சகல சௌபாக்கியமும் தரும் மார்கழி மாதத்தில் சுப காரியங்களை செய்ய மாட்டார்கள்.... ஏன் தெரியுமா?

மார்கழி மாதம் முழுவதும் லட்சுமி நாராயணரோட அருள் மிகவும் பரிபூரணமாக இருக்கும் என்பதால் இந்த மாதத்தில் மூன்று விஷயங்களை செய்ய மறக்காதீங்க...
lakshmi narayanar
lakshmi narayanar
Published on

தமிழ் மாதங்களில் மகத்துவமானது தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி மாதம் தான். அதுவும் மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான்.

மார்கழி மாதத்தில் திருமணம், வளைகாப்பு, புதிய தொழில் துவங்குவது, புதிய வீட்டிற்கு குடிபோவது உள்ளிட்ட சுப காரியங்களை செய்ய மாட்டார்கள். இவற்றை தவிர்த்து, தெய்வ வழிபாட்டிலும், விரதம், மந்திர ஜபம் போன்ற ஆன்மீக பணிகளிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது, இந்த மாதம் முழுவதும் எந்தவித கெட்ட சிந்தனைகளும் இல்லாமல், இறைவனின் நாமங்களையும், புராணங்களையும் மனப்பூர்வமாக பாராயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தாண்டுக்கான மார்கழி மாதம் இன்று (டிசம்பர் 16ம் தேதி) காலை 04.27 மணிக்கு பிறந்தது.

மார்கழி மாதம் முழுவதும் லட்சுமி நாராயணரோட அருள் மிகவும் பரிபூரணமாக இருக்கும் என்பதால் இந்த மாதத்தில் மூன்று விஷயங்களை கடைபிடித்தால் சகல ஐஸ்வர்யங்களும் உங்களைத்தேடி வரும்.

இதையும் படியுங்கள்:
மார்கழி மாதம் தவறாமல் விளக்கேற்றுங்கள்: சகல சௌபாக்கியங்களும் உங்களைத் தேடி வரும்!
lakshmi narayanar

அதிலும் முதல் விஷயம் தான் ரொம்பவே முக்கியமானது. மார்கழி மாதம் முழுவதும் நீங்கள் அதிகாலையில் 3 மணியில் இருந்து 5.30 மணிக்குள், அதாவது பிரம்ம முகூர்த்த நேரத்திற்குள் எழுந்து விட வேண்டும். எதற்கு என்றால் பிரபஞ்சத்தில் இருந்து பூமிக்கு வரும் அந்த தெய்வீக சக்தி மார்கழி மாசத்தில் ரொம்பவே அதிகமாக இருக்கும். நீங்க காலையில் எழுந்தரிக்கும் அந்த பிரம்ம முகூர்த்த நேரம் எதற்கு சமம் என்றால் உங்களுக்கு பிடித்த கடவுளை நோக்கி ஒரு மாசம் முழுவதும் தொடர்ந்து யாகம் நடத்துவதற்கு சமமாகும். சும்மா ஒரு நாள் முழுவதும் யாகம் நடத்தினாலே, அதிலிருந்து வரும் புண்ணியம் அவங்க வாழ்க்கையை மிகவும் சிறப்பானதாக மாற்றும் சக்தி படைத்தது. அப்படி என்றால் ஒரு மாதம் என்றால் அந்த நேரத்தின் சக்தியை புரிந்து கொள்ளுங்கள்.

அந்த வகையில் தெய்வீக ஆற்றல் நீங்கள் காலையில் எழுந்தரிக்கும் அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் அடங்கியுள்ளது.

அந்த நேரத்தில் எழுந்து உங்களுடைய காலைக்கடன்களை எல்லாம் முடித்து விட்டு பூஜையறையில் கிழக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்.

அந்த திசையில் லட்சுமி தேவி இருக்கிறாள். அது கூடவே ‘ஓம் லட்சுமி நாராயணா நமோ நமக’ என்ற மந்திரத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லாம். எத்தனை முறை சொன்னாலும் பலன் நிச்சயம். அப்படி இல்லையென்றால் ஆண்டாளின் திருப்பாவையை படிக்கலாம். இவ்வாறு செய்வதால் உங்களது ஆன்மாவும் மனசும் தூய்மையாகும்.

இரண்டாவது விஷயமாக மார்கழி மாதத்தில் தினமும் காலையில் கோவிலுக்கு செல்வது மிகவும் நல்லது. அதுவும் பெருமாள், ஆண்டாள், லட்சுமி தேவியை தரிசனம் செய்வது 10 மடங்கான புண்ணியத்திற்கு சமம்.

இப்போது முக்கியமான மூன்றாவது விஷயம் என்னவென்றால் பொதுவாக மார்கழி மாதம் என்றாலே பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து அரிசி மாவினால் கோலம் போடுவது தான் விசேஷம்.

கோலம் போடுவதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் இதற்கு பின்னால் ஒரு ஆன்மிக ரகசியம் உள்ளது. அதாவது நீங்கள் வாசலில் கோலம் போடும் போது நீங்க போடும் கோலத்திற்கு தனி சக்தி அடங்கியுள்ளது. ஒவ்வொரு கோலத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கு. ஆனால் பொதுவான சக்தி என்னவென்றால் பிரபஞ்சத்தில் இருந்து வர தெய்வீக ஆற்றலை நாம் போட்ட கோலம் ஃபுல்லா இழுத்து வைத்துக்கொள்ளும். நாம் ஒவ்வொரு முறையும் அந்த கோலத்தை கடந்து செல்லும் போதும் அந்த கோலத்தில் உள்ள தெய்வீக ஆற்றல் நம்முடைய உடலுக்கு வந்துசேரும். இந்த கோலத்தை பார்த்தால் அன்னை மகாலட்சுமியே அந்த வீட்டிற்குள் போய் குடியேறுவாள் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த வேளையில் இப்படி விளக்கேற்றி பாருங்கள்!
lakshmi narayanar

அதேபோல் முதல் இரவே கோலம் போட்டு வைப்பது தவறு. மார்கழி மாதத்தில் கோலத்தின் நடுவே பசுஞ்சாணம் வைத்து அதில் பூசணிப்பூ வைத்து அலங்காரம் செய்தால் இந்திரனின் அருள் கிடைக்கும். மேலும் இதனால் வீட்டில் பணவரவும் சகல சௌபாக்கியங்களும் என்றும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com