இறைவனை தரிசிப்பது எப்படி? கண்களை மூடி வணங்குவது சரியா?

temple-darshan-rituals
temple-darshan-rituals
Updated on

சில அதீத பக்தி உள்ளவர்கள் தங்களையும் அறியாமல் மூலவரை மனம் உவந்து வேண்டும்போது, இறைவன் கொடுத்த இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு கைகளைக் கூப்பி வணங்குவார்கள். அந்த வணங்குதல் மிகவும் தவறானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தீபாராதனை நடக்கும் போதும் அப்படியே இரு கண்களையும் மூடி பிரார்த்தனை செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். அதுவும் தவறு.

இப்படி செய்வதால் உங்களுக்கு மனதில் திருப்தி ஏற்படலாம். ஆனால் இப்படி செய்வது முற்றிலும் இறைவழிபாடு ஆகாது என்பதை உணருங்கள். உங்களுக்கு கிடைத்த அறிய வாய்பை இப்படி பிரார்த்தனை செய்வதை விட்டுவிட்டு, ஒவ்வொரு நொடியும் நீங்கள் மூலவரை பார்க்க நேரிடும் போதும் கண்களை மூடாமல், நன்றாக விழித்து இறைவனை இரண்டு கண்களாலும் மனம் உருக வேண்டுங்கள். இதுதான் இறை பக்தி செய்யும் முறை.

இறைவனை பரிபூரணமாக கண்டுகளியுங்கள். இறைவனுக்கு செய்திறுக்கும் அலங்காரத்தை பார்த்து ரசியுங்கள். ஆண்டவன் நமக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்று நினைத்து, இறைவன் அருள்பாலிக்கும் தோற்றத்தை, ஆண்டவன் கண்களில் ஒளிரும் சக்தியை மனதில் ஏற்றி, வழிபாடு செய்யுங்கள். உன்னுடைய கடைக்கண் பார்வை என்மீது விழுந்து எனக்கு அருள் புரியுங்கள் என்று வேண்டினேன் என்னும்  மனத்திருப்தியோடு வெளியே வாருங்கள்.

பிராகாரத்தில் நின்று கொண்டு. இறைவா இதுவரை நீதான் என்னை வாழ வைத்துகொண்டு இருக்கிறாய். இனிமேலும் என் வாழ்க்கைக்கு எது தேவை என்பதை கொடுத்து, தேவை இல்லாதவற்றை நீக்கிவிட்டு நிம்மதியாக இருக்கசெய்ய வேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
அம்பலப்புழா கிருஷ்ணன்: பக்தர்களின் குறையறுக்கும் ‘பால கோபாலன்’!
temple-darshan-rituals

மேலும் இறைவா... நீயே என் உள்ளத்திலும் இல்லத்திலுமாக இருந்து, அருள் புரியவேண்டும் என்பதன் மூலம் தன்னுடைய இல்லத்திலும் இறைவனை எழுந்தருள செய்யுங்கள்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் இல்லத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போதும், கோயிலில் பார்த்த இறைவன் திருவுவத்தை மனதில் நிறுத்தி, வழிபாடு செய்து, நற்பலன்களை அடையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் ஆத்மார்த்தமான தெய்வ வழிபாடு ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com