

மக்களின் உடற்பிணி, உள்ளப்பிணிகளைப் போக்கி பேரின்ப வாழ்வளிக்க க்ஷீதேவியின் அம்சமாக தோன்றியதே துளசி.
உலகத்தை விளங்க வைக்கும் மகாலட்சுமியின் உருவமாக துளசி காட்சியளிப்பார். துளசி இல்லாத பூஜை வழிபாட்டை மகாவிஷ்ணு ஏற்றுக்கொள்வதில்லை. திருத்துழாய் என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜைப் பொருளாக விளங்குவது துளியே. துளசி உள்ள இடத்தில் விஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார்.
துளசியால் விஷ்ணுவை பூஜித்தால் ஆயிரம் பாற்குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்த பலன் கிடைக்கும். அந்திம காலத்தில் துளசி தீர்த்தம் உட்கொண்டால், யமன் உலகை எண்ணாமல் வைகுண்ட பதவி அடைவார்கள். ஆம். துளசியினால் மகாதேவனையும் அர்ச்சிக்க மேலான பலன்களை பெறலாம்.
ஏனெனில் அவர் சங்கரநாராயணராக இருக்கிறார். இத்தகைய மகிமை வாய்ந்த துளசியை நம் வீடுகளில் வளர்த்து, பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் கிடைப்பார். சுமங்கலிகள் பூஜை செய்தால் தீர்க்க சவுமாங்கல்யத்தை பெறுவார்கள்.
துளசியை மனமார வேண்டினால், மகாவிஷ்ணுவின் பரிபூரண அருள் கிடைக்கும். துளசியை ஒவ்வொரு இலையாக விட்டு பூஜை செய்ய வேண்டும். கிள்ளி கிள்ளிப் போடக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை, துவாதசி, ஞாயிற்றுக்கிழமை, கிரகண காலம், மத்தியானம், சந்தியா காலம், இரவு முதலிய காலங்களில் துளசியை பறிக்கக் கூடாது. கார்த்திகை, மார்கழியில் துளசி பூஜை செய்பவர்கள். துளசியால் பகவானை அர்ச்சித்து வழிபடுபவர்களது கோரிக்கை நிறைவேறும் என்கிறது ப்ரஹம வைவர்த்த புராணம்.
துளசி இலையின் நீர் கங்கைக்கு நிகரானது. எனவேதான் துளசி நீரால் எம்பெருமான் திருமேனியில் ஆவாஹனாதிகள் செய்கிறார்கள். துளசியின் மற்றொரு பெயர் பிருந்தா. காடு போல் வளர்ந்திருக்கும் இடத்திற்கு துளசிக்காடு அல்லது பிருந்தாவனம் என்று பெயர். துளசி இலையின் நுனியில் நான்முகன், அடியில் சங்கரன், மத்தியில் விஷ்ணு, பன்னிரண்டு ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், எட்டு வசுக்கள், அசுவினி தேவர்கள் இருவர் துளசியில் வசிக்கின்றனர். பரந்தாமன் சூடிய துளசியை மனமார வேண்டினால் பரமசுகம் பெறுவது திண்ணம்.