temple festivals in tamilnadu
temple festivals in tamilnadu

புண்ணிய தீர்த்தங்களும்... போக்கும் பாவங்களும்!

Published on

வ்வொரு கோயிலிலும் சில புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் நம் பாவங்கள் நீங்கும். அவை என்ன தீர்த்தங்கள் எனப் பார்ப்போம்.

பிரம்ம தீர்த்தம்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ளது சட்டநாதர் கோயில். இங்கு பிரதான தீர்த்தமாக விளங்குவது 'பிரம்மதீர்த்தம்' இங்கு சித்திர திருவிழாவை பிரம்ம தேவர் நடத்துவதாக ஐதீகம்..

இங்கு சித்திரை மாதம் நடைபெறும் தீர்த்தவாரித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சங்கு தீர்த்தம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ளது வேதகிரீஸ்வரர் ஆலயம். இங்கு இருக்கும் தீர்த்தம் 'சங்குத் தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு மார்க்கண்டேயன் வந்தபோது இறைவனுக்கு அபிஷேகம் செய்ய பாத்திரம் இல்லாததால் இறைவனின் அருளால் இந்த தீர்த்த குளத்தில் வலம்புரி சங்கு தோன்றியது. இந்த சங்கில் நீர் எடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். இதன் காரணமாகவே இந்த தீர்த்தம் 'சங்கு தீர்த்தம் |என்று அழைக்கப்படுகிறது.

ஞான தீர்த்தம்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகில் உள்ளது தென்சேரி என்னும் செஞ்சேரி. இங்குள்ள மந்திரகிரி முருகன் ஆலயத்தில் உள்ள தீர்த்தம் ஞானத் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஈசனிடம் முருகப்பெருமான் உபதேசம் பெற்ற தலமாகும்.

தென்சேரி மலையைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்து ஈசனிடம் உபதேசம் பெற்றார்.இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடினால் வாழ்வில் வரும் இன்னல்கள் அனைத்தும் நீங்கும்.

நாழிக்கிணறு தீர்த்தம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அமைந்துள்ளது நாழிக்கிணறு தீர்த்தம். முருகப்பெருமான் தன் வேலினால் ஏற்படுத்திய தீர்த்தமே நாழிக்கிணறு. அள்ள அள்ளக்குறையாத அட்சய பாத்திரம் போன்றது இந்த தீர்த்தம். இது எந்தக் காலத்திலும் நீர் வற்றியது இல்லை. இதில் நீராடினால் உடல் ஆரோக்கியம் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரே இடத்தில் ஐந்து திவ்யதேசங்கள்: அவனியாபுரம் பஞ்ச திருப்பதி!
temple festivals in tamilnadu

சர்வதீர்த்தம்

காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகில் இருக்கிறது. இங்கு உள்ளது சர்வ தீர்த்தம். அம்பிகை மணலில் சிவலிங்கம் செய்ய வழிபட்டபோது அவரை சோதித்த சிவபெருமான் அனைத்து நதிகளையும் காஞ்சியில் வெள்ளமாக பெருக்கெடுக்கச் செய்தார் இதனால் பயம் கொண்ட அம்பிகை லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார். இதனால் நதிகள் வருத்தமடைந்து சர்வதீர்த்தங்களாக சரணடைந்தன. உடனே ஈசன் இங்கேயே சர்வதீர்த்தம் பெயருடன் திகழுங்கள் என்றார். இங்கு நீராடி தர்ப்பணம் செய்தால் சகல பாவங்கள் நீங்கி முக்தியும் பெறுவார்கள் என்று அருள்புரிந்தார்.

கல்யாண தீர்த்தம்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாச சுவாமி கோவில் உள்ளது . இங்குகல்யாண தீர்த்தம் அமைந்துள்ளது. கயிலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடைபெற்ற சமயம் முப்பத்து முக்கோடி தேவர்கள் வடப்பகுதிக்கு சென்றதால் அது தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்துவிட்டது. அகத்திய முனிவர் தென்பகுதிக்கு வந்து பூமியின் பாரத்தை சமநிலைக்கு கொண்டு வந்ததால், அகத்தியர் கேட்டுக்கொண்டபடி இந்தலத்தில் இறைவன் அம்மையப்பராக கல்யாண கோலத்தில் திருக்காட்சி தந்தார். அகத்தியருக்கு ஈசன் திருமண கோலத்தில் காட்சி தந்ததால் இந்த தீர்த்தம் கல்யாண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஆதிதீர்த்தம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்திருக்கும் பொற்றாமரைக்குளம்தான் ஞானதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்திரன், தேவர்கள் முதலானவர்கள் இக்குளத்திலிருந்து பொன் மலர்களைப் பறித்து சொக்கநாத பெருமானை வழிபாடு செய்ததால் இத்தீர்த்த குளம் பொற்றாமரைக் குளம் என்று பெயர்.

கங்கை முதலான புண்ணிய நதிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய தீர்த்தம் என்பதால் இது ஆதி தீர்த்தம் என்றும் ஞானத் தீர்த்தம் போன்ற பெயர்களும் உண்டு முக்திவேண்டி தவம் இருந்த நாரைக்கு முக்தி அருளியதால் இக்குளத்துக்குமுக்தி தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இதில் நீராட முடியாது. தெளித்துக் கொள்ளலாம்.

சிம்மக்குள தீர்த்தம்

வேலூர் விரிஞ்சிபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடனுறை மார்க்க பந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குள் அமையப் பெற்றுள்ளது சிம்பு தீர்த்தம். மிகவும் விசேஷமானது. இந்த சிம்ம தீர்த்தக்குளத்தில் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிறு பெண்கள் நீராடி ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
இறைவனோடு இணையும் இனிய பயணம்: பக்தி மார்க்கம்!
temple festivals in tamilnadu

மூன்று புனித தீர்த்தம்

கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள புகழ்பெற்ற மூன்று முக்கிய புனித தீர்த்தங்கள் உள்ளது. அவை மருத தீர்த்தம், கன்னி தீர்த்தம், கந்த தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தங்கள் மலையில் இருந்து வந்து ஊற்று நீராகக் கசிந்து மருத்துவகுணங்கள் நிறைந்தவையாக கருதப்படுகின்றன.

இதைத் தவிர கோவிலில் பிரம்ம தீர்த்தம், சிவன் தீர்த்தம் அக்னி தீர்த்தம் கொண்ட பல தீர்த்தங்களை கொண்டுள்ளது. பக்தர்கள் இந்த தீர்த்தங்களில் நீராடுவதால் ஆரோக்கியம் மற்றும் செல்வ செழிப்பு கிடைக்கும்.

ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தமும், கோயிலின் உள்ளே 22 தீர்த்தங்களும், கும்பகோணம் மகாமக குளம் தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கும்.

logo
Kalki Online
kalkionline.com