
கோயில்கள், நதிக்கரைகள், பசு மடம், மகான்களின் சமாதி போன்ற இடங்களில் தீபம் ஏற்றி வழிபட்டால் நமது தரித்திரம் விலகும். புத்தியிலும் மனத்திலும் உள்ள குழப்பங்கள் நீங்கும்.
திங்கள், புதன், வியாழக்கிழமைகள் திருமணத்தை நடந்த நடத்த உகந்த நாட்கள் என்று ஜோதிட நூல்கள் சொல்லுகின்றன.
வெள்ளிக்கிழமையன்று நரசிம்மர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, ஒரு அம்பாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வந்தால் பிரிந்தவர் ஒன்று சேர்வர். செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்து வந்தால் கடன் எளிதில் முடிய வழி கிடைக்கும். புதன்கிழமையன்று தரிசனம் செய்து வந்தால் நல்ல உத்தியோகம் அமையும்.
ஒரே வீட்டில் இரண்டு அடுப்பு வைத்து சமைக்கக் கூடாது. அதாவது, கூட்டுக் குடும்பமாக இருந்து சண்டை போட்டுக்கொண்டு மாமியார், மருமகள் தனித்தனியாக சமைப்பது அல்லது சகோதரர்கள் ஒன்றாக இருந்து சமைப்பது கூடாது.
கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் ஏற்படும். தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை ஏற்படும். தென்மேற்கு நோக்கி ஜபம் செய்தால் வறுமை அகலும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பொருட்செலவு ஏற்படும். வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீய சக்திகளை ஓட்டி விடலாம். வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம், கல்வி கிடைக்கும். வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும். வீட்டில் ஜபம் செய்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும். கோயில் அல்லது வனத்தில் ஜபம் செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும். குளம் போன்றவற்றில் ஜபம் செய்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். ஆற்றங்கரையில் நதிகளில் ஜபம் செய்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். மலை உச்சியில் ஜபம் செய்தால் ஒரு கோடி மடங்கு பலன் கிடைக்கும். சிவன் கோயிலில் ஜபம் செய்தால் இரண்டு கோடி மடங்கு பலன் கிடைக்கும். அம்பிகை சன்னிதியில் ஜபம் செய்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும். சிவன் சன்னிதியில் ஜபம் செய்தால் பல கோடி மடங்கு பலன் கிடைக்கும்.
பிரதமையன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு நெய் படைத்து வழிபட வேண்டும். துவிதியையன்று பிறந்தவர்கள் சர்க்கரை படைத்து வழிபட வேண்டும். திருதியையன்று பிறந்தவர்கள் பால் படைத்து வழிபட வேண்டும். சதுர்த்தியன்று பிறந்தவர்கள் பட்சணம் படைத்து வழிபட வேண்டும். பஞ்சமியன்று பிறந்தவர்கள் வாழைப்பழம் படைத்து வழிபட வேண்டும். சஷ்டியன்று பிறந்தவர்கள் தேன் படைத்து வழிபட வேண்டும். சப்தமியன்று பிறந்தவர்கள் வெல்லம் படைத்து வழிபட வேண்டும். அஷ்டமியன்று பிறந்தவர்கள் தேங்காய் படைத்து வழிபட வேண்டும். நவமியன்று பிறந்தவர்கள் நெற்பொரி படைத்து வழிபட வேண்டும். தசமியன்று பிறந்தவர்கள் கருப்பு எள் படைத்து வழிபட வேண்டும். ஏகாதசியன்று பிறந்தவர்கள் தயிர் படைத்து வழிபட வேண்டும். துவாதசியன்று பிறந்தவர்கள் அவல் படைத்து வழிபட வேண்டும். சதுர்த்தியன்று பிறந்தவர்கள் சத்துமாவு படைத்து வழிபட வேண்டும். பௌர்ணமி, அமாவாசை தினங்களில் பிறந்தவர்கள் பாயசம் படைத்து வழிபட வேண்டும். மேற்கண்ட நிவேதனத்தை யாருக்காவது தானம் செய்தாலும் உங்களுக்குப் புண்ணிய பலன் கிடைக்கும். நீங்கள் விரும்பும் தெய்வத்திற்கு படைப்பதும், குறிப்பாக அம்பாளுக்குப் படைப்பது சிறந்தது.
வடதிசை நோக்கி உட்கார்ந்து உணவை உட்கொள்ளக் கூடாது. அந்தி நேரத்தில் சாப்பிடக் கூடாது. தானே மலர்மாலை தொடுத்து தனது கழுத்தில் அணியக் கூடாது.
கோயில் வழிபாடு செய்து விட்டு நேரே வீட்டிற்கு வந்தால்தான் வழிபாடு செய்த பலன் கிடைக்கும். இடையில் தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்றால் வழிபாட்டின் பலன் கிடைக்காது.