

* இயேசு கிறிஸ்து மறைந்து 440 ஆண்டுகளுக்கு பின்னரே கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் என்றால் ‘கிறிஸ்துவின் ஆராதனை’ எனப் பொருள். X- மஸ் என்றால் கிறிஸ்துமஸ்தான். இதில் X என்றால் கிரேக்க எழுத்தில் 'முதல்' என்று அர்த்தம்.
* கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25 என்று முதன் முதலாக கி.பி.154ம் ஆண்டு போப் ஜூலியசால் அறிவிக்கப்பட்டது. பண்டைய இங்கிலாந்து நாட்டில் டிசம்பர் 25ம் தேதியே ஆண்டின் முதல் நாள்.
* உலகின் அதிகமான பரிசுத்தொகை வழங்கும் லாட்டரி ஸ்பெயினின் கிறிஸ்துமஸ் அதிர்ஷ்டக் குலுக்கல்தான். ஒவ்வொர் ஆண்டும் கிறிஸ்துமஸை ஒட்டி அது நடத்தப்படுகிறது. அதிர்ஷ்டக் குலுக்கல் தொடங்கி 200 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பரிசுத்தொகை ஏறத்தாழ மொத்தம் 2.71 பில்லியன் யூரோ. நம்மூர் பணத்தில் ஏறத்தாழ 19,000 கோடிகள். இதில் முதல் பரிசு மட்டுமே 3 கோடியே 20 லட்சம்.
* செயிண்ட் நிக்கோலஸ் என்ற நெதர்லாந்து நாட்டின் பாதிரியார் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு ஏழை குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குவதை 4ம் நூற்றாண்டில் தொடங்கினார். இந்த செயின்ட் நிக்கோலஸ் பெயர்தான் நாளடைவில் மருவி சாண்டா கிளாஸ் ஆக உருவெடுத்தது.
* சாண்டா கிளாஸ் என்பது சின்டர்கிளாஸ் அல்லது செயிண்ட் நிக்கோலஸ் என்ற பெயரில் இருந்து உருவானது. அது கிறிஸ்தவ பிஷப் செயின்ட் நிக்கோலஸ் என்பவருடன் தொடர்பைக் கொண்டுள்ளது. இவரது உடல் தற்போது துருக்கியில் அமைந்துள்ள ‘ஸ்மிர்னா’ என்ற இடத்தில் புதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, சாண்டா அந்தப் பகுதியைச் சேர்ந்தவராகவே இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
* கிறிஸ்துமஸ் சமயத்தில் சைபீரியாவில் ‘பாதர் ஆஃப் புரோஸ்ட்’ (சான்டா கிளாஸ்) எனும் பெயரில் கிறிஸ்துமஸ் பரிசுகளைக் கொண்டு செல்லவே ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் சைபீரியாவில் இயக்கப்படுகிறது.
* அமெரிக்காவின் இன்டிகா, புளோரிடா மாநிலத்தில் உள்ள இரண்டு தபால் நிலையங்களின் பெயர் என்ன தெரியுமா? ஒன்றின் பெயர் 'சாண்டா கிளாஸ்' மற்றொன்றின் பெயர் ‘கிறிஸ்துமஸ்.' இவை இரண்டிலும் கிறிஸ்துமஸ் சமயத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
* உலகிலேயே முதல் முறையாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சட்டபூர்வமாக விடுமுறையை அறிவித்தது அலபாமாதான். இது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. 1836ம் ஆண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது. நெதர்லாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் பரிசுகளை டிசம்பர் 6ம் தேதி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
* ஹென்றி கோல் என்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் இயக்குநர்தான் 1843ம் ஆண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் முறையை அறிமுகப்படுத்தினார்.
* கிறிஸ்துமஸ் சமயத்தில் வீடுகளில் வைத்து அலங்கரிக்கப்படும் கிறிஸ்துமஸ் மரம் நிஜ மரமாக இருக்கவே அமெரிக்கர்கள் விரும்புகின்றனர். இதற்காகவே 36 மில்லியன் நிஜ பைன் மரங்கள் கிறிஸ்துமஸ் சமயத்தில் விற்பனையாகின்றன என்கிறார்கள்.
* ‘வெள்ளை கிறிஸ்துமஸ்’ என்ற பாடல்தான் அதிகம் விற்பனையான கிறிஸ்துமஸ் பாடல். விற்பனையில் கின்னஸ் சாதனை படைத்த இந்த ‘வெள்ளை கிறிஸ்துமஸ்’ (White Christmas) என்பது 1942ல் பிங் கிராஸ்பி பாடி பிரபலப்படுத்திய, இர்விங் பெர்லின் எழுதிய உலகப் புகழ் பெற்ற ஆங்கிலப் பாடல்.
* உலக வரலாறு மற்றும் இயேசுவின் வாழ்க்கையை விளக்கும் ‘பைபிள்’, பிப்லியா என்ற கிரேக்க வார்த்தையால் ஆனது. அதற்கு ‘புத்தகம் அல்லது பத்திரம்’ என்று பொருள். கி.பி. 370 வரை பழைய ஏற்பாட்டை 'பிப்லியா' என்றும். பிறகு பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை இணைத்து பைபிள் என்றும் அழைத்தனர்.
* வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ்க்கு மறுநாள் ‘பாக்சிங்' நாள் என்று கொண்டாடுகின்றனர். அன்று சர்ச்களுக்கு வெளியே பெட்டிகளில் பொருட்களை வைத்து ஏழை எளியவர்களுக்கு உதவுவார்கள்.
* கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கேர்ல் சர்வீஸ் என்பது பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி. கிறிஸ்தவர்கள் குழுவாக சேர்ந்து கிறித்தவ பாடல்களை ஆடி பாடுவார்கள். 2014ம் ஆண்டு கிறிஸ்துமஸ் முதல் நாள் ஈ.சி.ஜெட் விமானம் ஒன்று லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பி ஜெனிவா சென்றது. விமானம் 39,000 அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தில் இருந்த ‘ஏ.சி.எம். கோஸ்டல்’ என்ற கிறிஸ்தவ பாடகர்கள் குழு 15 நிமிடங்கள் வானில் கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸை நடத்தினர். உலகிலேயே முதல் முறையாக வானில் கிறிஸ்துமஸ் கேர்ல் நிகழ்ச்சி நடந்தது அப்போதுதான்.