சிவராத்திரி நாளில் தரிசிக்க வேண்டிய கோவில்கள்!

Shivratri special articles
Shivratri special articles
Published on

திருக்கடவூர்- அமிர்தகடேஸ்வரர் கோயில்

தன் பக்தன் மார்க்கண்டேயனை பிடிக்க வந்த காலனை சிவன் காலால் உதைத்த சம்பவம் நடந்தது சிவராத்திரி நாளில்தான். காலசம்காரரை சிவராத்திரி நாளில் வணங்குவது அகால மரண பயத்தை போக்கும்.

திருவண்ணாமலை - தேவிகாபுரம் - கனகிரீஸ்வரர் கோயில்

ஒரு சமயம் சிவராத்திரி நாளில் வேடன் ஒருவன் இப்பகுதியில் நிலத்தை தோண்டிய போது ஒரு லிங்கம் வெளிப்பட்டது அதை கடப்பாறைபட்டதால் லிங்கத்திலிருந்து ரத்தம் வழிந்ததை பார்த்தவுடன் காயம் பட்ட இடத்தில் மூவிரை வைத்து கட்டி குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்தால் காய்ச்சல் வந்துவிடும் என்று வென்னீரால் அபிஷேகம் செய்தான் அதைத் தொடர்ந்து இன்றும் இத்தலத்தில் இவருக்கு வென்னீர் அபிஷேகமே செய்யப்படுகிறது. இது நடந்ததும் சிவராத்திரி நாளில்தான். இங்கு ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்கள் உள்ளது மிகவும் சிறப்பு.

ஸ்ரீ சைலம். மல்லிகார்ஜுனர்

ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக மல்லிகார்ஜுனர் கோவில். இது ஆதிசங்கர சிவானந்த லஹரி ஸ்லோகத்தை இயற்றிய சம்பவம் சிவராத்திரி நாள் ஒன்றில் நிகழ்ந்தது .

இங்கு நந்தி தேவரே மலை உருவில் இருப்பதாகவும் ,சிவ வழிபாடு செய்து சிவனைத் தாங்கும் வரம் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. சிவராத்திரி அன்று சிவனை இங்கு வழிபட்டால் ஏராளமான புண்ணிய பலன்களை தரக்கூடியது.

காளஹஸ்தி - காளத்தியப்பர் கோயில்

இங்கு கண்ணப்ப நாயனார் சிவராத்திரி நாள் ஒன்றில் தான் தன் கண்களை சிவபெருமானுக்கு கொடுத்தார் .

சிவராத்திரி நாளில் இங்கு தேரோட்டம் ,ரிஷப வாகன சேவை நடக்கிறது சிவராத்திரி தரிசனத்தை இத்தலத்தில் மேற்கொண்டால் வாழ்வில் இன்றியமையாத யாவும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
மகா சிவராத்திரி: சிவனின் அருள் கிடைக்க இப்படி விரதம் இருங்க..!
Shivratri special articles

ஓமாம்புலியூர்

சிதம்பரத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இக்கோவில். சிவராத்திரி நாள் ஒன்றில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை சொன்ன இடம் இந்த ஓமாம்புலியூர் .

இந்த ஊரை பிரணவ வியாக்ரபுரம் என்றும் அழைப்பர். இங்குசிவராத்திரி வழிபாடு செய்வது மனநிம்மதிக்கு வழிவகுக்கும் என்பது ஐதீகம்.

திருவைகாவூர்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது சிவராத்திரி நாளில் ஒரு வேடன் வில்வ மரத்தில் ஏறி புலிக்குப் பயந்து வில்வ இலையை சிவன் மேல் பறித்து போட அந்த பூஜையை ஏற்ற இறைவன் வேடனுக்கு காட்சி அளித்து மோட்சம் அளித்தார் . இத்தலத்தில் வழிபாடு செய்தால்மோட்சம் சித்தி கிடைக்கும். பிறவிப் பிணி தீர்க்கும்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்

புராணத்தோடு தொடர்புடைய தலங்களில் இதுவும் ஒன்றாகும் .இறைவனை தரிசிப்பதால் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். ஒரு மகாசிவராத்திரி நாளில் லிங்கோற்ப காலத்தில் இறைவன் இத்தலத்தில் ஜோதி உருவாக காட்சி கொடுத்தார் என்கிறது சிவபுராணம். இங்கு சிவராத்திரி தரிசனம் செய்வது வாழ்வில் ஏற்படும் தடைகளை போக்கி வெளிச்சமாக்கும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்

சிவனை பார்வதி விளையாட்டாக கண்களைப் பொத்தி உலகங்கள் இருண்டதால் சிவன், தன் மூன்றாவது கண்ணை திறந்ததால் வெப்பம் தாங்காமல் பல உயிர்கள் வருந்தின. இந்த சங்கடம் நீங்கிட ருத்திரர்கள் இங்கு பூஜை செய்தனர். உலகத்தார்க்கு துன்பம் ஏற்பட்ட பாவத்திலிருந்து விடுபட பார்வதி காமாட்சியாய் இருந்து சிவனை பூஜை செய்த இடம் இந்த கோவில் .எனவே காஞ்சியில் சிவராத்திரி தரிசனம் செய்வது அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை போக்கும்.

இதையும் படியுங்கள்:
மகா சிவராத்திரி: விரத முறைகள், பூஜை நேரங்கள், வழிபாட்டு விதிகள், தவிர்க்க வேண்டிய தவறுகள்!
Shivratri special articles

கோகர்ணம் - கர்நாடகா மகாபலேஸ்வரர் கோயில்

கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு அருகில் உள்ளது கோவில். இங்கு சிவராத்திரியில் தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும்.

ராமேஸ்வரம். ராமநாத சுவாமி கோவில்

இங்கும் 4 கால பூஜை சிவராத்திரியில் மிகவும் முக்கியமான பூஜை ஆகும். இங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

மயிலாப்பூர் - கபாலீஸ்வரர் கோயில்,

திருவான்மியூர் - மருந்தீஸ்வரர் கோயில்

இன்னும் நிறைய சிவன் கோவில்கள் உள்ளன.

பக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவராத்திரி நாளில் சிவனின் அருளைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com