இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும் - ஏன் தெரியுமா?

Lord Shiva
Lord Shiva
நெய்வாசல் நெடுஞ்செழியன்

தொழில்: விவசாயம், விற்பனை பிரிதிநிதி மற்றும் பத்திரிகை பணி பத்திரிகை அனுபவம்: 40 ஆண்டுகள் வளர்தொழில் மாத இதழில் மாவட்ட செய்தியாளராக பத்தாண்டுகள் பணி நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் வணிக கட்டுரைகள் தினத்தந்தி ஆன்மீக பிரிவுக்காக 200க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகள் மற்றும் சப்தகிரி, கல்கி தீபம் போன்றவற்றிலும் ஆன்மீக தினமணிகதிர், தினமலர் வாரமலர், மை விகடன், சிறுகதை டாட் காம் இதழ்களில் 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள். தினமலர் அமரர் ராமசுப்பையர் நினைவு சிறுகதை போட்டியில் மூன்று தடவை பரிசு, தினமணி கதிரில் எழுதப்பட்ட கதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு தற்போது விகடன் குழுமத்தின் பசுமை விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், குமுதம் குழுமத்தின் மண்வாசனை மற்றும் கல்கி குழும இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடலூர் மாவட்ட பாடல் பெற்ற தலங்கள் என்னும் ஆன்மீக நூல், வெற்றிப் படிகள் என்னும் தன்னம்பிக்கை கட்டுரைகள் அடங்கிய நூல், தேடக் கிடைக்கும் திறந்திட வரும் என்னும் தன்னம்பிக்கை கவிதை நூல். என்றும் இனிதாய் வாழ்வோம் என்னும் நாவல் ஆகியவற்றை பிரசுரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Updated on

ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று தில்லையில், சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் பாடிய 'திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

மாணிக்கவாசகர் 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார். எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

மறுநாள் தில்லை வாழ் அந்தணர்கள் கூத்தபெருமான் சன்னதியில் ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்த்தனர். அதன் கடைசி ஓலையில், 'மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது' என கையொப்பம் இடப்பட்டிருந்ததைப் பார்த்து திகைத்து மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கேட்டு அவரை அழைத்துவந்து அதன் பொருள் யாது எனக் கேட்டனர்.

மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோல பெருமானைக் காட்டி அனைத்துக்கும் இவர்தான் பரம்பொருள் என்றார். அடுத்தநொடி பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்தார். ஆனி மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள்.

இதையும் படியுங்கள்:
7 நாட்கள் 7 நிறங்கள்; எந்த நாள் எந்த நிறம்?
Lord Shiva

சிவபுராணத்தின் சிறப்புகள்:

திருவாசகத்தின் முதல் பதிகம் நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் தொடங்கும்.

முதல் 6 வரிகள் வாழ்க என முடியும். அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும். அடுத்த 8 வரிகள் போற்றி என முடியும்.

இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

சிவபுராணத்தின் 32 வது வரியில், 'மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்' எனப் பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

திருவாசகத்தின் 18 வது வரியான 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும். இது முக்திப்பேறு தரும்.

ரமணமகரிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் மிகவும் மர்மமான கோயில் இதுதான்!
Lord Shiva

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஓம் நமச்சிவாய..

logo
Kalki Online
kalkionline.com