

பங்குனி மாதம் தமிழ் ஆண்டின் பன்னிரண்டாவது மற்றும் கடைசி மாதமாகும். இது பொதுவாக மார்ச்-ஏப்ரல் மாதங்களில் (மீன ராசி) வருகிறது. குறிப்பாக இந்த மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாகவும், பல தெய்வத் திருமணங்கள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறும் "தெய்வீக மாதம்" ஆகவும் போற்றப்படுகிறது. பங்குனி உத்திரம், பங்குனி அமாவாசை மற்றும் தைப்பூசம் போன்ற முக்கியமான மிக முக்கிய ஆன்மீக நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடைபெற உள்ளன. பங்குனி மாதத்தில் விரதம் இருந்து, பூஜை செய்து, தான தர்மங்கள் செய்தால் வீட்டில் வற்றாத செல்வ வளம், ஆரோக்கியம், குடும்ப நலன் மற்றும் மன அமைதி பெருகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி மாதம் (மார்ச் 15ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, ஏப்ரல் 13ம்தேதி திங்கட்கிழமை வரை உள்ளது.
ஆன்மிக நிகழ்வுகள் அதிகம் நடைபெறும், பங்குனி மாதத்தில் எந்தெந்த விரத நாட்கள் எந்த தேதிகளில் வருகிறது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க...
* மார்ச் 19-ம்தேதி (பங்குனி 5) - யுகாதி பண்டிகை, தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. (உகாதி (Ugadi/Yugadi) என்பது ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினமாகும்)
* மார்ச் 21-ம்தேதி (பங்குனி 7) - ரம்ஜான் பண்டிகை (ரம்ஜான் (ரமலான்) என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதத்தில் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் அனுசரிக்கப்படும் புனித நோன்பு காலமாகும்.)
* மார்ச் 27-ம்தேதி (பங்குனி 13) - ஸ்ரீ ராம நவமி - ஸ்ரீ ராமநவமி என்பது விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமரின் பிறந்த நாளைக் கொண்டாடும் முக்கிய இந்துப் பண்டிகையாகும்.
* மார்ச் 31-ம்தேதி (பங்குனி 17) - மகாவீர் ஜெயந்தி - மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் இருபத்தி நான்காவதும் இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும்.
* ஏப்ரல் 1-ம்தேதி (பங்குனி 18) - பங்குனி உத்திரம் - பங்குனி உத்திரம், தெய்வத் திருமணங்களை முன்னிறுத்தி, இல்லற வாழ்வில் மகிழ்ச்சியையும், தம்பதியரிடையே ஒற்றுமையையும் உண்டாக்கும் ஒரு புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.
* ஏப்ரல் 3-ம்தேதி (பங்குனி 20) - புனித வெள்ளி - புனித வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வோராண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.
* ஏப்ரல் 5-ம்தேதி (பங்குனி 22) - ஈஸ்டர் - ஈஸ்டர் (உயிர்ப்பு ஞாயிறு) என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் கிறிஸ்தவர்களின் மிக முக்கியப் பண்டிகையாகும். இது புனித வெள்ளிக்கிழமைக்கு (Good Friday) அடுத்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
விரத நாட்கள்
மார்ச் 15-ம்தேதி (பங்குனி 01) - திருவோணம் விரதம்
மார்ச் 18-ம்தேதி (பங்குனி 04) - அமாவாசை
மார்ச் 23-ம்தேதி (பங்குனி 09) - கிருத்திகை
மார்ச் 16 மற்றும் மார்ச் 30 (பங்குனி 2, பங்குனி 16 ) - பிரதோஷம்
ஏப்ரல் 01-ம்தேதி (பங்குனி 18) - பெளர்ணமி
மார்ச் 15, 29 மற்றும் ஏப்ரல் 13-ம்தேதி (பங்குனி 01, பங்குனி 15, பங்குனி 30) - ஏகாதசி
மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 08 (பங்குனி 10, பங்குனி 25) - சஷ்டி
ஏப்ரல் 5-ம்தேதி (பங்குனி 22) - சங்கடஹர சதுர்த்தி
மார்ச் 17-ம்தேதி (பங்குனி 3) - மாத சிவராத்திரி
மார்ச் 22-ம்தேதி (பங்குனி 8) - சதுர்த்தி விரதம்
பங்குனி மாத சுப முகூர்த்த நாட்கள் :
பங்குனி மாதத்தில் மொத்தம் ஆறு நாட்கள் சுப முகூர்த்த நாட்கள் வருகிறது.
மார்ச் 15-ம்தேதி (பங்குனி 01) - சுப முகூர்த்தம்
மார்ச் 16-ம்தேதி (பங்குனி 02) - சுப முகூர்த்தம்
மார்ச் 25-ம்தேதி (பங்குனி 11) - சுப முகூர்த்தம்
ஏப்ரல் 6-ம்தேதி (பங்குனி 23) - சுப முகூர்த்தம்
ஏப்ரல் 12-ம்தேதி (பங்குனி 29) - சுப முகூர்த்தம்
ஏப்ரல் 13-ம்தேதி (பங்குனி 30) - சுப முகூர்த்தம்
அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :
மார்ச் 25 மற்றும் ஏப்ரல் 10-ம்தேதி (பங்குனி 11, பங்குனி 27) - அஷ்டமி
மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 11-ம்தேதி (பங்குனி 12, பங்குனி 28 ) - நவமி
மார்ச் 20, 29 மற்றும் ஏப்ரல் 2-ம்தேதி (பங்குனி 6, 15, 19) - கரி நாட்கள்