சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய வழிபாட்டு நாள் என்பதால் மார்கழி மாதத்தில் வரும் சனி பிரதோஷம் என்பது சிவபெருமான், பெருமாள், சனீஸ்வரன் மூவரின் அருளை பெறுவதற்குரிய மாதம் ஆகும். சனிக்கிழமையில் வரும் மகாபிரதோஷ நாளன்று எளிமையான பரிகாரங்களையும் வழிபாடுகளையும் செய்து வருவதால் சனியின் தாக்கத்திலிருந்து விடுபட முடியும். மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்றான பிரதோஷ விரதம் சனிக்கிழமையில் வருவது மிக மிக சிறப்பான ஒன்றாகும். பிரதோஷங்களில் மிக உயர்வானதாகக் கருதப்படுவது சனி பிரதோஷம். இதை சனி மகாபிரதோஷம் என சிறப்பித்து சொல்லுவதும் உண்டு.
சனிக்கிழமை பிரதோஷத்தன்று சனியின் குருவான சிவபெருமானை வழிபட்டால் சிவனின் அருளுடன் சனியினால் ஏற்படும் துன்பங்களில் ஈடுபட்டு அவரது அருளையும் பெற முடியும் என்பது நம்பிக்கை. சனியே கர்மகாரகன் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. நம்முடைய கர்ம வினைகளை நீக்கி நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்கக்கூடிய நாள் என்பதால்தான் சனி மகாபிரதோஷத்திற்கு மகிமை அதிகம்.
சனி பகவானின் பிடியில் சிக்கி பலவிதமான துன்பங்களை அனுபவிப்பவர்கள் மார்கழி மாத சனி பிரதோஷம் அன்று தாங்கள் பிறந்த ஊர்களில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சனி பரிகார தலங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொள்வது நல்லது. இந்தத் தலங்களில் சென்று வழிபடுவதால் சனியின் தாக்கம் குறையும்.
சனிக்கிழமையில் வரும் பிரதோஷ காலத்தில் சிவன் கோயிலில் உள்ள அர்ச்சகருக்கு செக்கு நல்லெண்ணெய் தானமாக அளிப்பது, சனீஸ்வரனை பிரதான தெய்வமாகக் கொண்ட சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வது சனி பிரதோஷத்தன்று வில்வத்தால் அர்ச்சனை செய்வதை மறந்துவிடாதீர்கள். சனி பிரதோஷம் நமது சங்கடங்களை நீக்கி வாழ்க்கையை வசந்தமாக்கும்.
பிரதோஷ தினத்தன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தைக் காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் அன்றைய தினம் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. பிரதோஷ காலம் என்பது மாலை நாலு மணியில் இருந்து ஆறு புள்ளி மூணு ஜீரோ வரை எனது செல்லப்படுகிறது. இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனை தரிசிக்க வேண்டும். அந்த நேரத்தில் இறைவனுக்கும் நந்தியையும் தரிசிப்பது நல்லது. பிரதோஷ தரிசனம் காணும் வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும்.
சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண பிரதோஷ பலனைத் தரும். பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல், வில்வ மலை சாத்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்த பிரதோஷம் என்பர்.
சோமசூக்தம் என்றால் அபிஷேகம் நீர் விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமாக, இட வலமாக மேற்கொள்ளப்படும் பிரதட்சண முறையே பிரதோஷ பிரதட்சணம் எனப்படுகிறது. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி, புண்ணியங்கள் சேரும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும்.
பிரதோஷ நேரத்தில் ‘நமசிவாய’ மந்திரம் ஜபிப்பதால் நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமா பாதகங்கள் யாவும் அழிந்து விடும். மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம் யாவுமே சனி பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும்.
‘சனி பிரதோஷ வழிபாடு சர்வ பாவ விமோசனம்.’ நம் பாவங்களை எல்லாம் போக்கி அருளும் சனி பிரதோஷம் அந்த நாளில் சிவாலயம் சென்று சிவனை தரிசிப்பதுபோல நந்தி தேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தையும் தரிசிக்க வேண்டும். இதனால் நம் பாவம் எல்லாம் பறந்தோடும். எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கரந்த பாலை கொண்டு சிவனையும் நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜன்ம கர்ம வினைகளும் நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.
பிரதோஷ காலத்தில் பார்வதி தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேத பாராயணத்தையும் இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும் மூன்றாம் சுற்று நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.
சனி பிரதோஷத்தன்று ஆலயம் சென்று, ‘ஓம் நமசிவாய’ மந்திரம் சொல்லி சிவபெருமானை வழிபடுவதால் சிவன், பெருமாள், நந்தி ஆகியோரின் அருளைப் பெறுவதோடு சனியின் தாக்கத்திலிருந்தும் விடுபடலாம். நாளை சனி மகாபிரதோஷம்.