
இஸ்லாமிய மக்கள் புனிதமான ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும்போது, ஜம் ஜம் கிணறுக்கு செல்வது வழக்கம். 5 ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட ஜம் ஜம் கிணற்று சுவையான நீரை பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் அருந்தி இருப்பார்கள். இந்த ஜம் ஜம் கிணற்றில் மறைந்துள்ள ஆச்சரியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மெக்காவுக்கு புனித பயணம் செய்யும் உலகின் பல தேசங்களில் இருந்து வரும் இஸ்லாமியர்கள், ஜம் ஜம் நீரை குறைந்த பட்சம் 5 லிட்டரையாவது தனது நாட்டிற்கு கொண்டு வராமல் இருக்க மாட்டார்கள். பாலைவன பகுதியில் இருக்கும் இந்த ஜம் ஜம் கிணறு சுமார் 18 அடி ஆழமும், 11 அடி அகலமும் கொண்டது. இதிலிருந்து ஒரு மாதத்திற்கு 2000 கோடி லிட்டர் தண்ணீருக்கு மேலே விநியோகத்திற்கு எடுக்கப்படுகிறது. ஆனாலும் வற்றாமல் தண்ணீரை வழங்கிக் கொண்டே இருக்கிறது.
ஒரு விநாடிக்கு 8 ஆயிரம் லிட்டர் என்ற அளவில், தினமும் 600 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கும் மேலே இந்த ஜம் ஜம் கிணற்றிலிருந்து தண்ணீர் ராட்சத மோட்டார்கள் மூலம் எடுக்கப்படுகிறது.
ஹஜ் யாத்திரை மற்றும் ரமலான் சமயத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே கூடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த நீர் தான் விநியோகிக்கப்படுகிறது. குறைந்த ஆழமுள்ள இந்தக் கிணறு பாலைவனத்தில் அமைந்துள்ளது. அருகில் ஏரிகளோ வேறு எந்த நீர் ஆதாரமோ கிடையாது. இருந்தும் அது தினமும் 600 மில்லியன் லிட்டர் நீர் வரை வழங்கி வருவது அற்புதமான விஷயமாகும்.
ஜம் ஜம் கிணற்றின் வரலாறு நபி இஸ்மாயீல் பிறந்த காலத்தில் இருந்தே ஆரம்பமாகியிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றி இன்று வரையில் தண்ணீரை சுரந்துக்கொண்டு இருக்கிறது.
இறை தூதர் இப்ராஹிம் - ஹஜர் தம்பதி தங்களது குழந்தை இஸ்மாயிலுடன் இறைக் கட்டளைப்படி மெக்கா பாலைவனத்தின் பகுதிக்கு சென்றுள்ளார்கள். அப்போது காபா அமைந்துள்ள இடத்தில், இறைவன் கட்டளை படி யாரும் இல்லாத பாலைவனத்தில் ஹஜர் மற்றும் அவரது கைக்குழந்தை இஸ்மாயில், இப்ராஹிம் நபியினால் தனியாக விட்டுச் செல்லப்பட்டார்கள்.
இவ்வாறு செய்வதற்கு காரணம் என வினவிய போதும், அவர் எந்தவொரு பதிலும் கூறவில்லை. இறுதியால் இது அல்லாவின் கட்டளையா? எனக் கேட்டப்போது, ஆம் என்று பதிலளித்தப்படி இப்ராஹிம் நபி சென்றுள்ளார்.
"எங்களை அல்லா காப்பாற்றுவார்" என ஹஜர் கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் அவருடைய கைக் குழந்தையான இஸ்மாயில் கடும் வெயிலால் அழ ஆரம்பித்துள்ளது. எனவே ஹஜர் ஸபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையே ஏழு முறை தண்ணீரைத் தேடி ஓடினார். எவ்விடத்திலும் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே குழந்தையின் அழுக்குரல் கேட்டு குழந்தையிடமே சென்றுள்ளார்.
தண்ணீர் தாகத்தில் அழுது கொண்டிருந்த குழந்தை, கால்களை பூமியில் உதைத்தப்படி அழுதுள்ளது. அந்தத் தருணத்தில் தான் அவர்களின் கால்களுக்கு அடியிலிருந்து தண்ணீர் வர ஆரம்பித்தது. இதை பார்த்த பின்னர் தான் ஹஜர் அல்லாஹ்வுக்கு நன்றி கூறியப்படி, அந்த ஊற்றை பார்த்து "ஜம் ஜம்" என்று கூறியுள்ளார். "ஜம் ஜம்" என்றால் போதும் போதும் என்று அர்த்தம். அதற்கு பின் தண்ணீர் வெளியில் செல்லாமல் இருப்பதற்கு ஒரு அணைக்கட்டினார்.
பொதுவாகவே நீர் என்பது தாகம் தீர்ப்பதற்கு பயன்படுத்தப்படும். ஆனால் இந்த நீர் பசியைப் போக்கும்; நோயைக் குணப்படுத்தும்; பிரார்த்தனையின் நல்ல பலனை வழங்கும்.
ஜம்ஜம் தண்ணீரில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், புளோரைடு, பொட்டாசியம், நைட்ரேட், சல்பேட் போன்ற மூலகங்கள் கரைந்துள்ளன. இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்பு அதிகளவில் உள்ளன. இதுவே இந்த தண்ணீருக்கு குடித்தவுடன் புத்துணர்ச்சி கொடுக்கிறது என்கிறார்கள்.
ஜம் ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகளும் கலக்கப்படவில்லை. அது தன்னை தானே சுத்தப்படுத்திக் கொள்வது மற்றொரு அற்புதம் என்கிறார்கள்.
ஒரு முறை ஐரோப்பிய மருத்துவ குழு ஒன்று ஜம் ஜம் கிணற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவுதி அரேபிய அரசுக்கு ஆலோசனை கூறி 8 அதி நவீன பாம்பு செட்டுகளைக் கொண்டு தொடர்ந்து இரவும் பகலுமாக 15 நாட்கள் கிணற்று நீரை இறைத்தது. ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்தே இருந்தது.
ஜம் ஜம் கிணற்று நீர் பல அற்புதங்களை கொண்டு இருந்த காரணத்தினால் தான் நபிகள் நாயகம் "ஜம் ஜம்" நீரை ஈடு இணையற்ற நீர் என்று குறிப்பிட்டு உள்ளார்.