கூட்ட நெரிசலுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்களே... கோயிலாக இருந்தாலும் தவிருங்கள்!

Stampede
Stampede
Published on
mangayar malar strip

யிர் என்பது எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் தற்சமயம் சூழல் அமைந்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பொதுக்கூட்டத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் மரணித்த செய்தி அனைவரின் கவனத்தையும் கவர்ந்து, மனதை பதை பதைக்க வைக்கிறது.

பொதுவாக அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்களுக்கு வரும் கூட்டங்களே தங்கள் கௌரவத்தை உயர்த்துவது என்று எண்ணி அதன் வழியில் செயல்படுவது இயல்பான ஒன்று. ஏனெனில் அவர்கள் நட்சத்திரங்களாக போற்றப்படுகிறார்கள். ஆனால் சாதாரண மனிதர்களாகிய பொதுமக்கள் அந்த நட்சத்திரங்களை உண்மை என்று நம்பி அதன் அருகில் சென்று விட்டில் பூச்சிகளாக மடிகிறார்கள் அல்லது வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறார்கள்.

நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும், நம்மைப் பெற்று வளர்த்து கஷ்டப்பட்டு ஆளாக்கிய பெற்றோருக்கு இந்த முன்னுரிமையை ஏன் அளிப்பதில்லை? பாசமும் அன்பும் ஏன் கானல் நீராக மறைபவரிடம் செல்கிறது?

அதிலும் தற்போதைய இளைஞர்களும், இளைஞிகளும் தங்கள் கைகளில் இருக்கும் டெக்னாலஜி வசதிகளை வைத்துக்கொண்டு, அதில் தோன்றும் பிரபலங்களை தங்கள் ரோல் மாடலாக வரித்துக் கொண்டு சமூகத்தின் நியதிகளை மறந்து, பண்புகளை மறந்து, தாங்கள் நினைத்ததை செயல்படுத்துதே சட்டம் என்று எண்ணி அதன் வழியில் செல்வது அவர்களின் எதிர்காலம் குறித்த பெரும் மனக்கலக்கத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த காலம் முதல் இந்த காலம் வரை சினிமா என்னும் மாயத்திரை நம்முடைய வாழ்க்கையின் அங்கமாக வகித்து வருவதை அறிவோம். ஆனால் அந்தக்கால மனிதர்கள் அந்த கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் ஒரு எல்லைக்குள் வைத்து கொண்டாடிய விதம் வேறு. அவர்களை வெறுமனே ரசித்து விட்டு தங்கள் குடும்பத்தை பார்த்தார்கள்.

இதையும் படியுங்கள்:
கூட்டத்தில் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி? ஒவ்வொருவரும் அறிய வேண்டிய உயிர் காக்கும் வழிகள்!
Stampede

ஆனால் இந்தக் காலத்தில் தங்கள் குடும்பங்களை மறந்து, தங்கள் வருமானத்துக்காக நடிக்கும் கதாநாயகர் களையும் கதாநாயகிகளையும் ரசித்து அவர்கள் வழியே செல்கிறார்கள். அந்தக்கால சாதாரண ரசிகருக்கும், இந்த கால அதீத ஆர்வ ரசிகருக்கும் இருக்கும் வேறுபாடு இதுதான். இதற்கு சான்றுதான் நடிகரை காண அலைகடலென திரளும் ரசிகர்கள் கூட்டம்.

ஆனால் அந்த வேறுபாடு எவ்வளவு சீரழிவை தருகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் ஒவ்வொரு முறை அசம்பாவிதங்கள் நிகழும் போதும் அது குறித்தான பல்வேறு விவாதங்களும், வாதங்களும் மக்களிடையே பிளவுகளை உண்டு செய்கிறது. இதனால் இறந்தவர்கள் இனி மீளப்போவதில்லை இறுதிவரை அவர்களின் குடும்பங்களுக்கு தீராத மனவருத்தமே.

ஆயினும் இந்த அசம்பாவிதங்களுக்கு பொறுப்பானவர்களாக அரசு மற்றும் காவல் துறையினரையும் அந்த கூட்டத்தை நடத்திய பிரபலத்தையும் குறித்து பல கருத்துக்கள் உலா வந்தாலும் இதில் முக்கியமான பலரின் கருத்தாக இருப்பது அங்கு எல்லை மீறி கூடிய மக்களின் பொறுப்பற்ற செயலும் ஒரு காரணம் என்பதே.

இதையும் படியுங்கள்:
புதிய விதிமுறை..! இனி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்திருந்தாலும் அபராதம்..!
Stampede

தேவையின்றி அந்த கூட்ட நெரிசலில் சென்று ஒரு நடிகரை காணவேண்டும் என்ற நோக்கம் சரியானதா? இதில் குழந்தைகளை தூக்கிக்கொண்டு பெண்களும் இளைஞர்களும் பெருமளவில் சென்றிருப்பது வேதனைக்குரிய விஷயம். கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்த பின்னும் அந்த பிரபலத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற இலட்சிய வெறிகொண்டு காத்திருந்த ரசிகர்களை என்னவென்று சொல்வது?

இந்த சமூகம் கட்டமைத்த வாழ்வியல் சரியில்லையா? அவர்கள் கற்ற கல்வி எதற்கு பயன்படுகிறது? இதுபோல் ஆட்டுமந்தைகள் கூட்டம் போல் ஒருவர் பின்னால் செல்வதற்காகவா?

பொதுமக்களாகிய நாம்தான் சிந்திக்க வேண்டும், இதில் யாரையும் குற்றம் சொல்லி புலம்புவதை விடுத்து நமக்கான கடமை என்ன என்று யோசிக்கவேண்டும் திரையில் காணப்படும் நிஜக்கதாநாயகர்களின் போலியான பிம்பத்தை ரசிப்பதோடு உறவை முடிக்க வேண்டும்.

ஒரு கூட்டத்திற்கு செல்லுமுன் அங்குள்ள பாதுகாப்பு அம்சங்களை கேட்டு அறியவேண்டும். தகுந்த பாதுகாப்பு இல்லை எனில் அங்கு செல்வதை தவிர்த்து நமது பிள்ளைகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளை கூட்டங்களில் எடுத்துச் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அது கோவிலாக இருந்தாலும்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூரில் களை கட்டியது தீபாவளிக் கொண்டாட்டம்!
Stampede

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரும் பொது மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும். எல்லை மீறும் கூட்டங்களின் அனுமதியை தயங்காமல் ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை தன்னார்வலர்கள் வைத்து வருகின்றனர்.

இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது நமது கடமையும் என்பதை உணர்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com