகளில் எல்லா நாட்களிலும் விளக்கேற்றி பூஜைகள் செய்வர். இன்றும் பல வீடுகளில் தினமும் மாடப்பிறையில் அகல் விளக்கு ஏற்றி வைப்பவர்கள் உண்டு. தினமும் வீட்டு வாயிலில் அகல் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com