வீட்டு வாசலில் பசு வந்து நின்றால் இவ்வளவு நன்மைகளா? இதோ அதன் ஆன்மீக ரகசியங்கள்!

spiritual-significance-
spiritual-significance-
Published on

ந்து வாழ்வியல் நெறிமுறைப்படி, இயற்கையாக நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஏதேனும் ஒரு காரணம் பின்னணியில் இருக்கும். அவற்றை கூர்ந்து ஆராய்ந்தால் அதன் பலனை நீங்கள் உணர்வீர்கள். பசு ஒன்று உங்கள் வீட்டு வாசலில் அடிக்கடி தென்படுவது ஒரு சாதாரண செயல்தான். ஆனால், பின்னால் ஒளிந்துள்ள ஆன்மீக தகவலைப் பற்றி தெரியுமா?

பசு என்பது சனாதான தர்மத்தில் மதிக்கப்படும் மற்ற விலங்குகளைப்போல் இல்லாமல், அதற்கென்று தனி மரியாதை உண்டு. பசு கடவுளாக மட்டும் பார்க்கப்படாமல் ஒரு தாயாகவும் மதிப்பும் மரியாதையுடன் நடத்தப்படுகிறது. பசுவின் உடலில் மும்மூர்த்திகளும் ஏனைய மற்ற தேவர்களும் வசிப்பதாக பல புராணங்கள் கூறுகின்றன. மிகவும் குறிப்பாக பசு என்பது மகாலட்சுமியின் அம்சமாக வணங்கப்படுகிறது.

வீட்டு வாசலில் பசு அடிக்கடி தென்படுவது ஒரு மங்களகரமான சகுனமாகும். உங்கள் வீட்டு வாசலில் பசு நிற்கிறது என்றால் அது சாதாரண தற்செயல் நிகழ்வல்ல. உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டம் வந்து சேரப்போகிறது என்பதையே, பசுவின் வரவு உங்களுக்கு அறிவிக்கிறது. பசுவினை பார்த்துவிட்டு அன்றையநாள் தொடங்கினால், நாள் முழுக்க அதிர்ஷ்டம் உங்களை வந்து சேரும்.

பொதுவாகவே அனைத்து இடங்களிலும் பசுவின் நடமாட்டம் இருக்காது. துர்சக்திகளும், தூய்மையற்ற எண்ணங்களை கொண்டவர்கள் இருக்கும் இடங்களில் பசுவினால் இயல்பாக இருக்க இயலாது. அது உங்கள் வீட்டில் வாசலில் வந்து நின்றால், உங்கள் வீட்டில் கடவுளின் ஆசி நிரம்பியுள்ளது என்று அர்த்தம். நல்ல அதிர்வுகள் இருக்கும் இடங்களில் பசு விரும்பி வருகிறது.

இதையும் படியுங்கள்:
அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய தானங்களும்... அதன் அபூர்வ பலன்களும்!
spiritual-significance-

பசுவின் வருகை வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை விரட்டி விடுகிறது. மேலும் வாஸ்து சார்ந்த குறைபாடுகளையும் பசுவின் ஆசிர்வாதம் நீக்குகிறது. இதன் காரணமாகவே புதிதாக குடிபுகும் வீடுகளில் பசு மற்றும் கன்று ஆகியவற்றை வீட்டிற்குள்ளே அழைத்துச்சென்று அதன் ஆசிகளை பெறுகின்றனர். வீட்டிற்கு வரும் பசுவின் நிறத்தினை வைத்து உங்களுக்கு எந்த கிரகத்தின் ஆசிகள் கிடைக்கும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். சாதாரணமாகவே பசுக்களை வழிபடுவதும் அவற்றிற்கு உணவு அளிப்பதும் கிரக தோஷங்களை நீக்கும் நடவடிக்கையாக இருக்கிறது.

வெள்ளைப் பசு: வெள்ளை நிற பசு உங்கள் வீட்டு வாசலில் தென்பட்டால், அதனால் சந்திர பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் இது தரும்.

கருப்பு நிறப்பசு: கருப்பு நிற பசு வீட்டு வாசலுக்கு வந்தால் வீட்டில் உள்ள தீமைகள நீங்கள். சனீஸ்வர பகவானின் பூரண ஆசி கிடைக்கும். அவரது தீவிர பார்வையில் இருந்து விமோசனம் கிடைக்கும்.

வாசலில் பசுவைப் பார்த்தால் என்ன செய்யவேண்டும்?

பசுவினை விரட்டுவதோ, துன்புறுத்தவோ கூடாது. பசுவினை விரட்டுதல் அதிர்ஷ்டத்தை விரட்டுவதற்கு சமமாகும். முடிந்த அளவு பசுவிற்கு வீட்டு வாசலில் தண்ணீர் வைப்பது நல்ல பலன் தரும். அது இயலாவிட்டால் வாழைப்பழம், புல், ரொட்டி, பழங்கள், கீரைகள் போன்றவற்றை தரலாம். பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்களின் ஆசியையும், முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
சபரிமலையில் நாளை சித்திரை விஷூக்கனி தரிசனம்: தரிசன நேரம் இதோ!
spiritual-significance-

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பசு வாசலுக்கு வந்தால் அதற்கு அருகம்புல் அல்லது கீரைகளை கொடுத்து ஆசீர்வாதம் பெறுவது, வீட்டிற்கு மங்களகரமான அதிர்ஷ்டங்களை கொண்டுவரும். பசுவை வணங்குவது ஒரு ஆன்மீகச்செயல் மட்டுமல்லாமல், நமக்கு உணவளிக்கும் புனித விலங்கின்றி நன்றி தெரிவிக்கும் செயலும் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com