கோயில் தூண்களை ஏன் தொடவேண்டும்? ஒளிந்திருக்கும் அறிவியலும் ஆன்மீக ரகசியங்களும்!


Temple pillars
Temple pillars
Published on

ழமையான இந்து வழிபாட்டுத் தலங்களில் நாம் நுழைந்ததும் தூண்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து அங்குள்ள தெய்வங்களை வழிபடுவது உண்டு. அவற்றை நாம் வெறும் கட்டிட அமைப்புகளாக மட்டும் பார்ப்பதில்லை. ஒவ்வொன்றையும் ஒரு கலைப் பெட்டகம் மற்றும் ஆன்மீக குறியீடாகத்தான் பார்க்கிறோம். அப்படி பார்ப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.

தூண்களின் முக்கியத்துவம் - Architectural & Spiritual:

பண்டைய காலத்தில் தூண்கள் வெறும் தாங்கு திறனுக்காக ( Load bearing) மட்டும் அமைக்கப்படவில்லை. அவை 'பிரம்ம தாளம்' எனப்படும் தத்துவத்தின்படி அமைக்கப்பட்டன.

மண்டபங்கள்: ஆயிரம் கால் மண்டபம் போன்றவற்றினை பார்க்கும்போது தூண்கள் பல மண்டபவங்களின் அடித்தளமாக விளங்குவதை உணரலாம்.

தவத்தின் குறியீடு:

தூண்கள் மரம் அல்லது கல்லால் ஆனவை என்றாலும், அவை வானுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பைக் குறிக்கின்றன.

தூண்களில் இடம்பெறும் தெய்வங்கள்:

தூண்களில் தெய்வங்கள் செதுக்கப்படுவதன் காரணம் வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு தூணையும் வணங்கும்போது, அவர் அறியாமலேயே பல தெய்வங்களின் ஆசியைப் பெறவேண்டும் என்பதற்காகவும்தான்.

யாளி தூண்கள்:

பெரும்பாலும் மண்டபங்களின் நுழைவாயில் அல்லது முன் பகுதியில் காணப்படும். இவை வீரம் மற்றும் பாதுகாப்பின் குறியீடு என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

நரசிம்மர்:

தூண் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்திதான். பக்த பிரகலாதனுக்காக துணைப் பிளந்து வந்ததால் தூணில் இறைவனின் சாந்நித்தியம் இருப்பதாக ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
யுகாதி முதல் குடி பாட்வா வரை: வசந்த காலத்தை வரவேற்கும் இந்தியாவின் புத்தாண்டு விழாக்கள்!

Temple pillars

வீரபத்திரர் மற்றும் சிவ வடிவங்கள்:

பல சிவன் கோவில்களின் தூண்களில் சிவனின் உக்கர வடிவங்கள் அல்லது நடனமாடும் கோலங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

சப்த கன்னியர் மற்றும் தேவதைகள்:

தூணின் ஓரங்களில் இசை கலைஞர்கள், நடன மங்கைகள், மற்றும் தெய்வீகப் பெண்களின் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கும். இவை இறைவனது சபையை அலங்கரிக்கும் தேவதைகளைக் குறிக்கும்.

அவதாரக் காட்சிகள்:

தசாவதாரம் அல்லது புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் தூண்களில் இருக்கும். இதை 'கல்லில் வடித்த காவியம்' என்று கூறுவார்கள்.

தூண் வழிபாட்டு முறை:

பக்தர்கள் கோயிலை வலம் வரும்போது தூண்களையும் தொட்டு வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்பொழுதும் அதைத் தொடர்கிறார்கள். அதற்கு காரணம் தூண்கள் ஆற்றலை தன்னுள் ஈர்க்கும் தன்மைகொண்டவை என்று கருதப்பட்டதுதான். தூணில் உள்ள சிற்பங்களை சுற்றி கயிறு கட்டியோ அல்லது சந்தனம், குங்குமம் வைத்து வழிபடும் மரபு இன்றும் பல இடங்களில் உள்ளது கண்கூடு.

தூண்களைச் சிற்பங்கள் அலங்கரிக்கக் காரணம் என்ன?

கோயிலுக்கு வரும் சாமானிய மனிதன் மூலவரை தரிசிப்பதற்கு முன்னரே அந்த தூண்களில் உள்ள கலைநயத்தைப் பார்த்து இறைவனின் பெருமைகளை உணரவேண்டும் என்பதற்காகவே இப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வகையான காட்சி வழி கல்வி விஷுவல் எஜுகேஷன் ஆகும். சுருக்கமாக சொன்னால் தூண்கள் என்பதே இறைவனின் பிரபஞ்ச தன்மையையும், கலையின் நுணுக்கத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் ஊடகங்கள் என்று கூறலாம்.

இதையும் படியுங்கள்:
சனிக்கிழமை – பெருமாளுக்கு உகந்த நாள் ஏன் தெரியுமா?

Temple pillars

இப்படி ஆலயத்தூண்கள் பல்வேறு விஷயங்களை தன்னுள் பொதிந்து வைத்திருப்பதால், ஆலயங்களில் உள்ள தூண்களை வழிபடுவது நமக்கு முக்கியமாக கற்றுத் தரப்பட்டிருக்கிறது. இனி ஆலயம் செல்வோர் தூணுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வழிபாட்டைத் தொடரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com