‘சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது’: அகோபில மடம்  அழகியசிங்கர்!

Sanathana Dharmathai Yaaralum Azhikka Mudiyaathu: Ahobila Mutt Azhagiyasingar
Sanathana Dharmathai Yaaralum Azhikka Mudiyaathu: Ahobila Mutt Azhagiyasingar
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

“சனாதன தர்மம் என்பது தொன்மையானது! நிரந்தரமானது! அதனை யாராலும் அழிக்க முடியாது” என்று உறுதிபடக் கூறினார் அகோபில மடம் அழகிய சிங்கர் ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மஹா தேசிகன் ஸ்வாமிகள்.

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில், ‘சாஸ்த்ர சத் சங்கம்’ ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீ ராம வைபவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ‘ராம பக்தி பிரச்சார மணி’ விருதுகளை அவர் வழங்கினார். தொடர்ந்து அவர் அருளாசி வழங்கி உரையாற்றியபோதுதான் சனாதன தர்மம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்.

அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக அன்றைய தினம் மாலை இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாண்டு காலமாக ராமாயணத்தையும், ராம பக்தியையும் மக்கள் மத்தியில் பரப்பி வரும் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆன்மிக சொற்பொழிவாளர்கள், உபன்யாசகர்த்தாக்கள், வில்லுப்பாட்டுக் கலைஞர் உள்ளிட்ட எட்டு பேருக்கு, ‘ராம பக்தி பிரச்சார மணி’ விருதுகள் வழங்கப்பட்டன. சுந்தர் குமார், தாமல் ராமகிருஷ்ணன், தாமல் பெருந்தேவி, உடையாளூர் கல்யாணராமன் பாகவதர், சுதா சேஷையன், நாகை முகுந்தன், பாரதி திருமகன், துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோருக்கு அகோபில மடம் அழகியசிங்கர் சுவாமிகள் இந்த விருதுகளை வழங்கினார்.

விருது பெற்ற அனைவரும் தங்களது ஏற்புரையில், ‘அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நாடே கொண்டாடும் இந்நாளில் விருது பெறுவதை பெரும் பாக்கியமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டதோடு, தாங்கள் தொடர்ந்து ராம பக்தி பிரச்சாரப் பணியில் ஈடுபடுவதற்கு இந்த விருது மிகுந்த ஊக்கமளிப்பதாகவும்’ குறிப்பிட்டார்கள்.

வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள் பாரதி திருமகன் விருதினைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய ஏற்புரையில், “எங்கள் தந்தையோடு உலகமெங்கும் சென்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை வழங்கியபோதிலும், தமிழ்நாட்டின் ஏராளமான குக்கிராமங்களுக்கும் சென்று நாங்கள் ராமன் கதையை சொல்லி இருக்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறேன். எங்கள் தந்தையை வில்லுப்பாட்டில் ராமாயணம் சொல்லும்படி உத்தரவு போட்டவர் காஞ்சி மகாபெரியவர் என்று நினைக்கும்போது என் நெஞ்சம் நெகிழ்கிறது. மகாபெரியவர் தனது திருக்கரங்களால் தொட்டு ஆசிர்வதித்து அளித்த வில்லை அடித்துத்தான் எங்கள் தந்தையார் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார். அவருக்குப் பிறகு, நானும் அதே வில்லில்தான் வில்லுப்பாட்டு பாடுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்:
அயோத்தி ராமர் கோயில் வீரம் செறிந்த வரலாறு!
Sanathana Dharmathai Yaaralum Azhikka Mudiyaathu: Ahobila Mutt Azhagiyasingar

‘ராம பக்தி பிரச்சார மணி’ விருது பெற்ற தாமல் ராமகிருஷ்ணன், தாமல் பெருந்தேவி இருவரும் உடன்பிறப்புக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் வல்லுநர்களான கே.கே.முகம்மது மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த இரா.நாகசாமி இருவருக்கும், ‘ராம  கீர்த்தி  பிரச்சார மணி’ என்ற விருது வழங்கப்பட்டது. இவர்களது நுட்பமான தொல்லியல் ஆராய்ச்சி ஆவணங்கள் அயோத்தி வழக்கில் முக்கியப் பங்கு வகித்தன. மறைந்த நாகசாமியின் சார்பில் அவரது மகள் கலா இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

logo
Kalki Online
kalkionline.com