நவராத்திரி வாஸ்து முறைகள்: வீட்டின் வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய வழிகள்!

நவராத்திரியில் அன்னை துர்கையின் அருளோடு லட்சுமி கடாட்சம் பெற வாஸ்து விதிகளை பின்பற்றி செல்வத்தை ஈர்க்கும் ரகசியங்கள்.
நவராத்திரி வாஸ்து - Navratri Puja Vastu
நவராத்திரி வாஸ்து - Navratri Puja VastuImage credit: Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

நவராத்திரியின் பொழுது துர்கா தேவியின் 9 வடிவங்களும் முறையாக வழிபடப்படுகின்றன. துர்கா தேவியின் அருளைப்பெற பலர் விரதம் இருந்து வழிபாடு செய்வதும் உண்டு. நவராத்திரியில் துர்கா தேவியை வழிபடுவதால் வாழ்வில் உள்ள தடைகள், எதிரிகள் மற்றும் பயம் நீங்கி வாழ்வு செழிப்பாகும். நவராத்திரி பண்டிகையின் பொழுது நம் வீட்டிற்குள் வாஸ்து முறைப்படி வீட்டின் நேர்மறை ஆற்றல், அமைதி மற்றும் செழிப்பை கொண்டு வர சில முக்கியமான குறிப்புகள். 

 பூஜை அறை மற்றும் கலச அமைப்பு: 

பூஜை அறையை வீட்டின் வடகிழக்கு (ஈசான்ய மூலை), கிழக்கு அல்லது வடக்கு திசையில் அமைக்கவேண்டும். 

கலசம் மற்றும் அம்பிகையின் திருவுருவப்படத்தை பூஜை அறையின் வடகிழக்கு மூலையில் வைக்கவேண்டும். 

கலசத்தை நேரடியாக தரையில் வைக்காமல் பலகையின் மீது அல்லது தானியங்கள் பரப்பிய தட்டின் மேல் வைக்கவேண்டும்.

திசைகள் மற்றும் வழிபாட்டு முறைகள்: 

பூஜை செய்யும் பொழுது கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி அமர்ந்து வழிபட வேண்டும். இது மன ஒருமுகப்பாட்டையும் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்க உதவும்.

அகண்ட தீபம் அல்லது நெய் அல்லது நல்லெண்ணெய் தீபத்தை பூஜை அறையின் தென்கிழக்கு (அக்னி மூலை) திசையில் ஏற்றுவது உகந்தது. வாஸ்துபடி தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றுவது வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அணையாத சுடரான அகண்ட ஜோதியை வீட்டு பூஜை அறையில் வைப்பது அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் கொண்டுவரும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அகண்ட ஜோதி நித்திய ஆன்மாவைக் குறிப்பதால் அது மன அமைதியையும் நம் உள்மனதுடன் ஒரு நெருங்கிய உறவையும் ஊக்குவிக்கிறது.

இதையும் படியுங்கள்:
பல்லி சாஸ்திரம்: இரவில் பல்லி கத்தும் திசையும்... உங்களுக்கு கிடைக்கப்போகும் அதிர்ஷ்டமும்!
நவராத்திரி வாஸ்து - Navratri Puja Vastu

பிரதான வாசல் அலங்காரம்:

வீட்டின் பிரதான நுழைவாயிலில் புதிய மாவிலைகளைக் கொண்டு தோரணம் கட்டுவது நேர்மறை அதிர்வுகளை ஈர்க்கும். மாவிலைகள் லக்ஷ்மி தேவியுடன் தொடர் புடையவை. மேலும் இவை நம் குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

வீட்டின் வடகிழக்கு மூலையில் துளசி செடியை வைப்பது எதிர்மறை ஆற்றலை நீக்கி குடும்பத்திற்கு அமைதியையும் செழிப்பையும் தரும். கொண்டாட்டத்தின் ஒன்பது நாட்களிலும் இந்தச் செடியானது ஒரு இயற்கையான சுத்திகரிப்பானாகச் செயல்பட்டு, நம் வீட்டிலிருந்து விரும்பத்தகாத உணர்ச்சிகளை வெளியேற்றி அமைதியை வளர்க்கிறது.

நவராத்திரி நாட்களில் வீட்டின் வாசலில் சந்தனம் அல்லது குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைவது தீயசக்திகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும். பிறப்பு, வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் இறப்பு ஆகிய வாழ்வின் நான்கு நிலைகளை ஸ்வஸ்திகா குறிக்கிறது. இதில் பெண் ஆற்றலுக்கான (சக்தி) இரண்டு கோடுகளும், ஆண் ஆற்றலுக்கான (சிவன்) இரண்டு கோடுகளும் உள்ளன. நவராத்திரியின் பொழுது வீட்டு முன் வாசலில் இதனை வரைவது சிறப்பு.

