

பொதுவாக ராசி சக்கரத்தின் அடிப்படையில், சனி பெயர்ச்சியானது முப்பதாண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. சனிப்பெயர்ச்சியானது முதல் முப்பது ஆண்டுநடக்கும் காலத்தை மங்குசனி, இரண்டாவது பொங்குசனி, மூன்றாவது மாரகச்சனி என்பாா்கள். அப்படி பலருக்கும் ஏழரை சனி என்பது மனிதனுக்கான பக்குவத்தை வரவழைத்து வாழ்க்கை என்றால் இதுதான் என மனிதனுக்கு உணர்த்துகிறது. அதை நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.
பலருக்கு சனி பெயர்ச்சி என்ற தகவலைகேட்டாலே பயம் பரவிவிடுகிறது. அப்படிப்பட்ட நிலையில் சனி பகவானின் தாக்கத்தை சமாளிக்க சனி பகவான் கோவிலுக்கு போவது, பரிகாரம் செய்வது, போன்ற காாியங்களில் ஈடுபடுகிறோம்.
அதன் பிரகாரம் சனி பகவானின் அருளைப்பெற ஆஞ்சநேயர்,மற்றும் விநாயகப்பெருமான் வழிபாடு் மிகவும் பயனளிக்கும்.
அவர்கள் இருவரும் சனிபகவானிடம் நேரடியாக நம்மைப்பற்றி சொல்லுவதாகவும் அதனால் சனியின் தாக்கம் கொஞ்சம் குறையும் என்பதும் நடைமுறையில் உள்ள நம்பிக்கை.
அதேபோல திருநள்ளாறு மற்றும் ஏனைய சனிபகவான் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து பரிகாரங்கள் செய்து முடித்த பின்னர் வேறு எங்கும் செல்லக்கூடாது. பக்கத்தில் உள்ள உறவினர் நண்பர்கள் வீட்டிற்கு கூட செல்லக்கூடாது.
நமக்கு ஏற்பட்டுள்ள சனி பெயர்ச்சிக்காக குடும்பத்துடன் வந்து பரிகாரம் தேடிசெல்கின்றவர்கள் நேரடியாக அவரவர் வீட்டிற்குச் சென்று கைகால்களை சுத்தம் செய்துவிட்டு உடைகளை மாற்றியும் கொள்ளலாம். சிலர் இந்த நடைமுறை தொியாமல் உறவினர் வீடுகளுக்குச் செல்வதால் அவர்களது மன வருத்தங்களுக்கு ஆளாக நோிடும் நிலையை தவிா்ப்பது நல்லது.
பொதுவாகவே சனியைப்போல் கொடுப்பவர் இல்லை என்பாா்கள். நமக்கான நல்ல புத்தியைகொடுப்பாா். நம்மிடம் உள்ள அகந்தையைக் களைந்து நம்மை பக்குவப்படுத்துவாா். அதில் சில சங்கடங்கள் வரும் நிலையில் நாம் நிதானமாக நடந்து கொள்ளவேண்டும்.
நமக்குள் ஏற்படும் சனிபகவானைப் பற்றிய எதிா்மறை நோக்கமே நமது வலிமையைப் போக்கவல்லதாகும். நாம் எதிலும் நிதானம், விவேகம், பொறுமை, தேவையில்லாத வாக்குவாதங்கள் மற்றும் கோபதாபங்களைக்குறைத்துக் கொண்டாலே நமது வாழ்வில் சங்கடங்கள் வந்தாலும் அது உடனே விலகிவிடும். எள்ளு தீபம் ஏற்றுவது காகத்திற்கு அன்னம் வைப்பதை தொடர் பழக்கமாக ஆக்கிக் கொள்ளலாம். சனிபகவானின் நாமாவளியை தினசரி நாம் பாராயணம் செய்தாலே நமக்கு நல்லதே நடக்கும்.
எல்லா நாளும், எல்லாமாதமும், எல்லாகிரகங்களும் நன்மை தரக்கூடியவைதான். அதை நாம் சாிவர பயண்படுத்திக்கொள்வது என்பது நமது கையில்தான் உள்ளது. எதிா்மறை சிந்தனை விடுத்து, நோ்மறை சிந்தனையோடு, வஞ்சக எண்ணம் இல்லாமல், அனைவரும் உலகில் நன்றாக வாழவேண்டும், என மனதார வேண்டி அன்னதானம் மற்றும் சிறு சிறு உதவிகளை நாம் செய்து வந்தாலே நமக்கு இறைவன் நல்லவழியையே காட்டுவான் என்பதை உணர்வோமாக.
பொதுவாகவே நல்லதோ கெட்டதோ இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. என்ற தத்துவத்தை உணர்ந்தாலே நல்லது.