வீட்டில் ஹோம பலன் தரும் பஞ்சகவ்ய விளக்கு: செல்வமும் நிம்மதியும் பெருக எளிய வழி!

Homam benefits at home - பஞ்சகவ்ய விளக்கு
Homam benefits at home - பஞ்சகவ்ய விளக்குAI Image
Updated on

நாம் தீயசக்திகள் நம்மைவிட்டு விலகவும் ,நன்மைகள் நடைபெறவும் தோஷ நிவர்த்திக்காக ஹோமங்கள் செய்கின்றோம். காரிய சிந்திக்காக பல பூஜைகள், பரிகாரங்கள் செய்கிறோம். இதற்குக் காரணம் பஞ்ச பூதங்களின் அருள் கிடைக்கவும், கடவுளின் ஆசி கிடைக்கவும்தான்.

வருடத்திற்கு ஒருமுறை ஹோமங்கள் செய்வது குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் நன்மையைக் கொடுக்கிறது. வீட்டிலிருக்கும் துன்பங்கள், கஷ்டங்கள், கண் திருஷ்டிகள் அனைத்தையும் தீர்த்து வளமான வாழ்வை ஹோமங்கள் மூலம் பெறலாம்.

ஹோமம் என்றாலே கணபதி ஹோமம் மட்டும்தான்‌ மற்ற ஹோமங்கள் ஆலயங்களில் நடத்தப்படுகிறது.‌ ஹோமங்களில் மிக முக்கியமானதும், அதிக சக்தி வாய்ந்ததுமாகச் சொல்லப்படுவது கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம்.

ஆனால் வீட்டில் ஹோமம் செய்வதற்கு இணையான நலன்களைக் கொடுக்கக் கூடியது பஞ்சகவ்ய விளக்கு.‌ வீட்டில் பஞ்சகவ்ய விளக்கை ஏற்றும்போது அதிலிருந்து வரும் புகையின் வாசம் ஹோமத்தில் இருந்து வரும் வாசனைக்கு இணையாக இருக்கும்.‌

பஞ்சகவ்ய விளக்கின் புகை வீடு முழுவதும் பரவும் போது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறி பணம் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.

பஞ்சகவ்ய விளக்கானது பசுவிலிருந்து கிடைக்கும் பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய 5பொருட்களுடன் சில மூலிகைகள் சேர்த்து செய்யப்படுகிறது. பசுமாட்டின் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதுவும் பால் நெய் தயிர் போன்றவற்றில் மகாலக்ஷ்மி வாசம் செய்வதாகக் கருதப்படுகிறது. பஞ்சகவ்யத்தில் பசும் பாலில் சந்திரனும், பசுவின் தயிரில் வாயு பகவானும், கோமியத்தில் வருணபகவானும், பசும் சாணத்தில் அக்னி தேவனும், பசுநெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கிறார்கள்.

Homam benefits at home - பஞ்சகவ்ய விளக்கு
Homam benefits at home - பஞ்சகவ்ய விளக்குAI Image

பஞ்சகவ்ய விளக்கு ஏற்றும் முறை:

பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை, வாழையிலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு தலைமீது வைக்கவும். பின் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தாமரைத்தண்டுத் திரியில் விளக்கேற்றுவது செல்வத்தைச் பெருக்கும் என்பது ஐதீகம்.

இந்த விளக்கு எரிந்த பின் கிடைக்கும் சாம்பல் தெய்வீக விபூதிக்குச சமமாகும். இந்த விளக்கை கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஏற்றுவதால் கோபூஜை அல்லது லக்ஷ்மி நாராயண பூஜை செய்ததற்குச் சமமாக கருதப்படுகிறது.

பஞ்சகவ்யபொருட்களின் நன்மைகள்:

பசு சாணம்

பாக்டீரியா,பூஞ்சாணம் நுண்ணுயிர் சத்துக்கள் நிறைந்தது.

பசுவின் சிறுநீர்

பயிர் வளர்ச்சியை மேம்படுத்துவது

பால்

அமினோ அமிலங்கள் கால்சியம் நிறைந்தது.

தயிர்

செரிமானம் தரக்கூடிய லாக்டிக் அமிலம் நிறைந்தது.

பசு நெய்

ஏ சத்து மற்றும் கொழுமப்பு நிறைந்தது

கரும்புச்சாறு

க்ளூகோசை அதிகரிக்கச் செய்யும்

பஞ்சகவ்ய விளக்காமல் ஏற்படும் நன்மைகள்

எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் நிறையும்

லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்

செல்வம் வீட்டில் நிறையும்.

கண் திருஷ்டி கள் நீங்கும்

நோய்கள் நீங்கும்.

கோவில் கருவறையில் சிலைகள் குளிர்ச்சியாக இருக்கின்றன. கருவறையில் சூரிய ஒளி புகுவதில்லை. இருட்டு காரணமாக சிலைகளின் இடுக்குகள் பிளவுகளில் கிருமிகளும் பாசிகளும் படியும்‌ அவற்றை முழுமையாக அழிக்கின்ற சக்தி இதற்கு உண்டு என்பதால் கோவில் சிலைகளுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்யப்படுகின்றன. சிறப்புமிக்க பஞ்சகவ்ய விளக்கேற்றி பல நன்மைகளைப் பெறுவோம்.

இதையும் படியுங்கள்:
சுந்தரருக்கு வழிகாட்டிய ஒரத்தூர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்: ஜூலை 12-ல் நடக்கும் வரலாற்று நிகழ்வு!
Homam benefits at home - பஞ்சகவ்ய விளக்கு

இந்த எளிய ஆன்மீக வழிபாட்டு முறையைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் இல்லத்தில் உள்ள தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டிகள் முற்றிலும் நீங்கி, எப்போதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். பெரும் செலவில் ஹோமங்கள் செய்ய முடியாதவர்களும், தங்கள் வீட்டிலேயே லட்சுமி கடாட்சத்தையும், முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசிகளையும் பெற்று, பொருளாதார ரீதியாக ஒரு வளமான, நோய் நொடியற்ற நிம்மதியான வாழ்க்கையை அடைய முடியும்.

logo
Kalki Online
kalkionline.com