சிவபெருமானே கையால் எழுதிய திருவாசகம்: மாணிக்கவாசகரின் மெய்சிலிர்க்கும் வரலாறு!

glories of Shiva Puranam
glories of Shiva Puranam
நெய்வாசல் நெடுஞ்செழியன்

தொழில்: விவசாயம், விற்பனை பிரிதிநிதி மற்றும் பத்திரிகை பணி பத்திரிகை அனுபவம்: 40 ஆண்டுகள் வளர்தொழில் மாத இதழில் மாவட்ட செய்தியாளராக பத்தாண்டுகள் பணி நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் வணிக கட்டுரைகள் தினத்தந்தி ஆன்மீக பிரிவுக்காக 200க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகள் மற்றும் சப்தகிரி, கல்கி தீபம் போன்றவற்றிலும் ஆன்மீக தினமணிகதிர், தினமலர் வாரமலர், மை விகடன், சிறுகதை டாட் காம் இதழ்களில் 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள். தினமலர் அமரர் ராமசுப்பையர் நினைவு சிறுகதை போட்டியில் மூன்று தடவை பரிசு, தினமணி கதிரில் எழுதப்பட்ட கதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு தற்போது விகடன் குழுமத்தின் பசுமை விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், குமுதம் குழுமத்தின் மண்வாசனை மற்றும் கல்கி குழும இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடலூர் மாவட்ட பாடல் பெற்ற தலங்கள் என்னும் ஆன்மீக நூல், வெற்றிப் படிகள் என்னும் தன்னம்பிக்கை கட்டுரைகள் அடங்கிய நூல், தேடக் கிடைக்கும் திறந்திட வரும் என்னும் தன்னம்பிக்கை கவிதை நூல். என்றும் இனிதாய் வாழ்வோம் என்னும் நாவல் ஆகியவற்றை பிரசுரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Updated on

சிவபுராணத்தின் பெருமைகள்:

தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக்கொண்டார். எழுதிக்கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்துவிட்டார்.

மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் "மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப்பட்டிருந்தது. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் "ஆம் அடியேன் சொல்ல எழுதப்பட்டதுதான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார். தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

மாணிக்கவாசகர், மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி "இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள்" என்றார். அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்துவிட்டார். ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

இதையும் படியுங்கள்:
இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும் - ஏன் தெரியுமா?
glories of Shiva Puranam

சிறப்புக்கள்: 1. நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் தொடங்குகிறது. 2. சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும். சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும். சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும். திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

ரமண மகிஷி, திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார். காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்கசொன்னார். அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com