ரமலான் - சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதம்!

அல்லா மீது பரிபூரண நம்பிக்கை வைத்து நோன்பு நோற்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
Ramadan
Ramadanimg credit - mnnonline.org
Published on

ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா இஸ்லாமியர்களுக்குமே, அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், சாத்தான்கள் விலகி ஓடும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் கருதுகின்றனர் .

இஸ்லாமிய காலண்டர் ஹிஜ்ரி முறையில் ஒன்பதாவது மாதம் ரமலான் (ரம்ஜான்) மாதம்."ரம்ஜான்"என்றால் ரமதான் என்ற அராபிய வார்த்தையானது ரமிதா அல்லது அர்-ரமத் (சுடும் வெப்பம் அல்லது உலர்தன்மை என்ற பொருளைத் தரக்கூடியது) என்பதிலிருந்து வந்தது . ரமலான் என்றால் 'பொசுக்குவது,கரிப்பது' என்று பொருள். இம் மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு இருப்பது கட்டாய கடமை. வயது முதிர்ந்தோர், பிரயாணம் செல்வோர், நோயாளிகளுக்கு மட்டும் நோன்பு நோற்பதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது . அதே நேரத்தில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்களுக்கும் நோன்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் நோன்பு தடைபட்டால், ரமலான் பண்டிகைக்குப் பிறகு நோன்பு நாட்களை முடிக்க வேண்டும்.

இம்மாதம் முதல் நாளன்று இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களுக்கு இறை கட்டளைகள் அளிக்கப்பட்டது. இம்மாதம் ஆறாம் நாளன்று இறைத்தூதர் மூஸா அவர்களுக்கு 'தவ்ராத்' எனும் இறை வேதம் வழங்கப்பட்டது.

இம்மாதம் பன்னிரெண்டாம் நாளன்று இறைத்தூதர் தாவூத் அவர்களுக்கு 'ஸபூர்' எனும் இறை வேதம் அளிக்கப்பட்டது. இம்மாதம் பதினெட்டாம் நாளன்று இறை தூதர் 'ஈசா' அவர்களுக்கு 'இஞ்சீல்' எனும் இறைவேதம் அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ரமலான் நோன்பு
Ramadan

ரம்ஜான் மாதத்தில் இருபத்தி ஏழாவது நாளில் இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்களுக்கு 'குர்ஆன்' எனும் இறைவேதம் அருளப்பட்டது. நன்மை , தீமைகள் பிரித்தறிய உதவும் புனித நூலாக இதனை பார்க்கிறார்கள்.

இம்மாதத்தில் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. அல்லா மீது பரிபூரண நம்பிக்கை வைத்து நோன்பு நோற்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அது போன்றே இம்மாதங்களில் இரவு நேரங்களில் வணக்கம் புரிபவர்களுக்கும் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

இம்மாதம் அதிகாலையில் சுமார் 4.30 மணிக்கு 'சஹர்' எனும் உணவு சாப்பிடுவது சிறப்பிற்குரியது. இரவில் 'தராவீஹ்' எனும் இரவு தொழுகையும் சிறப்பிற்குரியது. இம் மாதத்தில் தான் திருகுர்ஆன் அதிகளவில் ஓதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரமலான் நோன்பு சமயத்தில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள சில டிப்ஸ்! 
Ramadan

நோன்பைப் பொறுத்தவரை, பகலில் நோன்பு தொடங்குவதற்கு முன்பும், நோன்பு இடைவேளைக்குப் பிறகும் உண்ணும் உணவுக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இவை சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. காலையில் உண்ணும் உணவு சஹர் என்றும், மாலையில் உண்ணும் உணவு இஃப்தார் என்றும் அழைக்கப்படுகிறது. ஓய்வு எடுக்கும் போது, சரியாக ஒன்று அல்லது மூன்று பேரீச்சம்பழம் சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல், 30 நாட்கள் அல்லது 29 நாட்கள் விரதம் தொடரும்.

இந்த மாத இறுதிக்குப் பிறகு, மறுநாள் ஈத்-உல்-பித்ராக (ரம்ஜான்) கொண்டாடப்படுகிறது. மாதத்தின் தொடக்கமும் முடிவும் நிலவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ரமலான் மாதம் எட்டாம் மாதத்திற்குப் பிறகு பிறை மாதம் தொடங்கி அமாவாசையில் முடிந்தால், மீண்டும் பிறை மாதத்துடன் முடிவடைகிறது. சவுதி அரேபியாவில் ஒரு நாள் முன்னதாக கொண்டாடப்பட்டால், மறுநாள் இந்தியாவில் நடத்தப்படும்.

ஈத்-உல்-பித்ர் (ரம்ஜான்) என்றால் ஃபித்ராக்களின் பண்டிகை என்று பொருள். இங்கு ஃபித்ரம் என்றால் தானம் என்று பொருள். முஸ்லிம்கள் இந்த மாதத்தில் நோன்பு நோற்று மேலும் தர்மம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு அவர்கள் தானம் செய்வதை விட 70 மடங்கு அதிக புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
ரமலான் கற்றுக் கொடுக்கும் 5 முக்கியமான வாழ்க்கைப் பாடங்கள்!
Ramadan

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com