சகல ஐஸ்வர்யத்தைப் பெற்றுத் தரும் சாம்பிராணி தூபம்!

Sambrani incense
Sambrani incense

ந்தக் காலத்தில் இருந்து நமது வீடுகளில் நடக்கும் பூஜைகளில் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அதை வைத்தே நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை நிலைக்கச் செய்யலாம். மாலை நேரத்தில் வீட்டில் சாம்பிராணி தூபம்போட்டுப் பாருங்கள், நிச்சயம் வாழ்வில் மாற்றம் காணலாம்.

வீடுகளில் சாம்பிராணி புகை போடுவதால் தேவையற்ற தீமைகள் விலகி, தேவையான நல்லவை தேடி வரும் என்பது ஐதீகமாக உள்ளது. அதன்படி நாமும் நமது வீடுகளில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால்  தூபம் போட்டால் நன்மைகள் நிச்சயம் நிகழும். இதுநாள் வரை நம்மைத் தொடர்ந்த கஷ்டங்கள் விலகி தேவையற்ற விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும்.

சாம்பிராணி என்பது மணம் கொண்ட மரப்பிசினிலிருந்து உருவாகிறது. அதை நமது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறைப்படி பல மூலிகைகள் கலந்து மதிப்புக் கூட்டுவதன் மூலம் தெய்வீக மணம் கொண்ட நலன் தரும் சாம்பிராணி நமக்குக் கிடைக்கிறது. சாம்பிராணி எனும் திடப்பொருளை நமக்கு வேண்டும் அளவில் உடைத்து தேங்காய் சிரட்டை அல்லது அடுப்புக் கரியின் தணலில் இடும் போது நல்ல மணம் நம்மைச் சுற்றி பரவுகிறது. இந்த மணத்தினை நுகரும்போது நமக்குள் மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி பரவுகிறது.

சாம்பிராணியை எதனுடன் கலந்து போட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் பெரியோர்கள் காட்டிச் சென்றுள்ளனர். தூய சாம்பிராணியில் மட்டும் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

சாம்பிராணியோடு அகில் போட்டுத் தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.  மருதாணி விதைகளை போட்டு சாம்பிராணி தூபமிட, பில்லி, சூனியக் கோளாறுகள் விலகும். சாம்பிராணியில் தூதுவளையை போட்டுத் தூபமிட வீட்டில் தெய்வ சக்தி நிலைக்கும். சந்தனத்தைப் போட்டு சாம்பிராணி தூபமிட  லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
ஓகா வெஜிட்டபிள் தெரியுமா உங்களுக்கு?
Sambrani incense

சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் விலகி நிவாரணம் கிடைக்கும். சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டுத்  தூபமிட காரிய ஸித்தி உண்டாகும். சாம்பிராணியில் வேப்பிலையை போட்டுத் தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

சாம்பிராணியில் வெண்கடுகை போட்டுத் தூபமிட பகைமை விலகும். அதேபோல், வெண்குங்கிலிய பொடியை போட்டுத் தூபமிட துஷ்ட சக்திகள் விலகும். சாம்பிராணியில் ஜவ்வாது போட்டுத் தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும். வேப்பம்பட்டையை போட்டு சாம்பிராணி தூபமிட ஏவல், பில்லி, சூன்யம் ஆகியவை விலகும்.

சாம்பிராணியில் நாய் கடுகை போட்டுத் தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவர். சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டுத் தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும். சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டுத் தூபமிட மகான்களின் ஆசி கிடைக்கும். சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டுத் தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும். சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டுத்  தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பொருளைத் தேர்ந்தெடுத்து மனதை ஒருமுகப்படுத்தி சாம்பிராணியை போட்டு வாழ்வில் அனைத்து செல்வ வளமும் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com