இறைவன் அருளைப்பெற மலர் வழிபாடு: தவிர்க்க வேண்டிய பூக்கள், பின்பற்ற வேண்டிய விதிகள்!

pooja-flower-rules
pooja-flower-rules
Updated on

ல்லி பூவால் இறைவனை அர்ச்சனை செய்தால் செல்வம் பெருகும்.

நாகலிங்கப்பூவால் அர்ச்சனை செய்தால் லட்சுமி கடாட்சம் ஆரோக்கியம் கிடைக்கும்.

பூவரசம் பூவால் அர்ச்சனை செய்தால் உடல் நலம் பெறும்.

வாடாமல்லி பூவால் அர்ச்சனை செய்தால் மரண பயம் நீங்கும்.

தாமரைப் பூவால் அர்ச்சனை செய்தால் செல்வம் சேரும்.

மல்லிகை பூவால் அர்ச்சனை செய்தால் மனம் அமைதி பெறும்.

செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்தால் புதிய உயிர் தோன்றும்.

நித்திய கல்யாணி பூவால் அர்ச்சனை செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

ஆவாரம் பூவால் அர்ச்சனை செய்தால் நினைவாற்றல் தொடரும்.

சம்பங்கி பூவால் அர்ச்சனை செய்தால் இடம் மாற்றம் கிடைக்கும்.

கொடி ரோஜா பூவால் அர்ச்சனை செய்தால் குடும்ப பிரச்சினைகள் தீரும்.

அரளிப் பூவால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும்.

அரளிப் பூவால் அர்ச்சனை செய்தால் கடன் கிடைக்கும்.

செந்தாமரை பூவால் அர்ச்சனை செய்தால் செல்வம் தொழிலில் மேன்மை ஏற்படும்.

வெண் தாமரைப் பூவால் அர்ச்சனை செய்தால் மனதில் தைரியம் பிறக்கும்.

தங்க அரளி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் மாங்கல்ய பிரார்த்தி ஏற்படும் கடன் ஏற்படாது.

சிவப்பு அரளி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் கவலை நீங்கி குடும்ப ஒற்றுமை பெருகும்.

நீல சங்கு புஷ்பம் கொண்டு அர்ச்சனை செய்தால் தரித்திரம் நீங்கும்.

மனோரஞ்சிதம் பூ கொண்டு அர்ச்சனை செய்தால் குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தி கணவன் மனைவிக்குள் அன்பை பெருக்கும்.

பாரிஜாதம் அல்லி பூ போன்ற சற்று மங்கலான வெள்ளை நிற பூக்களால் அர்ச்சனை செய்தால் சந்திரனின் அருளை பெற்று புத்தி வலிமை பெருகும்.

பாசி பச்சை மரிக்கொழுந்து போன்றவற்றால் அர்ச்சனை செய்தால் அறிவு பெருகும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் நேர்மறை சக்தியை அதிகரிக்க பூஜையறையில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்கள்!
pooja-flower-rules

சிவபெருமானுக்கு கொன்றை மலர் மிகவும் விசேஷமானது. கொன்றை பூவுக்கு ஆறுதளங்கள் பஞ்சாட்சர மந்திரத்துடன் பிரணவத்தையும் சேர்த்தால் ஆறு எழுத்துக்கள் கொன்றை மலருக்கு உள்ள ஆறு தளங்களும் ஆறு அட்சரங்களை உணர்த்துகின்றன. கொன்றை மலர் சாத்தி வழிபடும் பக்தர்களுக்கு தனது திருவடிகளில் இரண்டற கலக்கும் சாயூஜ்ய பதவி அளித்து அருளுகிறார் சிவபெருமான்.

பூக்களில் சிறந்தது தாமரை பூவே வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் உகந்தது தாமரை மலரே மகாலட்சுமி தாயார் விரும்பி தங்கும் இடமும் தாமரை மலரில் தான்.

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்க பூ. பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி செவ்வந்தி தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் விலகும்.

வில்வ இலையை பறித்து ஆறு மாதங்கள் வரையிலும், வெண் துளசியைப் பறித்து ஓராண்டு வரையிலும், தாமரையை பறித்து ஏழு நாள் வரையிலும் அரளியை பறித்து மூன்று நாட்கள் வரையில் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தலாம்.

இறைவனுக்காக துளசியை பறிக்கும்போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் திருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்த்தசி அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு மாலை வேளை இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பூஜைக்காக துளசியை பறிக்கலாம்.

விஷ்ணுவுக்கு துளசி இலையால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல சிவபெருமானுக்கு வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.

துலுக்க சாமந்திப் பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்க கூடாது.

அட்சதை வெள்ளெருக்கு ஊமத்தை முதலியன விஷ்ணுவுக்கு ஆகாத மலர்கள்.

செம்பருத்தி தாழம்பூ ஜபா புஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாது.

அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாது.

வில்வம் சூரியனுக்கு ஆகாது.

துளசி விநாயகருக்கு கூடாது.

இதையும் படியுங்கள்:
விதவிதமான மலர் பூஜையும் வித்தியாசமான பலன்களைப் பெற்றுத் தரும் சிவ வழிபாடும்!
pooja-flower-rules

பார்வதி தேவிக்கு நெல்லிக்காய் மலை எருக்கும் பூ போன்றவற்றை வைத்து அர்ச்சனை செய்யக்கூடாது.

பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.

பைரவருக்கு நந்தியாவட்டம் பூக்களை சமர்ப்பிக்க கூடாது.

பூஜை செய்யும்போது பூக்களை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும். அதை கிள்ளி சிறிது சிறிதாக பிய்த்து எடுத்து போடக்கூடாது.

வில்வம் துளசி இலையை மட்டுமே இறைவனுக்கு அர்ச்சனை செய்ததை மீண்டும் பயன்படுத்தலாம். மற்ற மலர்களை மீண்டும் பயன்படுத்த கூடாது.

logo
Kalki Online
kalkionline.com