தமிழ் மாதங்களில் ஆவணி மாதம் ஆனது ஐந்தாவது மாதம்.
இது கேரளாவில் முதல் மாதமாகவும் சிம்ம மாதமாகவும் கருதப்படுகிறது. வடமொழியில் சிராவண நட்சத்திரம் என்று அழைக்கப்படும் திருவோண நட்சத்திரம் இருப்பதால் இது சிராவண மாதமாகவும் கொண்டாடப்படுகிறது.
இதன் பொருள் 'அனைத்து மாதங்களின் அரசன்' என்பதாகும்.
ஆவணி மாதத்திற்கு சிங்க மாதம் மற்றும் வேங்கை மாதம் என்று வேறு பெயர்களும் உண்டு.
அகத்தியர் ஆவணி மாதத்தின் சிறப்பை இவ்வாறு குறிப்பிடுகிறார். 'சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை, சிவபெருமானை விட மேம்பட்ட இறைவன் இல்லை' என்கிறார்.
ஆவணி மூல சிறப்புகள்:
ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தினை 'ஆனி மூலம் அரசாளும்' என்று சிறப்புடன் கூறப்படுகிறது.
அது போல ஆவணி மாதத்தில் வரும் மூல நட்சத்திரம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்தல், நாரைக்கு முக்தி கொடுத்தல், தருமிக்கு பொன் கொடுத்தல், பிட்டுக்கு பலி கொடுத்தல், வளையல் விற்பது சிவபெருமானின் திருவிளையாடல்கள் என மதுரை மண்ணில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சொக்கநாதருக்கு மகா உற்சவம் நடைபெறும்.
இறைவன் மாணிக்கவாசகருக்கு குதிரைகளைத் கொண்டு வந்து ஒப்படைத்ததும் மாதத்தின் சிறப்பாகும்.
திருவோணம் திருவிழா:
கேரள மக்களால் கொண்டாடப்படும் உலகப் புகழ் பெற்ற ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைத்தான் மலையாள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகையின்போது கசப்பு சுவை தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயார் செய்து ஓணம் விருந்து அளிப்பது சிறப்பு.
ஆவணிமாதத்தில் தான் இளையான்குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாவும் கொண்டாடப்படுகிறது.
மகாபலி மன்னன் தானம்:
அரசர்களின் தலைசிறந்த மன்னன் மகாபலி. ஆவணி மாதம் சிராவண துவாதசி நாளில் வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் செய்தார். சிராவண தீபம் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் ஏற்றப்படும். இந்த தீபமானது, நாம் வேண்டிய விருப்பத்தை நிறைவேற்றும் அற்புத வழிபாடு என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் மலையப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ள திருப்பதிக்கு, திருச்சேறை செய்யும்போது அங்கு ஏற்றப்படும் 1008 திரிகள் கொண்ட நெய் தீபம் அப்பகுதியே ஒளி வெள்ளத்தில் மிதக்கச் செய்யும். இதற்கு 'சகஸ்ர தீப அலங்கார கார சேவை' என்று பெயர்.
ஆவணி ஞாயிறு சூரிய வழிபாடு:
ஆவணி மாதம் மூல நட்சத்திரம் மற்றும் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை உட்பட பல விரத நாட்கள் இந்த மாதத்தில் வருகிறது.
மேலும் ஆவணி மாதம் செவ்வாய், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களும் முக்கிய நாட்களாக கூறப்படுகின்றன. புதிதாகத் திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கௌரி விரதம் கடைப்பிடித்தால் நல்லது. ஆவணி மாதம் சிவனை வழிபட உகந்த நாள். திங்கள் மற்றும் வியாழன் ஆகியவை இன்றியமையாத நாட்கள் ஆகும்.
ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது. அன்றிலிருந்து சூரிய நமஸ்காரம் வழிபாட்டை தொடர்வதும் நல்லது.
ஆவணி மாதத்தில் புதிய வீடு கிரகப்பிரவேசம் செய்து நுழைந்தால் அந்த வீட்டில் நல்ல வாழ்க்கை அமையும் என்பதை நம்பிக்கை.
இந்த மாதத்தில் திருமணம் நடந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதும் நம்பிக்கை.
ஆவணி மாதம் வரும் சதுர்த்தியான விநாயகரை போற்றி வரும் விநாயகர் சதுர்த்தி விரதம் இருந்து வழிபட அனைத்து நன்மையும் கிடைக்கும்.