

நாம் தெய்வத்திற்கு செய்யும் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் குறிப்பிட்ட மகத்துவம் உண்டு. அம்மன் கோவில்களில் பொதுவாக மாவிளக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். இந்த வேண்டுதல் நம் அன்னைக்கு நாம் செய்யும் உபசாரம் மட்டுமல்ல. இந்த வேண்டுதல் நம் உடலாகிய கோவிலைத் தூய்மைப்படுத்தும் அறிவியல் பேரொளி என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இதற்குப் பின்னால் சிறந்த மருத்துவ அறிவியல் உள்ளது. அம்மன் வழிபாட்டில் மிக நெகிழ்ச்சியான வழிபாடு மாவிளக்கு போடுதல். குறிப்பாக ஆடி மற்றும் வைகாசி மாதங்களில் அன்னைக்கு மாவு இடித்துப் படைப்பது நம் வழக்கம் இன்னும் சில பக்தர்கள் தங்கள் கடுமையான நோய்கள் தீரவேண்டும் என்பதற்காக தங்கள் உடலின் மீதோ, நெஞ்சிலோ இந்த மாவிளக்கு வைத்து தீபம் ஏற்றுவதைப் பார்த்திருப்போம்.
பார்ப்பதற்கு உக்ரமாகத் தோன்றும் இந்த வழிபாட்டு முறைக்குப் பின்னால் நம் முன்னோர்கள் ஆழமான சித்த மருத்துவ ரகசியத்தை மறைத்து வைத்துள்ளனர். அதைப்பற்றிய சுவாரசியமான உண்மை இதோ:
மாவிளக்கு தயாரிக்க பயன்படும் பொருட்கள் பச்சரிசி மாவு, வெல்லம், பசு நெய், மற்றும் ஏலக்காய்.
அறிவியல் ரகசியம்
பச்சரிசி மாவு உடலின் உஷ்ணத்தை உறிஞ்சூம் தன்மை உடையது. வெல்லம் மற்றும் நெய் ஆகியவை உடலின் பித்தத்தைக் தணிக்கும். ஏலக்காய் வாயுத் தொல்லைகளை நீக்கும். இவை அனைத்தும் ஒன்று சேரும்போது அது வெறும் உணவல்ல.. ஒரு உன்னத மருத்துவக் கலவையாக மாறுகிறது. வயிற்று வலி,அல்சர்,நெஞ்சு எரிச்சல் மற்றும் இதயக்கோளாறு உள்ளவர்கள் தங்கள் உடலின் அந்தப் பகுதிகளில் மாவிளக்கு வைத்து தீபம் ஏற்றுவார்கள்.
மருத்துவ ரகசியம்
மாவிளக்குமாவை உடலில் வைக்கும்போது அது அந்தப்பகுதியில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை காந்தம் போல் உறிஞ்சத் தொடங்கும். அதன் மேல் எரியும் மிதமான நெய் தீபத்தின் மிதமான வெப்பம் தோலின் வழியே உடலுக்குள் இறங்கி நரம்பு மண்டலத்தை சீராக்கும். இது இன்றைய நவீன மருத்துவத்தில் சொல்லப்படும் அக்குபிரஷர் மற்றும் வெப்ப சிகிச்சை போன்றதுதான்.
நம் உடல் நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது.
பச்சரிசி மாவு நிலம்
வெல்லத்தில் ஈரப்பதம் நீர்
நெய் தீபம் நெருப்பு
தீபத்தின்புகை ஏலக்காய் வாசனை காற்று
விளக்கு எரியும் வெளி ஆகாயம்
இப்படி மாவிளக்கு ஏற்றும்போது பஞ்சபூத ஆற்றல்களும் சம நிலைக்கு வருகின்றன. இதன் மூலம் நோய்கள் குணமடைகின்றன என்பது சித்தர்களின் வாக்கு. அன்னைக்கு கொடுக்கும் மாவிளக்கு நமக்கு பிரசாதமாக கிடைக்கிறது. அன்னை எதையும் எதிர்பார்ப்பதில்லை. நம் உடலும் மனமும் ஆரோக்கியமாக சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்காகவே இத்தகைய வழிபாட்டு முறைகளை முன்னோர் வகுத்துள்ளனர்.
மாவிளக்கு நாம் அன்னைக்கும் செய்யும் உபசாரம் மட்டுமல்ல அது நம் உடலை தூய்மைபடுத்தும் அறிவியல் பேரொளி என்பதை உணர்ந்து இந்த வேண்டுதலை செய்யவேண்டும்.