ஹிந்து சாஸ்திரங்கள் கூறும் நெறிகள் : ஒன்று முதல் பத்து வரை!

ஹிந்து சாஸ்திரம்
ஹிந்து சாஸ்திரம்
Published on

1. ஒன்று - சொர்க்கத்திற்கு வழி!

*சொர்க்கம் அடைய ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.

சொர்க்கத்திற்கு – சத்தியத்தின் மூலமாகவே செல்ல முடியும்.

2. இரண்டு

*இரண்டு விதமான சிகிச்சைகள் உண்டு.

1. மானஸா – உளவியல் ரீதியான சிகிச்சை

2. ஔஷதி – மருந்துகள் மூலமாக உள்ள சிகிச்சை

*மனதை நசிக்க இரண்டு வழிகள் மட்டுமே உண்டு.

1. யோகா

2. விவேகம்

இந்த இரண்டு வழிகள் மூலம் மட்டுமே மனதை நசிக்க வைக்க முடியும்.

*அறிவு இரண்டு வகை.

1. ஸ்மிருதி – ஆய்ந்து பார்த்தல்

2. அனுபவம் – அனுபவத்தில் உணர்தல்

3. மூன்று

*ஆரோக்கியமாக இருக்க மூன்று வழிகள் உண்டு.

1. உணவின் முடிவில் மோர் அருந்துவது

2. இரவில் பால் அருந்துவது

3. அதிகாலையில் நீர் அருந்துவது

*சீக்கிரமாக அழியக் கூடியவை மூன்று

1. இளமை

2. செல்வம்

3. வாழ்க்கை

*மூன்று கிடைப்பது கஷ்டம்

1. மனிதப் பிறவி

2. முக்தி அடைய ஆசை

3. பெரிய மனிதர்களின் சகவாசம்

*அரிதான மூன்று வகை மனிதர்கள்.

1) வளமான வாழ்க்கை கொண்டபோதும் யாராலும் நிந்திக்கப்படாத மனிதர்கள்

2) வீரனாக இருந்தாலும் எளிமையாக இருப்பவர்கள்

3) அரசனாக இருந்த போதிலும் நடுநிலைமையுடன் இருப்பவர்கள்

4. நான்கு -

*நன்கு செயலாற்ற தேவையான குணாதிசயங்கள்

1. ஸ்மிருதி - அருமையான நினைவாற்றல்

2. த்ருதி – உறுதி

3. மதி – மன ஆற்றல்

4. தாக்ஷ்யம் – திறமை

*ஒரு மனிதனை எடை போடுவதற்கு எப்படி?

1. ஸ்ருதம் – அறிவாற்றல் மூலமாக

2. சீலம் – ஒழுக்கம்

3. குலம் – பரம்பரை குலம்

4. கர்மணா – செயல் மூலம்

*அருமையானவை என்று புகழப்படுவது எப்போது?

1. ஜீரணம் அன்னம் – சாப்பிட்ட உணவு நன்கு செரிப்பது

2. கதயௌவன பார்யா – இளமை கழிந்த மனைவி

3. விஜித சங்ராம சூரா – போரில் வெற்றி பெற்ற வீரன்

4. கதாபார தபஸ்வி – வாழ்க்கையில் இலட்சியத்தை அடைந்த தபஸ்வி

5. ஐந்து

*நல்ல மனைவியின் குணாதிசயங்கள்

1. அனுகூலாம் – அனுகூலமாக இருப்பவள்

2. விமலாங்கி – கறைபடியாதவள்

3. குலஜா – நல்ல குலத்தில் பிறந்தவள்

4. குசலா – திறமையானவள்

5. சுசீலா – நல் நடத்தையுள்ளவல்

*எழுதுவதில் குறைகள் ஐந்து விதம்

1. அகாந்தி – புரியாதபடி எழுதுவது

2. வ்யார்காத: – மாறுபட்டு எழுதுவது

3. புனருக்தம் – எழுதியதையே திருப்பி எழுதுவது

4. அப சப்தம் – இலக்கணமற்ற பிரயோகம்

5. சம்ப்லவம் – சீரற்ற வார்த்தை அமைப்பு

6. ஆறு - செல்வம் சேர நீங்கள்

1. நல்ல மனிதராக இருக்க வேண்டும்.

2. சாகஸம் புரிபவராக இருக்க வேண்டும்.

3. தைரியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

4. வலிமை உள்ளவராக இருக்க வேண்டும்.

5. அறிவுள்ளவராக இருக்க வேண்டும்.

6. வீரனாக இருக்க வேண்டும்.

7. ஏழு - ஏழு நல்ல விஷயங்கள்

1. செல்வம்

2. அறிவு

3. சத்தியம்

4. வாரிசு

5. மகான்களின் ஆசீர்வாதம்

6. உயிருடன் இருப்பது

7. நல்ல செயல்களைச் செய்திருப்பது

8. எட்டு - எட்டு இன்பங்கள்

1. நல்ல வாசனை

2. பெண்

3. ஆடை

4. இசை

5. தாம்பூலம்

6. உணவு

7. அலங்கார ஆபரணங்கள்

8. கோவில்

இதையும் படியுங்கள்:
காலையில் எழுந்ததும் எதை பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?
ஹிந்து சாஸ்திரம்

9. ஒன்பது - ஒரு செயலுக்கு சாட்சிபூதமாக இருப்பவர்கள்

1. சூரியன்

2. சந்திரன்

3. யமன்

4. காலம்

5 முதல் 9 : ஐந்து பூதங்கள் எனப்படும் நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம்

இதையும் படியுங்கள்:
அனுமனுக்கு சாத்தப்படும் வெற்றிலை மாலையின் மகிமை தெரியுமா?
ஹிந்து சாஸ்திரம்

10. பத்து - நல்ல குணங்கள் பத்து

1. பொறுமை

2. சத்தியம்

3. எளிமை

4. நேர்மை

5. திருப்தி

6. தன்னடக்கம்

7. தூய்மை

8. துறவு

9. உடைமைப்பொருள் இல்லாதிருத்தல்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com