முருகனின் அருளைப் பெற நவம்பர் 22 முதல் 26 வரை செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடு!

வருகின்ற நவம்பர் மாதம் 22-ம்தேதி (நாளை) முதல் 26-ம்தேதி வரை முருகப்பெருமானை வழிபட மறந்து விடாதீர்கள்.
முருகன்
முருகன்
Published on

முருகன் வழிபாடு என்பது தமிழ் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்த ஒரு முக்கிய வழிபாடாகும். முருகனை செவ்வாய்க்கிழமை, கந்த சஷ்டி, தைப்பூசம், கார்த்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும். துன்பங்களில் இருந்தும், கர்ம வினைகளில் இருந்தும் விடுபட முடியும். அதேசமயம் முருகப்பெருமனை தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்யும் முறையும் உள்ளது. அந்த வகையில் எளிமையான முறையில், நம்பிக்கையுடன் வழிபட்டால் முருகனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

யாமிருக்க பயமேன் என்பது முருகப் பெருமானின் அருள்வாக்கு. எளியோரைக் காக்கும் இறைவனாக முருகன் அறியப்படுகிறார். அப்படிப்பட்ட முருகப்பெருமானை வருகின்ற நவம்பர் மாதம் 22-ம்தேதி (நாளை) முதல் 26-ம்தேதி வரை வழிபட மறந்து விடாதீர்கள். இந்த ஐந்து நாட்களும் நீங்கள் இந்த வழிபாட்டை செய்தால் உங்கள் வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக நிறைவேறும்.

முருக வழிபாட்டினை துவங்குவதற்கு முன் முதலில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். "என்ன நடந்தாலும் முருகா உன்னை வழிபடுவதை நிறுத்த மாட்டோன். உன்னை தினமும் வழிபடுவதற்கு எனக்கு அனுமதி அளித்து, அருள் செய் முருகா" என முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மூன்று கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்: எங்குமில்லா அதிசயம்!
முருகன்

இந்த 5 நாட்களிலும் நீங்கள் என்ன வேண்டினாலும் அதை அந்த முருகன் உங்களுக்கு நடத்தி கொடுப்பான். இந்த ஐந்து நாட்களில் நீங்கள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் 1008 முறை பிரகாரத்தை சுற்றி வர வேண்டும். தினமும் காலை, மாலை சென்று உங்களால் முடிந்த வரை சுற்றி ஐந்தாவது நாள் மொத்தமாக 1008 முறை சுற்றி முடிக்க வேண்டும். அதாவது தினமும் உங்களால் முடிந்த எண்ணிக்கையில் பிரகாரத்தை சுற்றி வரலாம். மேலே சொன்ன ஐந்து நாட்களுக்குள் 1008 முறை பிரகாரத்தை சுற்றி முடித்துவிட வேண்டும். இப்படி செய்தால் உங்கள் வேண்டுதல் அப்படியே அடுத்த 12 நாளில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த சக்தி வாய்ந்த நாட்கள் வரும். அந்த வகையில் நவம்பர் மாதம் 22-ம்தேதி(நாளை) முதல் 26-ம்தேதி வரை வருகிறது. எனவே இந்த நாளை மறந்தும் தவற விடாதீர்கள். பல நாட்களாக வேண்டுதல்கள் நிறைவேறாமல் இருப்பவர்கள் கட்டாயம் இதை முயற்சி செய்து பாருங்கள். முடிந்தால் குளிகை நேரத்தில் தினமும் ஒரு மணி நேரம் மௌன விரதம் இருங்கள்.

அதேபோல் உங்களுக்கு வாழ்வில் எந்த விதமான பிரச்னைகள், கடன் தொல்லைகள், தொழிலில் பெரும் நஷ்டங்கள், வேலை கிடைக்காமல் இருப்பது, புது வாகனம், வீடு வாங்க நினைப்பது, வாழ்வில் இருக்கும் பல தடைகள், காதல் பிரச்னை, காதலித்தவர்களை கரம் பிடிப்பதில் பிரச்னை என்று எதுவாக இருந்தாலும் சரி உங்களின் வேண்டுதல்கள் முடிந்தது போல நினைத்து அதை ஒரு பேப்பரில் எழுதிக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
பழனி முருகன் அபிஷேகப் பொருட்களில் மறைந்திருக்கும் ரகசிய மருத்துவம்!
முருகன்

மேலே குறிப்பிட்ட தேதியில் அதை எந்த வித சந்தேகமும் இல்லாமல் சந்தோஷமாக நடந்து முடிந்து விட்டது என்று நினைத்து கொள்ள வேண்டும். இதை வேண்டி பேப்பரில் எழுதிய பின்பு அடிக்கடி ஒரே மாதிரியான எண்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால் இந்த பிரபஞ்சம் உங்களின் வேண்தலை கூடிய விரைவில் நடத்திக்கொடுக்கப்போகிறது என்று அர்த்தம். 1008 முறை பிரகாரத்தை சுற்றி முடியாது என்பவர்கள் உங்கள் எண்ணங்களை நிறைவேற இந்த முறையையும் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com