சமணர் குலத்தை தூரறுத்த நாவுக்கரசர்!

பழையாறை சிவபெருமான்
பழையாறை சிவபெருமான்

ஞ்சாவூர் மாவட்டம், ‘பழையாறை வடதளி’ என்றாலே அமரர் கல்கியின் ஞாபகம்தான் அனைவருக்கும் வரும். இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சோமேசர் திருக்கோயில். இக்கோயில் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சம்பந்த பெருமான், 'அப்பரே' என திருவாய் மொழிந்த,  திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். இவர் திருவாவடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள கோயில்களுக்குச் சென்றுவிட்டு திருப்பழையாறை என்னும் இப்பதியை அடைந்தார். அங்கு வடதளியிலே இறைவன் சன்னிதியை சமணர்கள் பாழிகளால் மறைத்து வைத்திருந்தனர். அதாவது, ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். இதனை அறிந்த திருநாவுக்கரசர், ‘சுவாமியை தரிசித்தால் அன்றி இவ்விடம் விட்டு அகலப்போவதில்லை’ என உண்ணா நோன்பு மேற்கொண்டார்.

தேர் வடிவ மாடக்கோயில்
தேர் வடிவ மாடக்கோயில்

பக்தனின் நோக்கம் அறிந்த ஈசன் அன்றிரவு அப்பகுதி அரசனின் கனவில் தோன்றி, தாம் உறைந்திருக்கும் இடத்தை உணர்த்தி அங்கு தமக்கு திருப்பணி செய்யுமாறு பணித்தார். அதன்படியே அரசனும் சமணர்களின் மறைப்புகளை நீக்கி கோயிலுக்கு விமானம், பூஜைக்கு வேண்டிய நிவந்தங்கள் போன்றவற்றை அமைக்கக் கட்டளை இட்டான். இறைவனின் திருவுருவத்தை வெளிப்படுத்தி அப்பர் சுவாமிகளை தரிசனம் செய்வித்து, சமணர் குலத்தை தூரறுத்தான். இந்த வரலாற்றுக்குச் சான்றாக திருநாவுக்கரசரின் திருக்குறுந்தொகை பாடல்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
பூஜையறையில் எதுபோன்ற கடவுள் சிலையை வழிபட்டால் பலன் கிடைக்கும்?
பழையாறை சிவபெருமான்

இது அமர்நீதி நாயனார் அவதரித்தத் திருத்தலம். சிவபெருமானை சந்திரன் பூஜித்த தலம். இத்தல இறைவன் சோமேசர் எனும் திருநாமத்துடனும், அம்பிகை சோமகலாநாயகி என்ற பெயருடனும் அருள்பாலிக்கின்றனர். தலவிருட்சம் நெல்லி. தீர்த்தம் சோம தீர்த்தம். வடதளியில் காமதேனுவின் புத்திரி விமலி பூஜித்ததால் அம்பாள் விமலநாயகி எனப் பெயர் பெற்றார். மேற்றளியில் காமதேனுவின் மற்றொரு புத்தி சபளி பூஜித்தாள். அங்கு அம்பாளின் பெயர் சபளநாயகி. காமதேனுவின் மற்றொரு புத்திரி நந்தினி பூஜித்த முழையூர் என்ற வைப்புத்தலமாகிய மாடக்கோயில் அருகில் உள்ளது. இவை அனைத்தும் திருப்பட்டீச்சுரம் என்ற திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலத்திற்கு அருகில் உள்ளன. ஞானசம்பந்தருக்கு ஈசன் முத்துப்பந்தல் அமைத்து வரவேற்ற பெருமை பெற்றது தேனுபுரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள (பட்டீஸ்வரத்தில்) துர்கை கோயில் மிகவும் பிரபலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com