

1. "அவனுக்கு என் பெயர் வையுங்கள்"
1960களில் என் அப்பா மற்றும் அம்மா தீவிர சாய் பக்தர்கள். அப்பா சாய் சமாஜத்தின் செயலராக இருந்தார். பாபா ஆண்டுக்கு ஒரு முறை ஊட்டி வருவார். அப்போது நான் பிறக்கவில்லை. என்னைக் கம்பத்தில் சுமந்துகொண்டு இருந்த என் அம்மா மற்றும் அப்பா, சாய்ராம் பார்க்க ஒரு பங்களாவுக்கு போனார்கள். சாய் பாபா ஆசிர்வாதம் செய்தார்.
பின்னர் பஜனை நடந்தது. இறுதியில் என் அப்பா சாய்பாபாவை சாப்பிட அழைத்தார். எத்தனையோ பணக்காரர்கள் அழைத்தும் செல்லாமல் பாபா எங்கள் வீட்டிற்கு வந்தார். அவருக்கு ஏழைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். வீட்டிற்கு வந்துவிட்டார். அம்மா மற்றும் அப்பா குஷியாகி பாபாவை வரவேற்றனர்.
“சாப்பிட எதுவும் வேண்டாம்; பாயசம் இருந்தால் கொடுங்கள்” என்று சேமியா பாயசம் வாங்கி குடித்தார்.
அப்போது என் அம்மாவிடம், “எத்தனை மாசம்?” என்று கேட்டு விட்டு “ஆண்தான் பிறக்கும். அவனுக்கு என் பெயர் சத்திய நாராயணன் என்று வையுங்கள்” என்றார்.
“அப்படியே செய்கிறோம் பாபா” என்று உறுதி அளித்தார்கள். வீட்டில் என்னை பாபா என்று அழைக்க சங்கோஜப்பட்டு, என்னை ‘பாபு’ என்று கூப்பிட்டார்கள். பள்ளியில் சேர்க்கும்போது சாய் பாபா சொன்னபடி எனக்கு பெயர் வைத்தார்கள். ஆம். வீட்டில் பாபு... வெளியே சத்திய நாராயணன்.
- சத்திய நாராயணன். ஆர்
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
2. என் முன் வந்தார்...
ஒரு முறை பர்த்திக்குச் சேவை செய்ய சென்றேன்... அங்கு சேவை செய்துகொண்டு இருந்தேன். ஒரு நாள் எனக்கு சாமியைப் பார்த்தாக வேண்டும் என்ற ஒரு மன அழுத்தம் வந்தது. ஆனால், சேவை செய்பவர்களுக்கு சேவை செய்யும்போது தரிசனம் இல்லை. சேவை முடிந்த பின்னர்தான் பாத நமஸ்காரம். அதுவரை என்னால் இருக்க முடியவில்லை. ஒரு நாள் மாலை தரிசனத்துக்கு வலுக்கட்டாயமாக சென்றேன். அங்கு என் அதிர்ஷ்டவசமாக முதல் வரிசையில் உட்காரச் சந்தர்பம் கிடைத்தது. மனம் உருகி வேண்டினேன். நான் நம் பகவானிடம் பிரார்த்தனை வைத்தேன். சுவாமி, நீங்கள் உண்மையான கடவுள் என்றால், நீங்கள் தரிசனத்துக்கு வரும்போது எனக்கு பாத நமஸ்காரம் கண்டிப்பாக வேண்டும். கிடைத்தால் நான் ஒரு புதிய மனிதனாக உருவெடுப்பேன். இது உங்கள் மேல் சத்தியம் என்று மனம் உருகி வேண்டினேன். சுவாமி பூர்ண சந்திரவில் இருந்து நேராக வந்தார். நேராக என் முன் வந்தார்...
- ரமேஷ். எல்
3. அதிசயம், ஆனால் உண்மை...
அது ஒரு அழகான காலை. 25வருடங்களுக்கு முன் நடந்த ஒரு அதிசயம். குடும்ப நண்பர் ராமதாஸ் சாய் பக்தர். அவர் சாய்பாபாவின் திருவுருவத்தைப் பரிசு அளித்தது காப்பகத்தில்.
அன்று மாலை நேரத்தில் கிடைத்த மகிழ்ச்சி செய்தி. மாதாந்திரச் சீட்டு துவக்கத்தில் குலுக்கல் முறையில் எங்களுக்குக் கிடைத்தது ஒரு டிரஸ்ஸிங் டேபிள். அன்றுமுதல் நாங்களும் சாயி பக்தர்கள்தான். அதிசயம், ஆனால் உண்மை...
- சீமந்தக மணி ராகவசிம்ஹன்