கடன் தொல்லை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு! பிரதோஷ நாளில் நாம் தரிசிக்க வேண்டிய அற்புதத் தலங்கள்!

pradosham-history-
pradosham-history-
Updated on

சிவபெருமான் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரின் விரதநாளான பிரதோஷம்தான். அது பிறந்த சுவாரஸ்யமான கதை. அதிக வலிமை பெறும் பொருட்டு அமுதம் பெறுவதற்க்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, உலகத்தைக் காக்க சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்திய நாளே பிரதோஷம் ஆகும். திரயோதசி திதியில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான இந்த நேரத்தில், நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

அதிக வலிமை பெரும் பொருட்டு அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்தனர். தேவர்கள் வாசுகி பாம்பின் வால் பகுதியையும், அசுரர்கள் தலைப் பகுதியையும் பிடித்துக்கொண்டனர்.

ஒருக்கட்டத்தில் மந்திரகிரி மலையானது, வாசுகி பாம்பின் பிடியில் இருந்து விடுபட்டு கடலுக்குள் மூழ்க ஆரம்பித்தது. அப்போது, மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று, மூழ்கிய மந்திரகிரி மலையை தனது முதுகில் தாங்கி, அதை மேலே கொண்டு தொடர்ந்து, தேவர்களும், அசுரர்களும் அந்த மலையைக் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தனர்.

மறுநாள் ஏகாதசி திதியன்று வலி பொறுக்க முடியாது வாசுகி பாம்பை கடலினுள் தனது நஞ்சை உமிழ்ந்தது. அப்போது அமிர்தமும் கடலில் தோன்றியது. வாசுகி பாம்பு கக்கிய ஆலமாகிய விஷமும், அமிர்தமும் ஒன்று சேர்ந்து 'ஆலாலம்' ஆனது. அதனால் அவர்கள் அதை பருக முடியாமல் தவித்தனர்.

சிவபெருமானின் உதவியை அவர்கள் நாட... அவர் விஷத்தினை தானே எடுத்து உட்கொண்டார். தான் உட்கொண்ட விஷத்தை விழுங்காமல், கழுத்தாகிய கண்டத்திலே தேக்கினார். அதன் காரணமாக அவரது மேனி நீல நிறமானது. அவரும் 'நீலகண்டன் ஆனார்.

வாசுகி கக்கிய விஷத்தின் கொடுமையில் இருந்து தேவர்களையும். அசுரர்களையும் காத்த சிவபெருமான், மீண்டும் அவர்களை திருப்பாற் கடலை கடையுமாறு கூறினார். அதன் தொடர்ச்சியாக அதில் இருந்து முதலில் லட்சுமி தோன்றினாள். தொடர்ந்து ஜராவதம் என்ற வெள்ளை யானை, காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கவுஸ்துமணி, சூடாமணி, உச்சைஸ்வரம் என்ற குதிரை போன்றவை தோன்றின. லட்சுமியை திருமால் ஏற்க, மற்ற அனைத்தையும் தேவர்கள் எடுத்துக்கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
சித்தர்கள் தவம் செய்த திண்டுக்கல் தவசிமேடை ஒடுக்கம் மகாலிங்கேசுவரர் கோவில்!
pradosham-history-

அதன் பின்னரும் திருப்பாற்கடலை கடையும் பணி தொடர்ந்தது. மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அசுரர்களுக்கு கொடுக்காமல் அதை தேவர்கள் கைப்பற்றி உண்டனர். ஆனால், தங்களுக்கு அமிர்தம் கிடைக்க காரணமான சிவபெருமானுக்கு நன்றி கூற அவர்கள் மறந்துவிட்டனர். பிரம்மா நினைவுபடுத்திய பிறகே, தேவர்கள் அனைவரும் சிவ பெருமானுக்கு நன்றி கூறி வணங்கினர்.

அவர்களுக்காக கைலாயத்தில் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று திருநடனம் புரிந்தார் சிவபெருமான். தேவர்கள் அதை கண்டு மகிழ்ந்தனர். அன்று முதல் திரயோதசி திதி அன்று மாலை நேரம் பிரதோஷம் காலமாக கருதப்பட்டு, அன்றைய தினம் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதன் முதலில் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபட்ட பெருமைக்கு உரியவன் தேவர்களின் தலைவன் தேவேந்திரன்.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தி பகவானையும் வழிபடுவதால் சகல பாவங்களும் நீங்கி, தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். ஒரு வருடம் முழுவதும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருமணத் தடை நீங்குதல், குழந்தைப்பேறு மற்றும் கடன் தொல்லைகள் அகலுதல் ஆகியவை இதன் முக்கிய பலன்களாகும்.

பூலோகத்தில் பிரதோஷ வழிபாடு முதன்முதலில் நடைபெற்ற தலமாக, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. ஆலாகால விஷத்தை உண்ட மயக்கத்தில் சிவன் பள்ளி கொண்ட இடம் சுருட்டப்பள்ளிதான். விஷத்தை உண்டு சயன நாயகராக படுத்திருக்கும் சிவபெருமானைக் காண அனைத்துலக மூர்த்திகள், தேவர்கள், மகரிஷிகள் தேடிவந்து தரிசனம் பெற்ற புண்ணிய ஸ்தலம் சுருட்டப்பள்ளி. இந்த ஆலயத்தில் பிரதோஷ தரிசனம் செய்வது அசுவமேத யாகம் செய்த பலனைத் தரக்கூடியது என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
சிறு தானம்.. பெரும் பலன்! ராகு-கேது தோஷம் நீங்க நீங்கள் செய்ய வேண்டிய எளிய தானங்கள்!
pradosham-history-

அமிர்தகடேஸ்வரர் அருள்பாலிக்கும் திருக்கடம்பூர் ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ கால பூஜை மிகவும் சிறப்புபெற்றது. இந்தச் சிறப்புக்குக் காரணமானவர், இவ்வாலயத்தில் உள்ள ரிஷபதாண்டவமூர்த்தி உற்சவர்.பிரதோஷ கால பூஜையின்போது மட்டுமே இந்த உற்சவர் திருமேனியை தரிசிக்க முடியும். இந்த உற்சவர் திருமேனி மற்ற நாட்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். நாம் காண இயலாது.

திருவாரூர் தியாகராஜர் கோயில் பிரதோஷ வழிபாட்டிற்கு மிகவும் புகழ்பெற்றது. மற்ற சிவாலயங்களைப் போலன்றி, இங்கு நித்திய பிரதோஷம் (ஒவ்வொரு நாளும் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை) நடைபெறுகிறது. தினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும் தியாகேஸ்வரரை வழிபடுவதாக ஐதீகம்.

logo
Kalki Online
kalkionline.com