பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உலகோர்க்கு உணர்த்தும் அருளுரைகள்!

Sri Krishna
Sri Krishna
Published on

* எந்த புருஷன் எல்லா ஆசைகள், விருப்பம், அகங்காரம் முதலியவற்றை விலக்கி, தனது  கடமைகளை புரிகிறானோ அவனே மன சாந்தி அடைகின்றான்.

* உண்மையில் ஒரு கண நேரமாவது எவனும் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனது சுபாவ குணங்களால் கட்டுப்படுத்தப்பட்டு கர்மத்தைச் செய்ய வேண்டியவனாகிறான்.

* அன்னத்தால் உயிர்கள் உண்டாகின்றன; அன்னம் மழையால் உண்டாகிறது; மழை யக்ஞத்தால் பெய்கின்றது; யக்ஞம் கர்மத்தால் ஆகின்றது.

* தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும்பொழுது நல்லோர்களைக் காப்பதற்காகவும் கொடியவர்களை நாசம் செய்து தர்மத்திற்கு புத்தியிர் அளித்து பரிபாலிக்க ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன்.

* ஆசையை விலக்கி, தனது மனதை வசப்படுத்தி எல்லாப் பொருட்களையும் விட்டுவிட்டு சரீரத்தால் மட்டுமே கர்மம் செய்பவன் தனது கர்மத்தால் எவ்விதமான தோஷத்தையும் அடைய மாட்டான்.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே கருடனுக்கு தனி கோயில் அமைந்த திருத்தலம் தெரியுமா?
Sri Krishna

* சிரத்தையுடன் கூடியவன், கடவுளை சரண் புகுந்தவன், புலனை அடக்கியவன் போன்ற இவ்வித புருஷன் ஞானமடைகின்றான். ஞானம் பெற்றவுடன் பரம சாந்தி நிலைய எய்துகிறான்.

* கர்மங்களை பிரம்மத்தினிடம் அர்ப்பணம் செய்து, பற்றை ஒழித்து தனது கடமையைச் செய்பவன் தாமரை இலை மேல் நீர்த்துளி ஒட்டாமல் இருப்பது போல் பாபத்தினால் தீண்டப்பட மாட்டான்.

* சமநிலை பெற்ற மனத்தோன் இவ்வுடலில் இருந்த வண்ணமே சம்சாரத்தை வென்றவன் ஆகிறான். பிரம்மம் களங்கமற்ற சமநிலை உடையது. ஆதலால் அவன் துன்பத்தில் நிலைபெறுகிறான்.

* தனது சொரூபத்தை உணர்ந்து காமத்தையும் குரோதத்தையும் வென்று மனத்தை வசப்படுத்திய முனிவர் பிரம்ம நிர்வாண சுகத்தால் சூழப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சாய்ந்த லிங்கத்தை நேராக நிமிர்த்திய குங்கிலியகலய நாயனாரின் சிவ பக்தி!
Sri Krishna

* என்னை எல்லாவிடத்திலும், இப்பிரபஞ்சம் முழுவதையும் என்னிடத்தில் எவன் பார்க்கிறானோ அவன் என் பார்வையிலிருந்து விலகுவதில்லை. நானும் அவனது பார்வையில் இருந்து மறைவதில்லை.

* எவன் ஒருவன் என்னை எந்த ரூபத்திலும் தியானிக்கின்றானோ, தொழுகின்றானோ அவனுக்கு அந்தந்த ரூபத்தில் நான் காட்சியளிக்கின்றேன்.

* எனது யோக மாயையால் மூடப்பட்டிருக்கும் நான் எல்லோருக்கும் புலப்பட மாட்டேன். பிறப்பும், இறப்பும் இல்லாத என்னை இந்த மூட உலகம் நன்கு அறியாது.

* இறுதிக் காலத்திலே என்னை நினைத்தவண்ணமே தனது தேகத்தை துறப்பவன் எனது சொரூபத்தை அடைகின்றான். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

* மனத்தை வென்று, பூர்ண சாந்தி அடைந்தவனுடைய ஆத்மா சீதோஷ்ணம், சுக, துக்க, மான, அவமானம் முதலியவற்றில் ஒரேவித மனோபாவத்துடன் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com