

ஆன்மிகக் தேடலிலும், அறிவியல் சிந்தனையிலும் சாதாரண மனித எல்லைகளைக் கடந்தவர்கள் நம் தமிழ்நாட்டு சித்தர்கள். அவர்கள் நிகழ்த்திய அத்புதங்கள் பல நேரங்களில் மாயாஜாலம் போன்று தோன்றினாலும் அதன் பின்னே பிரபஞ்ச ரகசியங்களும், அஷ்டமாசித்திகளின் பேராற்றலும் ஒளிந்திருக்கின்றன.
இப்பதிவில் நாம் பார்க்கப்போவது பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காக புஜண்ட சித்தர் காசியில் நடத்திய ஒரு விசித்திரமான சம்பவத்தைக் பற்றியதுதான்.
ஒருமுறை காகபுஜண்டர் புனித நீராட காசிக்குச் சென்றார். அங்கு ஒரு சிற்பி களிமண்ணைக் கொண்டு அசாத்தியமான தத்ரூபமான குதிரைச்சிலை ஒன்றைச் செய்து வீதியின் ஓரத்தில் வைத்திருந்தான்.
பார்ப்பதற்கு நிஜக்குதிரை போலவே காட்சி தந்தது அந்த மண்குதிரை அப்போது அங்கே வந்த மக்கள் கா புஜண்டரின் எளிய தோற்றத்தைக்கண்டு சித்தர்களின் யோக சக்திகளையும் அவர்களின் ஆற்றலையும் ஏளனமாக பேசத் தொடங்கினர். சித்தர்களால் எல்லா வற்றையும் செய்ய முடியும் என்கிறார்களே, இந்த மண் குதிரையை அவர்களால் ஓடவைக்க முடியுமா? என்று கேலி செய்தனர்.
மக்களின் அறியாமையை கண்டு புன்னகைத்த காகபுஜண்டர் மெதுவாக அந்த சிலையின் அருகில் சென்றார். தன் அசாத்திய யோக வலிமையால் பிரபஞ்சத்தில் உள்ள வாயுவையும், ஜீவ ஆற்றலையும் திரட்டி அந்த மண் குதிரை மீது செலுத்தினார். அடுத்த நிமிடம் அங்கே கூடியிருந்த கூட்டம் உறைந்து போனது. வெறும் களிமண்ணால் செய்யப்பட்ட குதிரைக்கு திடீரென உயிர்நாடி துடிக்கத் தொடங்கியது. கண்கள் அசைந்தன. கால்களில் இரத்த ஓட்டம் பாய்ந்தது. ஒரு நிஜக் குதிரையைப் போன்று அது உரத்த குரலில் காசி வீதியே அதிரும்படி கனைத்தது.
யாரும் எதிர்பாராத கணத்தில் காகபுஜண்டர் உயிர்பெற்ற மண் குதிரை மீது அமர்ந்தார். காசிநகரத்தில் மின்னல் வேகத்தில் அந்த குதிரை ஓடியது. வெறும் ஜடப் பொருளாக இருந்த களிமண்ணை தன் தத்துவஞானத்தால் சதைப் பற்றாக சித்தர் மாற்றினார். மக்கள் இதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடிவந்து சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
இதிலிருந்து நாம் அறிவது என்ன?
சித்தர்களுக்கு அணுவை அணுவால் மாற்றும் வித்தை தெரிந்திருந்தது. அறிவியல் உலகம் இன்று பேசும் பொருள், மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் பரிமாற்றத்தை அன்றே தன் மனோசக்தி மால் செய்து காட்டியவர் காகபுஜண்டர். நம் முன்னோர்களின் ஆற்றல் வியக்க வைக்கிறது அல்லவா.