வாஸ்து சாஸ்திரத்தில் சந்தனத்திற்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. அது உடலையும் மனதையும் தூய்மைப்படுத்துவதால் நேர்மறை ஆற்றலின் ஆதாரமாகக் கருதப்படுகிறது.

நவராத்திரி வாஸ்து - Navratri Puja Vastu
நவராத்திரி வாஸ்து - Navratri Puja VastuImage credit: Gemini

வீட்டை ஒழுங்கமைத்தல்: 

நேர்மறை ஆற்றலைக்கொண்டு வருவதற்கு வீட்டில் இனிமையான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு முதலில் வீட்டை சுத்தம் செய்வதும், தூய்மையான சூழலை பராமரிக்கவும் வேண்டும். தேவையற்ற பொருட்கள் ஆற்றல் மற்றும் இயக்கத்தின் ஓட்டத்தை தடை செய்யக்கூடும். எனவே நவராத்திரி தொடங்குவதற்கு முன்பே வீட்டை முழுமையாக சுத்தம் செய்து பயன்படுத்தாத, தேவைப்படாத  பொருட்கள் அனைத்தையும் அகற்றி விடுவது நல்லது. சுத்தமான சூழலே தேவியின் அருளைப்பெற்று தரும்.

அம்மன் சிலைகளையோ படங்களையோ சுவரோடு ஒட்டி வைக்காமல் குறைந்தது ஒரு அங்குலமாவது இடைவெளி விட்டு வைக்க வேண்டும். அத்துடன் உடைந்த சிலைகளையோ, கிழிந்து பின்னப்பட்ட சுவாமி படங்களையோ வைக்கக்கூடாது.

பாராயணம்: 

நவராத்திரி நாட்களில் தினமும் தேவி பாகவதம் படிப்பது பல்வேறு கிரகங்களின் தீய தாக்கங்களைப் போக்கி நம் குடும்பத்தை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

நவராத்திரி என்பது வெறும் ஒன்பது நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல; அது பக்தி, ஒழுக்கம் மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு பயணம் ஆகும். துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களையும் வழிபடுவதன் மூலம் வாழ்வில் வலிமை, செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலைப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
பூஜையறையில் பித்தளை பாத்திரங்கள்: ஆன்மீக ரகசியம் - அறிவியல் நன்மைகள் என்ன தெரியுமா?
நவராத்திரி வாஸ்து - Navratri Puja Vastu

நவராத்திரி எட்டாம் (அஷ்டமி) அல்லது ஒன்பதாம் நாளில் (நவமி) பெண் குழந்தைகளை குமாரிகளாக பாவித்து வழிபடுவது கன்னியா பூஜை எனப்படும். பெண் குழந்தைகள் அனைவருமே அன்னை பராசக்தியின் சொரூபமாகக் கருதப்படுகிறார்கள். இவர்களை வணங்குவதன் மூலம் தேவியின் முழுமையான அருள் கிடைப்பதுடன் குடும்பத்தில் அமைதி, செல்வம் மற்றும் நல்வாழ்வு பெறலாம்.

பூஜைக்கு தவிர்க்கவேண்டிய சில பொருட்கள்: 

பூஜை பொருட்களில் இரும்பு அல்லது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி அத்தகைய பொருட்கள் ஏற்றது அல்ல. அதற்கு பதிலாக பித்தளை, செம்பு அல்லது மண் கலசங்கள் மற்றும் பாத்திரங்கள் போன்றவை சிறப்பானவை. இவை பாரம்பரிய மற்றும் நேர்மறையான உணர்வைத் தருவதுடன் புனிதமாகவும் கருதப்படுகிறது.

இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வீட்டில் தேங்கியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் விலகி, குடும்பத்தில் நிம்மதியும் தெய்வீக அமைதியும் நிலவும். வாஸ்து முறைப்படி பூஜையறையையும் இல்லத்தையும் அமைப்பதன் மூலம் அன்னை துர்கா மற்றும் லட்சுமி தேவியின் பரிபூரண அருள் கிடைத்து, பொருளாதாரத் தடைகள் நீங்கி தொடர் நன்மைகளும் செல்வ வளமும் பெருகும்.

இதையும் படியுங்கள்:
செல்வமும் அமைதியும் அருளும் வரலட்சுமி விரதம்: வீட்டில் பூஜிக்கும் எளிய முறை!
நவராத்திரி வாஸ்து - Navratri Puja Vastu
logo
Kalki Online
kalkionline.com