
இந்த மலர் செடியோ அல்லது இந்த மலரோ உங்கள் கைக்கு கிடைக்கப் போகிறது என்றாலோ அல்லது கிடைத்துவிட்டது என்றாலோ உங்களுக்கு எதிர்பாராத யோகம் வரப்போகிறது என்று அர்த்தம். வெறும் யோகம் மட்டுமில்லை, சுக்ர யோகம் அடிக்கப் போகிறது என்ற அர்த்தம். சுக்ர யோகத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய அதிர்ஷ்டத்தை, சுக்ர ஹோரையை பிடித்துக்கொண்டு கொட்டிக் கொடுக்கக்கூடிய ஒரு பூ என்றால் அது செண்பகப்பூதான்.
ஸ்ரீ மகாலட்சுமி கடாட்சம் தரக்கூடிய செடி என்றால் அது செண்பகப்பூச்செடிகள்தான். இந்த செடிகளை நம் வீட்டில் வைத்து வளர்த்தோம் என்றால் அது நமக்கு அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்டம் இருந்தால்தான் அந்த செடி நம்முடைய வீட்டில் செழிப்பாக வளரும் என்றும் சொல்லலாம். இப்படி நம்முடைய வீட்டில் வளர்க்கக்கூடிய அந்த செண்பகப் பூச்செடியிலிருந்து செண்பக பூவை பறித்து வீட்டில் மகாலட்சுமிக்கு வைத்து பூஜை செய்வது மிகவும் நல்லது. தினமும் செண்பகப் பூவை மகாலட்சுமிக்கு தாயாருக்கு சூட்டுவதால் வீட்டில் வறுமை நிரந்தரமாக அகலும்.
செண்பகப் பூவானது சுக்ரனுக்கு மிக மிக விருப்பமான மலர் என்று கூறப்படுகிறது. சுக்ர பகவானை நினைத்து இந்தப் பூவை ஸ்ரீ மகாலட்சுமிக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக, வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய சுக்ர ஹோரையில் மகாலட்சுமியை நினைத்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாடு எப்படிப்பட்ட தீர்க்க முடியாத துன்பங்களையும் தீர்த்து வைக்கும். இந்தப் பூவை வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு சூட்டி வழிபட்டால் விரைவாகவே நமது கஷ்டங்கள் தீர்ந்துவிடும்.
வீட்டில் செண்பகப்பூ செடியில்லாதவர்கள் கடையில் சொல்லி வைத்து வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து ஏழு மணிக்குள் இந்த பூவை பூஜையறையில் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். பூஜையில் வைத்த செண்பகப் பூ காய்ந்ததும் அந்தப் பூவை பூஜை பொருட்கள் போடும் உங்கள் வீட்டில் செடிகள் இருந்தால் அதில் போட்டு விடலாம் அல்லது நீர் நிலைகளில் சேர்த்து விடலாம்.
எல்லோருக்கும் வெற்றியைத் தேடி தரும் செண்பகப்பூவை சிவபெருமானுக்கு எந்த தினத்தில் வேண்டுமென்றாலும் வைத்து பூஜை செய்யலாம். அது நமக்கு நல்ல பலனைத் தேடித்தரும். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த செண்பகப் பூவால் அர்ச்சனை செய்து மனதார உங்களது வேண்டுதல்களை வைத்துப் பாருங்கள். பதினொறு வாரங்களில் அதற்கான பலனை நிச்சயம் அடைவீர்கள். மேலும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூவினைக் கொண்டு முருகப்பெருமானுக்கு பதினொரு வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்து குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மட்டும்தான் இந்த செண்பகப் பூவை முருகப்பெருமானுக்கு சாத்தி வழிபட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் மனதில் இருக்கும் எந்த வேண்டுதலை வைத்து வேண்டினாலும் அதற்கான பலன் நிச்சயம் கிட்டும். எப்படிப்பட்ட தீர்க்க முடியாத துன்பங்களையும் தீர்த்து வைக்கும் இந்தப் பூவை வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு சூட்டி வேண்டினால் விரைவாகவே உங்களது கஷ்டங்கள் தீர்ந்து விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
எதிர்காலத்தில் உங்களுக்கு வரக்கூடிய அதிர்ஷ்டமான வாழ்க்கையை உணர்த்தும் வகையில் இந்தப் பூ உங்கள் கைக்குக் கிடைத்தால் அதை பூஜைக்குப் பயன்படுத்தத் தவற விடாதீர்கள். செண்பகப் பூவை எங்கே கண்டாலும் உடனே வாங்கி மகாலட்சுமி தாயாருக்கும் முருகப்பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் சூட்டி உங்கள் வாழ்க்கையில் அளவில்லா செல்வ வளத்தைப் பெற்று மகிழ்ச்சிகரமாக வாழுங்கள். செண்பகப் பூவின் மணமே வீட்டில் நிரந்தரமாக ஸ்ரீ மகாலட்சுமியை குடியேறச் செய்து விடும்.