மன மயக்கம்
மன மயக்கம்

மன மயக்கத்தை அறுக்கும் மனத் தெளிவு!

Published on

ம் வாழ்க்கையின் இதுநாள் வரையிலான காலத்தைத் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை நம்மால் உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள் எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் எதுவும் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது. வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்தானே? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

இதையும் படியுங்கள்:
‘பழுதை கட்டி’ என்றால் என்னவென்று தெரியுமா?
மன மயக்கம்

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்ற வண்ணமே  இருக்கின்றன. அந்த விதத்தில் என்றும் நாம் தனியர்களேதானே? இயற்கையின் விதியே இதுதான் என்று உளமார உணர்ந்து தெளியும்போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

வெற்றிகள் கிடைக்கும் போது ‘இதுவும் கடந்து போகும்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது. தோல்விகள் வருத்தும் போது இதுவும் கடந்து போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும்போது  இதுவும் கடந்து போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள்.

இதையும் படியுங்கள்:
கஷ்டங்கள் தீர்க்கும் காருகுறிச்சி களக்கோடி தர்ம சாஸ்தா!
மன மயக்கம்

தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது இதுவும் கடந்து போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மன அமைதியை இழக்க மாட்டீர்கள்.

நெற்றி சுருங்கும் போதெல்லாம் இதுவும் கடந்து போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய்  முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com